இதற்கு மேல் என்ன செய்வது.. சுஜித்தை மீட்பதில் தொய்வு.. 3 அமைச்சர்களுடன் மீட்பு படை ஆலோசனை!

ஆழ்துளை கிணற்றில் சிக்கி இருக்கும் சிறுவன் சுஜித்தை மீட்பது தொடர்பாக தமிழக அமைச்சர்கள் 3 பேருடன் மீட்பு குழு ஆலோசனை நடத்தி வருகிறது.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    Sujith Rescue continues for more than 62 hours

    திருச்சி: ஆழ்துளை கிணற்றில் சிக்கி இருக்கும் சிறுவன் சுஜித்தை மீட்பது தொடர்பாக தமிழக அமைச்சர்கள் 3 பேருடன் மீட்பு குழு ஆலோசனை நடத்தி வருகிறது.

    திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியை சேர்ந்த சுஜித் என்ற சிறுவன் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்தது நாட்டையே உலுக்கி உள்ளது . கடந்த 43 மணி நேரமாக சிறுவனை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

    ஆனால் சிறுவன் தற்போது 100 அடியில் இருப்பதால், அவனை மீட்பது மிகவும் கடினமான செயலாக மாறியுள்ளது. 40க்கும் மேற்பட்ட மீட்பு படை குழுவினர் அங்கு தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    ஆலோசனை

    ஆலோசனை

    இந்த நிலையில் மீட்பு பணிகள் நடக்கும் பகுதிக்கு அமைச்சர்கள் விஜயபாஸ்கர், வெல்லமண்டி நடராஜன் மற்றும் வளர்மதி ஆகியோர் வந்துள்ளனர். இன்று காலையில் இருந்து அவர்கள் அங்கு மீட்பு பணிகளை கவனித்து வருகிறார்கள். அதிகாரிகளை முடுக்கிவிட்டு, பணிகளை கவனித்து வருகிறார்கள்.

    அடுத்து என்ன நடக்கும்

    அடுத்து என்ன நடக்கும்

    ஆனால் மீட்பு பணியில் தற்போது அடுத்து என்ன செய்வது என்று தெரிய நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது 27 அடி வரை குழி தோண்டி விட்டார்கள். 27 அடிக்கு மேல் கடுமையான பாறைகள் உள்ளதால் மீட்பு பணியில் தொய்வு அடைந்துள்ளது. இதற்கு மேல் என்ன செய்வது என்று மீட்பு குழுவிற்கு தெரியவில்லை. பாறைகளில் ரிக் மிஷின் கொண்டு தோண்டுவது மிகவும் கடினமாக இருக்கிறது.

    கடினமான பாறை

    கடினமான பாறை

    கடினமான பாறை என்பதால் குழி தோண்டுவதில் பெரும் போராட்டமாகியுள்ளது. இதனால் 27 அடிக்கு மேல் தோண்டுவது குறித்து அமைச்சர்களுடன், போர்வெல் குழு ஆலோசனை நடத்தி வருகிறது. வேறு ஏதாவது அதிக சக்தி வாய்ந்த மிஷின் கொண்டு வர முடியுமா? என்று போர்வெல் குழு ஆலோசனை கேட்டுள்ளது.

    வேறு வழி

    வேறு வழி

    அதேசமயம் உள்ளே வேறு வழியில் மீட்பு பணிகளை செய்ய முடியுமா என்று ஆலோசனைகள் நடந்து வருகிறது. தேசிய பேரிடர் மீட்பு படையினர், மாநில பேரிடர் மீட்பு படையினர், தீயணைப்பு வீரர்கள், ஐஐடி மாணவர்கள் எல்லோரும் சேர்ந்து இந்த ஆலோசனையை நடத்தி வருகிறார்கள்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+