"ஆணவம் தான் உங்களை அழிக்கும்.." திடீரென பாஜக நிர்மலா சீதாராமனை விளாசிய ஸ்டாலின்.. என்ன நடந்தது
திருச்சி: லோக்சபா தேர்தல் பிரச்சாரத்தைத் திருச்சியில் தொடங்கியுள்ள முதல்வர் ஸ்டாலின், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை மிக கடுமையாக விமர்சித்துப் பேசினார்.
லோக்சபா தேர்தல் தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறுகிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இங்கே திமுக கூட்டணிக்கும் அதிமுக கூட்டணிக்கும் இடையே தான் நேரடி போட்டி நிலவுகிறது.

திமுக தான் தமிழகத்தில் முதல் கட்சியாகத் தொகுதிப் பங்கீட்டு, வேட்பாளர் தேர்வை முடித்து பிரச்சாரத்தையும் ஆரம்பித்துவிட்டது. முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் திருச்சியில் இன்று தனது பிரச்சாரத்தைத் தொடங்கினார்.
சர்ச்சை: அப்போது அவர் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் பேச்சுக்கு கடும் எதிர்வினையாற்றினார். சில நாட்களுக்கு முன்பு நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நிர்மலா சீதாராமன், "எப்போதும் இன்னொருவர் போட்ட பிச்சையில் நாம் வாழத் தேவையில்லை.. வெள்ளமா இந்தா ஆயிரம் ரூபாய் எடுத்துக்கோ.. வீடு இடிந்து விழுந்துபோச்சா இந்த 500 ரூபாய் எடுத்துக்கோ.. என்று மக்களை டீல் செய்கின்றன" என்று கூறியிருந்தார்.
ஸ்டாலின் பதிலடி: அவரது பேச்சுக்குப் பலரும் கண்டனம் தெரிவித்த நிலையில், முதல்வர் ஸ்டாலினும் அவரது பேச்சைச் சாடியுள்ளார். திருச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், " தமிழ் மீதும் தமிழ்நாடு மீதும் தமிழர்கள் மீதும் உங்களுக்கு என்ன அவ்வளவு வெறுப்பு.. தமிழர்களுக்கு எதிராக அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துவிட்டு.. தமிழ் தான் மூத்த மொழி என்று நீலிக்கண்ணீர் வடிக்கலாமா.
சமஸ்கிருத வளர்ச்சிக்கு நீங்கள் கொடுத்த நிதி எவ்வளவு.. தமிழ் வளர்ச்சிக்கு நீங்கள் கொடுத்த நிதி எவ்வளவு. இதை வந்த பிரதமரால் இங்கே சொல்ல முடியுமா. நீங்கள் பரப்பும் வெறுப்பு தீ என்ன செய்கிறது தெரியுமா.. மத்திய அமைச்சர் ஒருவர் பெங்களூரில் வைத்த வெடிகுண்டு தமிழர்கள் வைத்தது என்கிறார். தமிழர்கள் என்ன வன்முறையாளர்களா.. பயங்கரவாதிகளா.. தமிழ்நாடு மக்களை இப்படியெல்லாம் கொச்சைப்படுத்திப் பேசுகிறார்களே.. பாஜக அரசு மக்களிடம் இருந்து சுரண்டுமே தவிர எதையும் தராது.
பிச்சை எனச் சொல்லலாமா: மக்கள் இயற்கை பேரிடர்களில் பாதிக்கப்படும் போது, நமது நிதியில் இருந்து நாம் நிவாரணம் தருகிறோம். அதையும் கூட மனசாட்சியே இல்லாமல் கொச்சைப்படுத்தி, அதில் ஆனந்தம் அடைவது என்ன மாதிரியான அரசியல்.. தமிழ்நாட்டில் இருந்து ஏகப்பட்ட தொகையை வசூல் செய்கிறீர்கள். ஆனால், அதில் தமிழகத்திற்குக் கிடைக்கும் நியாயமான பங்கை ஏன் தர மறுக்கிறீர்கள். அதைத் தான் கேட்கிறோம்.
‛தூக்கம் போனது எங்களுக்கு இல்லை உங்களுக்கு’.. மோடியின் கண்களை பாருங்க! திருச்சியில் விளாசிய ஸ்டாலின்
ஒரு ரூபாய் வாங்கிவிட்டு 29 பைசா திரும்ப வழங்குவது நியாயமா என கேட்கிறோம். அதற்கு ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மக்களுக்கு நிதியுதவி வழங்குவது பிச்சை என ஆணவமாகச் சொல்கிறார். என்ன வாய்க்கொழுப்பு.. உங்கள் அரசியலுக்காகத் தமிழக மக்களைக் கொச்சைப்படுத்துவீர்களா.. பாதிக்கப்பட்ட மக்களை அவமானப்படுத்துவீர்களா.. மக்களுக்குக் கொடுக்கும் எதுவும் பிச்சை இல்லை. அது அவர்களின் உரிமை. பேரிடர்கள் காலங்களில் அவர்களுக்கு உதவ வேண்டியது அரசின் கடமை. அதை திமுக அரசு சரியாகச் செய்து வருகிறது.
சொல்ல முடியுமா: காப்ரேட் நிறுவனங்களுக்குப் பல ஆயிரம் கோடி ரூபாய் தள்ளுபடி செய்கிறார்கள். அங்கே போய் இதுபோல பேசுவீர்களா.. ஏழைகள் என்றால் உங்களுக்கு அவ்வளவு இளக்காரமா.. ஒரு ரூபாய்க்குப் பொருள் வாங்கினாலும் அதில் மக்கள் வரி கட்டுகிறார்கள். அப்படி இருக்கும் போது பேரிடர் காலங்களில் அரசு உதவ வேண்டும் என்று மக்கள் நினைப்பார்கள். மக்களுக்கு உதவ முடியவில்லை என்றால் உங்களுக்கு எதற்கு நிதியமைச்சர் பதவி. இந்த ஆணவம் தான் பாஜகவை அழிக்கப் போகிறது" என்று சாடியுள்ளார்.
-
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications