Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தாமரைக்கு வாக்களிக்காவிட்டால் மகா பாவம் வந்து சேரும்...சாபம் விடும் எச். ராஜா

தாமரைக்கு வாக்களிக்காமல் வேறு யாருக்காவது வாக்களித்தீர்கள் என்றால் மகா பாவம் என நான் சொல்லவில்லை திருவள்ளுவர் சொல்லி உள்ளதாக பாஜகவின் எச். ராஜா கூறியுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

திருச்சி: கொரோனா பரவலால் வீட்டிலேயே முடங்கி இருந்தோம் தடுப்பூசி மூலம் நம்மை காப்பாற்றியவர் பிரதமர் மோடி அவருக்கு நன்றி தெரிவிக்க தாமரை சின்னத்தில் வாக்களியுங்கள் எனக் கேட்டுக் கொண்டார். தாமரைக்கு வாக்களிக்காமல் வேறு யாருக்காவது வாக்களித்தீர்கள் என்றால் மகா பாவம் என நான் சொல்லவில்லை திருவள்ளுவர் சொல்லி உள்ளதாக பாஜகவின் எச். ராஜா கூறியுள்ளார்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ளதால் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் அனல் பறந்தது. நேற்று மாலை திருச்சி மாநகராட்சி ஸ்ரீரங்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள வார்டுகளில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் போட்டியிடும் 7 வேட்பாளர்களை ஆதரித்து பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் எச் ராஜா இன்று காலை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் முன்பாக பேசிய எச்.ராஜா, திமுக ஆட்சி காலத்தில் ரவுடித்தனம் செய்தார்கள் கோவில்களை இடிக்கிறார்கள் என அதிமுகவிற்கு மக்கள் வாக்களித்தனர் அதிமுக எப்பவுமே வாயை மூடிக் கொண்டு இருப்பதால் மீண்டும் திமுகவிற்கு வாக்கு அளித்தார்கள் கடந்த 55வருடங்களாக இப்படி மாறி மாறி இவர்கள் ஆட்சி செய்து உள்ளார்கள், தர்மத்தைக் காக்க இந்த முறை பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள் என பேசினார்.

தீய சக்திகள்

தீய சக்திகள்

இந்துக்களுக்கு எதிரான அரசாக திமுக அரசு செயல்படுகிறது, தமிழக அரசின் நிர்வாகம் முழுவதும் மதமாற்றம் நபர்களின் கட்டுப்பாட்டில் உள்ளதால் இந்துக் கோயில்கள் அனைத்தும் இடிக்க படுவதாக குற்றம் சாட்டினார்,
67இல் இருந்து வந்த தீயசக்திகள் இந்துக்களுக்கு மட்டுமே எதிராக செயல்படுகிறது ஆயிரத்திற்கும் மேற்பட்ட சர்ச்சுகள் மசூதிகள் நீர்நிலைகளில் உள்ளது அதை முடிந்தால் அப்புறப்படுத்தவும் என கடுமையான வார்த்தைகள் மூலம் பேசினார்.

விளையாடாதீர்கள்

விளையாடாதீர்கள்

இந்துக்களின் உணர்வுகளோடு விளையாடாதீர்கள் வெறும் இரண்டரை சதவீதம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று உள்ளீர்கள் தூக்கி எரிய வெகு நாள் ஆகாது என எச்சரித்தார், குடும்பத் தலைவிக்கு மாதம் ஆயிரம் ரூபாய் என்பது மக்களை ஏமாற்றும் செயல் மக்கள் ஏமாற மாட்டார்கள். கடந்த சட்டமன்ற தேர்தலின் போது உதயநிதி ஸ்டாலின் மக்களிடம் பிரச்சாரம் செய்யும் போது திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நகை கடன் தள்ளுபடி என்று சொன்னார்கள் அதை நம்பி வைத்தவர்கள் தற்பொழுது ஏமாந்து வட்டி கட்டி வருகிறார்கள்.

ஊழலும் திமுகவும்

ஊழலும் திமுகவும்

திமுக அரசை இனி மனநலம் குன்றிய அரசு என்று அழையுங்கள். நீங்கள் ஒன்றிய அரசு என்று சொல்லும் பொழுது நாங்கள் மனநலம் குன்றிய அரசு என்று சமூக வலைத்தளங்களில் பதிவு செய்யுங்கள் என கேட்டுக்கொண்டார். ஊழலும் திமுகவும் ஒட்டி பிறந்த இரட்டை குழந்தைகள் அதிலிருந்து அவர்களை பிரிக்க முடியாது என்ற அவர், பொங்கல் தொகுப்பு குறித்து கடுமையாக விமர்சனம் செய்தார்.

 தாமரைக்கு வாக்களியுங்கள்

தாமரைக்கு வாக்களியுங்கள்

1500 கோடியில் 500 கோடி ரூபாய் கொள்ளையடித்து உள்ளார்கள் 10 வருடங்களாக ஆட்சியில் இல்லாத காரணத்தினால் தற்பொழுது ஆட்சிக்கு வந்தவுடன் கொள்ளையடித்து வருகிறார்கள் என மிகுந்த ஆவேசத்துடன் பேசினார். மேலும் 27 மாதங்களாக கொரோனா பரவலால் வீட்டிலேயே முடங்கி இருந்தோம் தடுப்பூசி மூலம் நம்மை காப்பாற்றியவர் பிரதமர் மோடி அவருக்கு நன்றி தெரிவிக்க தாமரை சின்னத்தில் வாக்களியுங்கள் எனக் கேட்டுக் கொண்டார்.

மகா பாவம்

மகா பாவம்

தாமரைக்கு வாக்களிக்காமல் வேறு யாருக்காவது வாக்களித்தீர்கள் என்றால் மகா பாவம் என நான் சொல்லவில்லை திருவள்ளுவர் சொல்லி உள்ளார் என எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்நன்றி கொன்ற மகற்கு என திருக்குறளை சொல்லி நகைச்சுவையாக வாக்கு சேகரித்தார். மோடி அவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும் என்றால் தேங்க்யூ மோடி தேங்க்யூ மோடி என சொல்லிக்கொண்டே தாமரை சின்னத்திற்கு வாக்களியுங்கள் மோடிக்கு போய் சேரும் என பேசினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+