அம்மா இருக்கிறேன் கவலைப்படாதே என்ற தாய்.. 'உம்' என்று சொன்ன சுஜித்.. மீட்பு குழு உற்சாகம்
Recommended Video
திருச்சி: ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த 2 வயது சிறுவன் சுஜித்திடம் அவரது தாய் மேரி பேசினார். அதற்கு சிறுவனும் பதில் சொல்லியுள்ளார்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுபட்டி என்ற கிராமத்தில் உள்ள சுமார் 30 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில், சுஜித் என்ற 2 வயது சிறுவன் இன்று மாலை 5.40 மணி அளவில் எதிர்பாராதவிதமாக விழுந்துவிட்டார்.

இதையடுத்து மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இரவு 12.50 மணியளவில் கிடைத்த தகவல்படி, குழந்தை 7 மணி நேரத்துக்கும் மேலாக உணவு ஏதும் உட்கொள்ளாமல் இருப்பதால் சோர்வடைந்து இருக்கிறது என்று தெரியவந்தது.
எனவே சுஜித்திற்கு உற்சாகமூட்டும் வகையில், சுஜித்தின் தாய் மற்றும் தந்தை ஆகியோரை வைத்து பேச வைத்துக் கொண்டிருக்கின்றனர் அதிகாரிகள். சுஜித் தாய் மேரி, "அம்மா இருக்கிறேன் கவலைப்படாதே" என்று கூறியதற்கு "உம்" என்று சுஜித் பதிலளித்துள்ளார். எனவே, சுஜித் மயக்க நிலைக்கு செல்லவில்லை என்பது உறுதியாகத் தெரிகிறது.
இருப்பினும் இவ்வளவு ஆழத்தில், இருக்கும்போது மண்ணில் உள்ள ஈரப்பதம் காரணமாக குழந்தையின் உடலில் வெப்ப நிலை குறைந்து கொண்டே செல்லும். இதற்கு மனரீதியாகவும் தைரியம் தேவை என்பதால் குழந்தையின் தந்தை, தாய் மற்றும் மாமா ஆகியோர் தொடர்ந்து பேச்சுக் கொடுத்துக் கொண்டே இருக்கின்றனர்.
ஆரம்பத்தில், மேரியால் நிகழ்விடத்திற்கு வரமுடியவில்லை. ஏறத்தாழ மயங்கிய நிலையில் வீட்டில் படுத்துவிட்டார். ஒருவழியாக உறவினர்கள் அவரை தேற்றி, நிகழ்விடத்திற்கு அழைத்துச் சென்றனர். எப்படியும் பத்திரமாக மீட்டு விடுவோம் என்று மீட்புக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications