ஸ்ரீரங்கம் முன்னாள் தாசில்தார் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை ரெய்டு.. சொத்துக் குவிப்பு என புகார்
திருச்சி: திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் திருவாரூர் மாவட்ட துணை ஆட்சியர் பவானி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
Recommended Video
ஏற்கனவே திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தாசில்தாராக இருந்த பவானி வருமானத்திற்கு மீறி சொத்து சேர்த்துள்ளதாக எழுந்த புகாரில் இந்த ரெய்டு நடைபெற்று வருகிறது.
பவானிக்கு சொந்தமான மன்னார்குடி, மற்றும் ஸ்ரீரங்கத்தில் உள்ள வீடு மற்றும் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

முன்னாள் தாசில்தார் பவானி
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் தாசில்தாராக பணியாற்றி வந்தவர் பவானி. இவர் தற்போது திருவாரூர் மாவட்டத்தில் தனித் துணை ஆட்சியராக பணிபுரிந்து வருகிறார். இவர் தற்போது மன்னார்குடியில் வசித்து வருகிறார். இவர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்துள்ளது. அதற்குக் காரணம் இவருக்கு ஸ்ரீரங்கம் மற்றும் மன்னார்குடியில் வீடுகள், லால்குடி அருகே பெட்ரோல் பங்க், தனியார் பள்ளி மற்றும் அலுமினிய தொழிற்சாலை உள்ளதாக கூறப்படுகிறது.

லஞ்ச ஒழிப்பு போலீசார் ரெய்டு
இந்நிலையில் ஸ்ரீரங்கம் அடுத்த சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் உள்ள பவானி வீட்டிற்கு இன்று காலை லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சென்றனர். சாரதி நகர் 2வது தெருவில் உள்ள அவரது இல்லத்திற்கு லஞ்ச ஒழிப்பு துறை உதவி ஆணையர் மணிகண்டன் தலைமையில் 7 பேர் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள் உள்ளே நுழைந்தனர். மேலும் வீட்டிற்குள் இருந்து யாரும் வெளியில் செல்லாதவாறு கதவுகள் மூடப்பட்டன. செல்பேசிகளும் பறிமுதல் செய்யப்பட்டு சோதனை நடைபெற்று வருகிறது..

பெட்ரோல் பங்க், பள்ளியில் சோதனை
இதுமட்டுமின்றி பவானிக்கு சொந்தமானது என கூறப்படும் திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்துள்ள வாளாடி பகுதியில் உள்ள பெட்ரோல் நிலையம்,
மணச்சநல்லூர் சாலையில் உள்ள எஸ்.வி.ஆர். மேல்நிலைப் பள்ளி, அரியலூர் மாவட்டம் டால்மியாபுரத்தில் உள்ள அலுமினிய தொழிற்சாலையிலும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

சக அதிகாரிகள் கலக்கம்
ஸ்ரீரங்கம் முன்னாள் தாசில்தாரரும், தற்போதைய திருவாரூர் துணை ஆட்சியருமான பவானி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெறுவது அங்குள்ள ஒரு சில அரசு அதிகாரிகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.
-
திருச்சி நர்சிங் மாணவி உயிரிழப்புக்கு தரமற்ற மருந்தே காரணம்.. ஆய்வறிக்கையில் வெளியான அதிர்ச்சி தகவல் -
திருச்சியில் கார் ஓட்டுநரால் 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. மது கொடுத்து பாலியல் தொல்லை! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
திருச்சி மேடையில் அதை பேசியிருக்கனும்.. முதல்வர் விஜய்யின் உரை ஏமாற்றம்! ஆதங்கப்பட்ட அன்புமணி -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications