Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அலற வைத்த ஆயிஷா.. மாமியாரை போட்டுத் தள்ளிய மருமகள்.. கையிலென்ன கருப்பு கயிறு? திடுக்கிட்ட திருச்சி!

Subscribe to Oneindia Tamil

திருச்சி: திருச்சி அருகே மனநலம் பாதிக்கப்பட்டதாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்ததோடு, தர்காவுக்கும் கூட்டிச் சென்ற மாமியாரை குத்திக் கொலை செய்துள்ளார் மருமகளான ஆயிஷா. திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவத்தில், ஆயிஷா உண்மையிலேயே மனநலம் பாதிக்கப்பட்டவர் தானா? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர் போலீசார்.

திருச்சி மாவட்டம் அரியமங்கலம் பீடி காலனியை சேர்ந்த அக்பர் அலி, தனது மனைவி சம்சத் பேகம், மகன் சிராஜ், மகள் நிஷாவுடன் வசித்து வருகிறார். சிராஜ் அப்பகுதியில் கவரிங் கடை நடத்தி வரும் நிலையில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு ஆயிஷா என்பவருடன் திருமணம் நடைபெற்றது.

trichy crime police

தற்போது சிராஜ் ஆயிஷா தம்பதிக்கு 9 மாத பெண் குழந்தை உள்ளது. திருமண வாழ்க்கை ஆரம்பத்தில் நன்றாக சென்ற நிலையில், நாட்கள் செல்ல செல்ல மாமியார் சம்சத் பேகத்துக்கும் மருமகள் ஆயிஷாவுக்கும் இடையே அடிக்கடி சண்டை வந்திருக்கிறது.

ஒரு கட்டத்தில் இருவரும் கைகளால் தாக்கிக் கொள்ளும் அளவுக்கு சண்டை பெரிதாகி இருக்கிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சம்சத் பேகம் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது இரவில் நைசாக அவரது அறைக்குள் புகுந்த மருமகள் ஆயிஷா தலையணையால் சம்சத் பேகத்தின் முகத்தை அமுக்கியும் கழுத்தை நெரித்தும் கொலை செய்யும் முயன்றதாக சொல்லப்படுகிறது. மனநல பாதிப்பு காரணமாக ஆயிஷா அவ்வாறு நடந்திருக்கலாம் என நினைத்த சம்சத் பேகமும் கணவர் சிராஜும் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை கொடுத்திருக்கின்றனர்.

சில நாட்களில் ஆயிஷாவின் நடவடிக்கைகள் இயல்பு நிலைக்கு திரும்பி இருக்கிறது. தொடர்ந்து வீட்டுக்கு அழைத்து வந்திருக்கின்றனர். ஆனால் மீண்டும் ஆயிஷா ஆக்ரோஷமாக நடந்திருக்கிறார். இதை அடுத்து கடந்த வியாழக்கிழமை சம்சத் குடும்பத்தினர் ஆயிஷாவை ஒடுகம்பட்டியில் இருக்கும் தர்காவுக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவர் பயந்திருப்பதாக கூறி மந்திரிக்கப்பட்ட கருப்பு கயிறு ஒன்றை அவரது கையில் கட்டி வீட்டுக்கு கூட்டி வந்துள்ளனர்.

வெள்ளிக்கிழமை காலையில் வீட்டில் மாமியார் சம்சத் பேகத்திற்கும் மருமகள் ஆயிஷாவுக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டு இருக்கிறது. என்னை பைத்தியம் என நினைத்தீர்களா ஒழுங்காக என் கையில் இருக்கும் கயிற்றை அவுத்து விடுங்கள் என மாமியாரிடம் சண்டை போட்டுள்ளார் ஆயிஷா. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் கைகலப்பாக ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற ஆயிஷா வீட்டில் இருந்த காய்கறி வெட்டும் கத்தியை எடுத்து வந்து மாமியார் சம்சத் பேகத்தின் மார்பு, இடுப்பு மற்றும் கழுத்தில் சரமாரியாக குத்தியுள்ளார்.

இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்து சம்சத் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். கொலை செய்த கத்தியுடன் ரத்த வெள்ளத்தில் அருகிலேயே ஆயிஷா அமர்ந்திருக்கிறார். இந்த நிலையில் வீட்டில் குழந்தையின் அழுகுரல் சத்தம் கேட்டு வந்த அருகில் இருந்தோர் வீட்டுக்குள் சென்று பார்த்த போது சம்சத் இறந்து கிடக்க குழந்தையும் காயத்துடன் இருந்ததையும், ரத்த வெள்ளத்திற்கு நடுவே ஆயிஷா அமர்ந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து ஆயிஷாவை சமாதானப்படுத்தி குழந்தையை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த அரியமங்கலம் போலீசார் ஆயிஷாவை அழைத்துச் செல்ல முயன்றனர். அப்போது மயங்கி விழுவது போல அவர் படுத்துக்கொண்டார். தொடர்ந்து அவரையும் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர் போலீசார். தொடர்ந்து தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தடயங்களை சேகரித்தனர். ஏற்கனவே சொத்து பிரச்சனை காரணமாக மாமியார் மருமகள் இடையே பிரச்சனை இருந்து வந்ததாகவும் அதன் காரணமாகவே கொலை நடந்திருப்பதாக கூறப்படுகிறது. மேலும் ஆயிஷா உண்மையிலேயே மனநலம் பாதிக்கப்பட்டு இருந்தவர் தானா எனவும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+