விலகியது மர்மம்.. திருச்சி சிறுமியை தற்கொலைக்கு தூண்டியதாக அண்ணன் முறை செந்தில் கைது.. காதலித்தவராம்

Subscribe to Oneindia Tamil

திருச்சி: உறவுமுறையில் அண்ணனை காதலித்து வந்தாராம் திருச்சி சிறுமி கங்காதேவி.. அவர் பெயர் செந்தில்.. கங்காதேவியின் கையில் தான் கட்டிய கயிற்றை செந்தில் அறுக்க முயன்றதாகவும், அந்த கயிற்றை அறுத்தால் தற்கொலை செய்துகொள்வேன் என்று சிறுமி மிரட்டியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.. இதையடுத்து, சிறுமியை தற்கொலைக்கு தூண்டியதாக செந்திலை கைதாகி உள்ளார். இன்று அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை அதவத் தூர்பாளையத்தை சேர்ந்தவர் பெரியசாமி என்பவரின் 2வது மகள் கங்காதேவி.. 14 வயதாகிறது... 9வது முடித்துவிட்டு 10-ம் வகுப்பு போக இருந்தார்.

trichy 14 year old girl murder case investigation

இந்நிலையில், கடந்த வாரம் இவரது சடலம் முள்காட்டில் பாதி எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது.. போலீசார் கங்காதேவியின் உடலை கைப்பற்றினர், போஸ்ட் மார்ட்டம் செய்ய திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.. 3 பேர் கொண்ட டாக்டர்கள் குழு போஸ்ட் மார்ட்டம் செய்தனர். அப்போது, பலாத்காரம் செய்து சிறுமி கொல்லப்படவில்லை என்று ரிப்போர்ட் வந்தது.

இதையடுத்து, சிறுமியை கொன்றது யார் என்ற விசாரணையுடன், அவர் யாரிடம் கடைசியாக செல்போனில் பேசினார் என்ற ஆய்வும் மேற்கொள்ளப்பட்டது. அப்போதான் 24 வயது சொந்தக்காரர் செந்தில் என்பவர் சிக்கினார்.. இவர் கங்காதேவிக்கு அண்ணன் முறையாம்... போலீசாரிடம் சொல்லும்போது, "நான் விரும்பும் பெண், வேறு ஒருவருடன் போனில் பேசியதால், கண்டித்தேன், கன்னத்தில் அறைந்தேன், ஆனால் கொலை செய்யவில்லை" என்றார்.

அதனால் கங்காதேவியை யார்தான் கொன்றார்கள் என்ற குழப்பம் இன்னமும் நீடித்து வருகிறது. இந்நிலையில், போஸ்ட் மார்ட்டம் செய்த டாக்டர் இன்னொரு தகவலை தெரிவித்திருந்தார். கங்காதேவியின் பின்னந் தலையில் காயம் இருந்ததாக கூறுகிறார்.. ஆனால் இந்த காயம் எப்படி ஏற்பட்டது என தெரியவில்லை. எனவே போஸ்ட் மார்ட்டம் செய்த டாக்டர் கார்த்திகேயனும் போலீசாருடன் இணைந்து , சிறுமி எரிந்து பிணமாக கிடந்த இடத்தில் ஆய்வு நடத்தினர்.

கங்காதேவியை கன்னத்தில் அறைந்தபோது, கீழே மயக்கமாக விழுந்துவிட்டார் என்று ஏற்கனவே செந்தில் வாக்குமூலம் தந்திருந்தார்.. ஒருவேளை கீழே விழும்போது கல்லில் அடிபட்டு இறந்திருப்பாரா? அப்படி அடிபட்டு விழுந்திருந்தால், யார் மண்ணெண்ணை ஊற்றி கொன்றிருப்பார்கள் என்றும் கேள்வி எழுந்தபடியே இருந்தது.. அதுமட்டுமல்லாமல், அல்லது கங்காதேவியே மண்ணெண்ணை ஊற்றி கொளுத்தி கொண்டால், நிச்சயம் வலி தாங்காமல் அங்குமிங்கும் அலறி ஓடியிருக்கவே செய்வார்.. ஆனால், அதற்கான தடயமும் எதுவும் இல்லை என்றும் சொன்னார்கள்..

இப்போது வரை கங்காதேவி எப்படி இறந்தார் என்றே தெரியாமல் ஒரே குழப்பமாக இருந்து வருகிறது.. இந்நிலையில், கங்காதேவியின் கையில் தான் கட்டிய கயிற்றை செந்தில் அறுத்துள்ளதாக போலீஸ் விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.

கையில் கட்டிய கயிற்றை அறுத்தால் தற்கொலை செய்துகொள்வேன் என்று சிறுமி மிரட்டியதாகவும் தகவல் தெரிய வந்துள்ளது. இதையடுத்து, சிறுமியை தற்கொலைக்கு தூண்டியதாக உறவினர் செந்தில் என்பவர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது... செந்தில் மீது ஐபிசி சட்டம் 305ன் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இன்று காலை கோர்ட்டிலும் செந்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+