பேச்சை நிறுத்துயா! நீயென்ன யோக்கியமா? ரிப்போர்டரை ஒருமையில் பேசிய திருநாவுக்கரசர்!
திருச்சி: ''பேச்சை நிறுத்துயா, கெட்டவார்த்தையில் பேசினால் தான் நீயெல்லாம் அடங்குவ'' என்பன உள்ளிட்ட ஏடாகூடா வார்த்தைகளால் திருச்சியில் செய்தியாளர் ஒருவர் மீது திருநாவுக்கரசர் பாய்ந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
திருநாவுக்கரசருக்கு எங்கேயோ யார் மீதோ உள்ள கோபத்தை செய்தியாளர் மீது கொட்டித் தீர்த்திருப்பது அவருக்கு தான் பின்னடைவை தரும் வகையில் அமைந்துள்ளது. காங்கிரஸில் மீண்டும் எம்.பி.சீட் கிடைப்பது கடினம் எனக் கூறப்படும் நிலையில் திருநாவுக்கரசர் இவ்வாறு பொதுவெளியில் அநாகரீகமான முறையில் நடந்து கொண்டிருக்கிறார்.

திருச்சிக்கே நீங்கள் வருவதில்லையே, தேர்தல் வந்தால் மட்டும் வருகிறீர்களே என ரிப்போர்டர் கேள்வி எழுப்பிய போது, ''நீ பொய் சொல்ற, யாரிடமோ காசு வாங்கிக்கொண்டு இப்படி கேட்கிறாய், சீமான் பாணியில் இனி நான் கெட்ட வார்த்தையில் பேசினால் தான் நீ அடங்குவ.. யாருக்கோ அடிமையாக இருந்து கேள்வி கேட்குற, யாரைப் பார்த்து என்ன கேள்வி கேட்குற, நான் திருச்சிக்கு வந்துகிட்டு தான் இருக்கேன், நீ பார்க்காவிட்டால் நான் என்ன செய்வது, நீ ஊருக்கு போயிருப்ப, நீயென்ன பெரிய யோக்கியனா, உன்னிடம் சர்டிபிகேட் கேட்டேனா, பிரஸ் என்றால் எது வேண்டாலும் கேட்பியா, உன் கேள்விக்கெல்லாம் பதில் சொல்லணும்னு அவசியம் இல்ல, இஷ்டம்னா எடு இல்லைன்னா போய்கிட்டே இரு'' என ஒருமையில் தனி நபர் தாக்குதலில் ஈடுபட்டார் திருநாவுக்கரசர்.
மேலும் எல்லாவற்றுக்கும் மேலாக நீங்கள் பாஜகவில் இணையப் போவதாக தகவல் உலா வருகிறதே என்ற கேள்விக்கு செய்தியாளர்கள் சந்திப்பு என்று கூட பார்க்காமல், ''செருப்பால் அடிப்பேன், சொல்றவனை செருப்பால் அடிப்பேன்'' என கொதித்தார். தனக்கு 50 ஆண்டுகால அரசியல அனுபவம் உள்ளதாக சினிமா படம் ஒன்றில் ராதாரவி வசனம் பேசுவதை போல், தனக்கு 50 ஆண்டு கால அரசியல அனுபவம் இருப்பதாகவும் ரிப்போர்ட்டர்களாக இருக்கும் நீங்கள் பிறக்கும் முன்பே தாம் அரசியல் வாதி எனவும் அகங்காரக் குரலில் பேசினார்.
தமிழக அரசியலில் மூத்த அரசியல்வாதியாக அறியப்படும் திருநாவுக்கரசரிடம் இருந்து இது போன்ற வார்த்தைகள் வெளிவரும் என்பதை எதிர்பார்க்காத திருச்சி செய்தியாளர்கள் பதிலுக்கு தாங்களும் மடக்கினர். மொத்தத்தில் யார் மீதோ உள்ள கடுப்பை, கோபத்தை செய்தியாளர்கள் மீது கொட்டித் தீர்த்திருக்கிறார் திருநாவுக்கரசர்.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications