கையை வச்சிட்டு சும்மா இருந்தாதானே.. பாலியல் புகாரில் சிக்கிய டிஎஸ்பி .. ஓய்வு நாளில் சஸ்பெண்ட்!

நாகை துணை போலீஸ் சூப்பிரண்டு அதிரடி சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார்

Subscribe to Oneindia Tamil

திருச்சி: இதுக்குதான் கையை, காலை வெச்சுக்கிட்டு சும்மா இருக்கணும்னு சொல்றது.. இன்னையோட பணி ஓய்வு பெற இருந்தார் அந்த போலீஸ் அதிகாரி.. ஆனால் பாலியல் புகார் தொடர்பாக திடீரென சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாகையில் நில அபகரிப்பு தடுப்பு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வந்தவர் வெங்கட்ராமன். வயசு 58. இன்றுடன் அவருக்கு ரிடையர்மென்ட்! ஆனால் ரூட் வேற மாதிரி மாறி போய்விட்டது!

Today in retirement Nagai Dy Superintendent of Police suspend

கடந்த 2015-ம் ஆண்டு திருச்சியில் மாநகர போலீஸ் நுண்ணறிவு பிரிவில் உதவி கமிஷனராக வேலை பார்த்து வந்தார். அப்போது ஒரு பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரிடம் இவர் வேலையை காட்டி உள்ளார். செல்போனில் அசிங்க அசிங்கமாக பேசியதுடன், பாலியல் தொல்லையும் கொடுத்ததாக புகார் எழுந்தது.

இது தொடர்பாக அந்த பெண் சப்-இன்ஸ்பெக்டர் போலீஸ் உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்தார். அதன்பேரில் அதிகாரிகளும் விசாரணை நடத்தி வந்தனர். இது தொடர்பாகவே வெங்கட்ராமன் நாகர்கோவிலுக்கு டிரான்ஸ்பரும் செய்யப்பட்டார். இப்போது இந்த புகார் தொடர்பாகத்தான் வெங்கட்ராமன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

ஓய்வு பெற இருந்த வெங்கட்ராமனை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார் தமிழக அரசின் உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி. டிஜிபி திரிபாதியின் பரிந்துரையின் பேரில்தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, இது சம்பந்தமான விசாரணையும் முழுமையாக நடத்தப்பட்டு, அந்த முடிவில் வெங்கட்ராமன் மீதான புகார் உண்மை என்று உயர் அதிகாரிகளுக்கு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த அறிக்கையின் அடிப்படையில் தான் வெங்கட்ராமன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்று கூறப்படுகிறது.

இருந்தாலும், இன்றோடு ஓய்வு பெற இருந்த நிலையில் வெங்கட்ராமன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டது போலீசார் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+