மணப்பாறையில் மலர்ந்த சுகன்யாவின் காதல்.. ஏற்கனவே 2 கணவனும் ஓடிட்டாங்களாம்! இப்ப திருச்சியில் இது வேற
திருச்சி: மணப்பாறை அருகே சிட்கோ வளாகத்தில் 3 நாட்களுக்கு முன்பு, இளம்பெண்ணின் சடலம் ஒன்று கிடந்தது.. இதை கண்ட பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து உடனடியாக, மணப்பாறை போலீசுக்கு தகவல் தந்தனர்.. விரைந்து வந்த போலீசார் பெண்ணின் சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்ட நிலையில், வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்த தொடர் விசாரணையை நடத்தி கொண்டிருப்பதால், மணப்பாறை பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்துள்ள சிட்கோ வளாகத்தில் இளம்பெண் சடலமாக மீட்கப்பட்டார்.. போலீசார் விரைந்து வந்து பார்த்தபோது, அந்த பெண்ணின் கழுத்து நெரிக்கப்பட்டிருந்தது.. அவருக்கு வயது 20 வயதிருக்கலாம்.

மணப்பாறை பெண்ணின் சடலம்
இதையடுத்து, சடலத்தை மீட்டு போஸ்ட் மார்ட்டம் செய்ய அனுப்பி வைத்த மணப்பாறை போலீசார், அப்பெண்ணை யார் கொலை செய்திருப்பார்கள் என்ற விசாரணையையும் கையில் எடுத்தனர். அப்போதுதான் இறந்த பெண்ணின் பெயர் சுகன்யா என்பதும், கழனிவாசல் பட்டியை சேர்ந்தவர் என்பதும், கணவருடன் கருத்து வேறுபாடால் பிரிந்து வாழ்பவர் என்பதும் தெரியவந்தது.
எனவே, கொலை செய்தது யார்? கொலைக்கான காரணம் என்ன? உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணையை தொடங்கினார்கள்.. அதுமட்டுமல்லாமல், சுகன்யாவின் செல்போனை கைப்பற்றி ஆய்வு செய்ததில், அவர் கடைசியாக யாரிடம் பேசினார் என்பதையும் கண்டறிந்தனர்.. அப்போதுதான் இளைஞர் ஒருவருடன் சுகன்யா பேசியிருந்தது பதிவாகியிருந்தது
போலீசுக்கு கிடைத்த க்ளு
இந்த ஒரு க்ளூவை வைத்து, அந்த நபருக்கு போலீசார் வலை வீசி தேடிவந்த நிலையில், தற்போது சிக்கியிருக்கிறார்.. தலைமறைவாக இருந்த தினேஷ் என்ற அந்த நபரை, சுற்றிவளைத்து பிடித்துள்ளனர். .
இதுகுறித்து போலீஸ் தரப்பில் பல்வேறு திடுக் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.. சுகன்யாவிற்கு ஏற்கனவே 2 முறை திருமணம் ஆகிவிட்டதாம்.. 2 கணவரையும் பிரிந்து, தனித்து வாழ்ந்து வந்துள்ளார்.. செங்கல்பட்டில் தங்கி வேலை பார்த்து வருகிறார்..
அப்போதுதான், கஸ்பா பொய்கைப்பட்டியைச் சேர்ந்த தினேஷ் என்பவருடன் 3வதாக பழக்கம் ஏற்பட்டு, அது தகாத உறவாக மாறியிருக்கிறது.. ஆனால், கடந்த 15 நாட்களாகவே தினேஷுடன் பேசுவதை சுகன்யா தவிர்த்து வந்தாராம்..
போன் செய்தாலும் எடுக்கவில்லையாம்.. இதுதான் தினேஷூக்கு ஆத்திரத்தை தந்துள்ளது.. எனவே, சுகன்யா வேலைப் பார்க்கும் செங்கல்பட்டிற்கே சென்று சமாதானம் பேசி, மணப்பாறைக்கு அழைத்து வந்துள்ளார்.
சுகன்யா சிட்கோ வளாகம்
ஆள் நடமாட்டமேயில்லாத சிட்கோ வளாகத்தில் சுகன்யாவை அழைத்து பேசியிருக்கிறார் தினேஷ்.. அப்போது மறுபடியும் இருவருக்குள்ளும் வாக்குவாதம் வெடித்துள்ளது.. உன்னுடன் பேச விருப்பமில்லை இனிமேல் எனக்கு ஃபோன் செய்யாதே என்று சுகன்யா சத்தம் போட்டாராம்..
இதனால் ஆவேசமடைந்த தினேஷ், துப்பட்டாவால் சுகன்யாவை கழுத்து நெரித்து கொன்று தப்பியிருப்பது விசாரணையில் தற்போது தெரியவந்துள்ளது..
கள்ளக்காதல் சுகன்யா
கலையரசன் என்பவருடன் சுகன்யாவுக்கு திருமணம் நடந்துள்ளது.. இந்த கணவரின் உறவினர்தான் தினேஷ்.. இவருடன் கள்ளக்காதல் ஏற்பட்டு, இருவரும் வீட்டை விட்டு ஓடிவிட்டார்கள்..
பிறகு உறவினர்கள் சுகன்யாவை தேடி கண்டுபிடித்து, ஊருக்கு அழைத்து வந்துள்ளனர்.. ஆனால், கலையரசன், சுகன்யாவை விவாகரத்து செய்துவிட்டார்..
பிறகு வேடசந்துார் பகுதியைச் சேர்ந்த வினோத் என்பவருடன், 2022ல் சுகன்யாவுக்கு 2வது திருமணம் நடந்தது; இவருடனும் வாழாமல், அம்மா வீட்டுக்கு வந்த சுகன்யா, மறுபடியும் தினேஷூடன் கள்ளக்காதலை தொடர்ந்துள்ளார்.. கடந்த ஒரு வருடமாக செங்கல்பட்டில் ஒரு செல்போன் கடையில் வேலை பார்த்துகொண்டே, இந்த கள்ளக்காதல் நீண்டுள்ளது.
பல ஆண்களுடன் தொடர்பு
இதனிடையே தினேஷுக்கு திருமணமாகி, அவரது மனைவி கர்ப்பிணியாக உள்ளார். எனினும், சுகன்யாவுடன் தினேஷ் தொடர்ந்து பழகி வந்துள்ளார்...
தன்னுடைய 2 கணவர்களுடனும் சுகன்யா வாழாமல் போனதற்கு காரணமே தினேஷ்தான் என்கிறார்கள்.. ஆனால், தினேஷ் தவிர சுகன்யாவுக்கு இன்னும் பல ஆண்களுடன் தொடர்பு இருந்ததாம்.. இதனை கண்டித்ததால்தான் சுகன்யாவுக்கு கோபம் வந்து, தினேஷ் உறவை துண்டித்துள்ளார்.. இதனால் ஆத்திரமடைந்த தினேஷ், துப்பட்டாவில் சுகன்யாவின் கழுத்தை நெரித்துள்ளார்..
20 வயது பெண்ணின் கொலையில், கள்ளக்காதலன் சிக்கியிருப்பது, பெரும் பரபரப்பை மணப்பாறையில் ஏற்படுத்தி வருகிறது.
-
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு?












Click it and Unblock the Notifications