திருச்சியில் இருந்து சிங்கப்பூா் புறப்பட்ட பயணிகள் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு
திருச்சி: திருச்சியில் இருந்து நேற்று மாலை சிங்கப்பூா் புறப்பட்ட ஏா் இந்தியா விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதனால் 153 பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
திருச்சி விமானநிலையத்திலிருந்து 153 பயணிகளுடன் மாலை 4.20 மணிக்கு ஏா் இந்தியா விமானம் புறப்படத் தயாரானது. ஓடுதள பாதைக்கு விமானத்தை விமானி இயக்கிய போது, என்ஜின் பகுதியில் தொழில்நுட்பக் கோளாறு இருப்பதைக் கண்டறிந்தாா்.

இதையடுத்து விமானநிலையக் கட்டுப்பாட்டு அறை, ஏா்லைன்ஸ் அலுவலா்களுக்கு விமானி தகவல் தெரிவித்து விட்டு, விமானத்தை மீண்டும் ஏரோ பிரிட்ஜ் பகுதியில் நிறுத்தினாா். உடனடியாக வந்த தொழில்நுட்பப் பொறியாளா்கள் குழு, கோளாறை சரி செய்ய முயன்றும் முடியவில்லை. இதையடுத்து பயணிகள் அனைவரும் விமானத்திலிருந்து இறக்கி விடப்பட்டனா்.அப்போது சில பயணிகள் தங்களுக்கு தேவையான வசதிகளை செய்து தர வலியுறுத்தி அலுவலா்களிடம் வாக்குவாதம் செய்தனா்.
சில பயணிகள் தங்களது பயணத்தை ரத்து செய்துவிட்டு, மாற்று தேதிகளில் முன்பதிவு செய்தனா்.விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு சரி செய்யப்பட்ட நிலையில், குறைவான பயணிகளுடன் 4 மணி நேர தாமதத்துக்குப் பின்னா் இரவு 8.30 மணிக்கு விமானம் சிங்கப்பூா் புறப்பட்டுச் சென்றது.












Click it and Unblock the Notifications