திருமாவளவன் குறித்து அண்ணாமலை இப்படி சொல்லிட்டாரே.. அதிமுகவை குறித்து அழுத்தி சொன்னது ஹைலைட்
2024ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் அவரது தொகுதியிலேயே திருமாவளவன் டெபாசிட் கூட வாங்க முடியாது என்று அண்ணாமலை தெரிவித்தார்.
திருச்சி: 2024ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் அவரது தொகுதியிலேயே திருமாவளவன் டெபாசிட் கூட வாங்க முடியாது என்று அண்ணாமலை தெரிவித்தார். அத்துடன் அதிமுக தலைவர்களை சேர்த்து வைப்பது தங்கள் வேலையில்லை என்றும் கூறினார்.
திருச்சியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்கள் சந்தித்து பேசினார்.அப்போது அவர் கூறும் போது, இந்தகட்சியும், இந்த கட்சியும் இருந்தால் கூட்டணியில் நாங்கள் இருக்க மாட்டோம் என திருமாவளவன் இந்த வார்த்தை ஏன் சொன்னார்? நான் திமுக கூட்டணியில் ஸ்ட்ராங்காக இருக்கேன்.
திமுக கூட்டணிக்கு மரியாதை கொடுக்குது.. பிளாஸ்டிக் சேர்ல உட்கார வைக்கல. சமூக நீதி இருக்கு. சரிசமமாக திமுக நடத்துது, திமுக பேசிய சமூக நதி, அவர்களின் வாயில் இருக்கிறது என திருமாவளவன் நினைச்சாங்கன்னா, ஏன் அந்த வார்த்தையை பயன்படுத்தனும்.. எனவே மக்கள் யாரும் ஏமாளிகள் கிடையாது. திமுகவில் சமூக நீதி இல்லை, சம நீதி இல்லை, ஆனால் திருமாவளனுக்கு என்ன? இந்த மாதிரி பேசி பேரத்தை அதிகப்படுத்திக் கொள்ளலாம். லோக்சபா தேர்தலில் 2 எம்பிக்கு பதிலாக 3 எம்பிக்களை அதிகப்படுத்தலாம் என்று நினைத்திருப்பார். அவர் ஒரு தேர்ந்த அரசியல்வாதி..

தடா பெரியசாமி
திருமாவளவன் அவர்களின் கண்முன்னாலேயே விசிகவின் கோட்டையாக சொல்லப்படும் கடலூர் மாவட்டத்திலேயே பாஜக நன்றாக வளர்ந்து வருகிறது. 2024ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் அவரது தொகுதியில் திருமாவளவன் டெபாசிட் கூட வாங்க முடியாது. பாரதிய ஜனதா கட்சி பக்கம் வரக்கூடிய பட்டியலின சகோதரர்கள், அவர்கள் பாரதிய ஜனதா கட்சியில் சமூக நீதியை பார்ப்பார்கள். கடலூரில் எங்கள் கூட்டணி சார்பில் வலுவான வேட்பாளர் வருவார்கள். தடா பெரியசாமி அண்ணன், கொள்கை ரீதியாக திருமாவளவனை எதிர்க்கிறார். அதனால் தான் அவர் மீது தாக்குதல் நடந்தது. எல்லா பக்கமும் பாஜக வளர்ந்துள்ளது. அதனால் தான் ஒரு வாரமாக திருமாவளவன் இப்படி பிதற்றிக் கொண்டிருக்கிறார்.

அதிமுக
கூட்டணிக் கட்சி விவகாரத்தில் பாஜக தலையிடுவதாக திருமாவளவன் சொல்வது முற்றிலும் தவறானது. பிற கட்சி விவகாரங்களில் பாஜக எப்போதும் தலையிட்டது கிடையாது. நான் பாஜக தலைவனாக வந்த பின்னர் ஒரு போதும் எங்கள் கட்சி பிற கட்சியில் தலையிடாது. அதிமுகவில் தலையிடுவதாக சொல்கிறார்கள்.

எங்கள் கண்டிசன்
அதிமுகவில் யாரையும் சேர்த்து வைப்பது எங்கள் வேலை கிடையாது. அதிமுகவில் யார் வர வேண்டும் என்று அதிமுக தொண்டர்கள் தான் முடிவு செய்கிறார்கள். பிரதமர் நரேந்திர மோடியை தங்களுடைய தலைவராக யாரெல்லாம் ஏற்றுக்கொண்டார்ளோ அவர்கள் எல்லாம் நம் கூட்டணியில் இருக்கிறார்கள். யாரெல்லாம் ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறார்களோ அவர்களும் கூட்டணியில் இணையலாம். பிரதமர் மோடியை தலைவராக ஏற்றுக்கொள்பவர்கள் தாராளமாக எங்கள் கூட்டணியில் இணையலாம். அதை தவிர எந்த கண்டிசனும் இல்லை.

பாஜகவிற்கு வந்தால்
திமுக கூட்டணியை விட்டு வெளியே வர வேண்டும் என்று ஏற்கனவே திருமாவளவன் முடிவு செய்துவிட்டார். அவர் தைரியமாக வெளியே வரட்டும். விசிக தலைவர் மாறி மாறி பேசி வருகிறார். 2024 மக்களவை தேர்தலில் திருமாவளவன் டெபாசிட் வாங்குவதே கடினம் தான். யார் பாஜகவிற்கு வந்தாலும் அரவணைப்பது எனது கடமை" இவ்வாறு அண்ணாமலை கூறினார்.
-
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி?












Click it and Unblock the Notifications