முதலமைச்சர் ஸ்டாலின் பயணித்த பென்ஸ் வேன் திடீர் பஞ்சர்! லேண்ட்க்ரூஸர் காரில் மாறி ஏறி தஞ்சை பயணம்!
திருச்சி: திருச்சியிலிருந்து தஞ்சை செல்லும் வழியில் முதலமைச்சர் ஸ்டாலின் பயணித்த பென்ஸ் வேன் திடீர் பஞ்சரானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து நொடிப்பொழுதும் தாமதிக்காமல் கான்வாயில் அணிவகுத்துக் வந்து கொண்டிருந்த அமைச்சர் நேருவுக்கு சொந்தமான லேண்ட்க்ரூஸர் காரில் மாறி ஏறி உடனடியாக தஞ்சைக்கு புறப்பட்டுச் சென்றார் முதலமைச்சர் ஸ்டாலின்.

திருச்சி மற்றும் தஞ்சை மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக சென்னையிலிருந்து நேற்று காலை விமானம் மூலம் திருச்சி வந்தடைந்தார் முதல்வர் ஸ்டாலின். முன்னதாக விமான நிலையத்திற்கு வந்து தயாராக நின்று கொண்டிருந்த தாம் எப்போதும் பயணிக்கும் பென்ஸ் வேனில் ஏறி திருச்சியில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொண்டார்.
இந்நிலையில் இன்று தஞ்சாவூரில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்காக திருச்சியிருந்து தனது பென்ஸ் வேனில் பயணித்துக் கொண்டிருந்தார் ஸ்டாலின்ந்திருச்சி புறநகரான துவாக்குடியை கடந்ததும் முதலமைச்சரின் வேன் சீறத் தொடங்கியது. அப்போது பின்பக்கம் வலது புறம் உள்ள டயரில் லேசாக அலசல் இருந்ததால் உடனடியாக ஓட்டுநர் சுதாரித்து வேனை நிறுத்தி இறங்கிப் பார்த்திருக்கிறார்.
அப்போது டயர் பஞ்சரானது கண்டறியப்பட்டது. நல்வாய்ப்பாக அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்ட நிலையில், உடனடியாக லேண்ட் க்ரூஸர் காரில் தஞ்சை புறப்பட்டுச் சென்றார் முதல்வர். இதனிடையே அரை மணி நேரத்தில் மாற்று டயர் பொருத்தப்பட்டு முதலமைச்சரின் பென்ஸ் வேன் தஞ்சை கிளம்பி சென்றது.












Click it and Unblock the Notifications