"பெரிய அண்ணாமலை".. ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட மேலிடத்துக்கு சொன்னதே நாங்கதான்.. திருநாவுக்கரசு
காங்கிரஸ் இடைத்தேர்தலில் வெற்றி பெறும் என்று திருநாவுக்கரசு நம்பிக்கை தெரிவித்துள்ளார்
திருச்சி: பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மட்டுமின்றி, வேறு பெரிய அண்ணாமலை நின்றாலும் தோற்பது உறுதி என்று காங்கிரஸ் எம்பியும், அக்கட்சியின் மூத்த தலைவருமான திருநாவுக்கரசர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
விரைவில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடக்க போகிறது.. திமுக கட்சியானது, தன்னுடைய கூட்டணிக்கு தொகுதியை ஒதுக்குவதாக தெரிவித்து உள்ளது..
எனினும், இந்த முறை தேர்தலில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற முனைப்புடன் திமுக இப்போதே களத்தில் தீவிரமாக குதித்துவிட்டது..

ப்ளான் பாஜக
மற்றொருபுறம், தமிழ்நாட்டில் தற்போதைய அரசியல் சூழலில், திமுகவை எதிர்த்து களம் காண அதிமுக மட்டுமே பெரிய கட்சி என்ற கருத்து பாஜகக்கு தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த கட்சியும் களம் காண முயன்று வருகிறது.. அதிமுகவில் நிலவும் குழப்பத்தால் இடைத்தேர்தலில் தங்களது வேட்பாளரை நிறுத்த பாஜக திட்டமிட்டுள்ளதாம்.. ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிடுவதன் மூலம், தங்களது பலத்தை அறிய முடியும் என்று பாஜக கருதுவதாக தகவல்கள் வெளியாகி கொண்டிருக்கிறது.. திமுக கூட்டணி சார்பில் களமிறங்கும் காங்கிரஸ் கட்சி, தங்களுக்கான ஆதரவை பல்வேறு கட்சிகளிடம் கோரி வருகிறது.

வைகோ சொல்லிட்டாரே
அந்தவகையில், காங்கிரஸ் கட்சியே அபார வெற்றி பெறும் என்று மதிமுக பொதுச்செயலாளர் முதல் இரா.முத்தரசன் வரை உறுதியாக சொல்லி வருகிறார்கள்.. அதன்படியே, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திருநாவுக்கரசரும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.. புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் அருகே பொன்சிறுவரை ஸ்ரீதர்மசாஸ்தா கோவில் அருகில் புதிதாக கட்டப்பட்ட கலையரங்க திறப்பு விழா நிகழ்ச்சியில், திருச்சி எம்பியான திருநாவுக்கரசர், அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்தினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கு பிறகு, செய்தியாளர்கள் சந்திப்பில் திருநாவுக்கரசர் பேசியதாவது:

தினேஷ் குண்டுராவ்
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெறுவார்.. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகிகளெல்லாம், மேலிட பார்வையாளர் தினேஷ் குண்டுராவிடம் கருத்து தெரிவித்தோம்... அதன்படி அவரையே வேட்பாளராக கட்சித் தலைமை அறிவித்துள்ளது. இப்போதுள்ள திமுக கூட்டணி பலமாக இருப்பதால் இந்த இடைத்தேர்தலிலும் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெறுவார் என்று தெரிவித்தார்.

3, 4 கூறுகள்
இடைத்தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதியை முதலில் தமாகாவுக்கு ஒதுக்கப்பட்டது. பிறகு, அதிமுகவுக்கு மாற்றப்பட்டுள்ளது. அதிமுகவுக்குள் யார் போட்டியிடுவது என்ற குழப்பம் நீடிக்கிறது. அதிமுகவை பொறுத்தவரை, 3, 4 கூறுகளாக உடைந்துள்ளன.. எந்த சின்னத்தில் போட்டியிடுவது போன்ற குழப்பம் உள்ளது. பாஜகவும் போட்டியிட வலியுறுத்துகிறது. இந்த சூழலில் யார் எதிர்த்துப் போட்டியிட்டாலும் காங்கிரஸ் வெற்றி பெறும்... பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மட்டுமின்றி வேறு பெரிய அண்ணாமலை நின்றாலும் தோற்பது உறுதி என்று தெரிவித்தார் திருநாவுக்கரசர்.
-
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகா புதிய முதலமைச்சராக இன்று பதவியேற்கிறார் டிகே சிவக்குமார் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications