வாட்டிய வறுமை.. போட்டியில் பங்கேற்க முடியாமல் தவித்த வீரர்கள்.. திருச்சி கலெக்டர் செய்த பேருதவி!
திருச்சி: தெற்காசிய ஊரக விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க பூடான் செல்ல முடியாமல் தவித்து வந்த திருச்சி விளையாட்டு வீரர்கள் 3 பேருக்கு மாவட்ட ஆட்சியர் சிவராசு தனது சொந்த பணத்தில் இருந்து ரூ.5 ஆயிரம் வழங்கினார்.
தெற்காசிய ஊரக இளைஞா் விளையாட்டுப் போட்டிகள் பூடான் நாட்டில் வருகிற 7-ம் தேதி, 8-ம் தேதிகளில் நடைபெற உள்ளது. இந்த போட்டிகளில் பங்கேற்க திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த அருண், சரவணகுமாா், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த விஜயகுமாா் ஆகியோா் தேர்வாகியுள்ளனர்.
அருண், சரவணகுமாா் மற்றும் விஜயகுமாா் ஆகியோர் தங்களது திறமையின் மூலம் விளையாட்டு போட்டிகளுக்கு தேர்வானாலும் அவர்களின் குடும்பத்தில் வறுமை புகுந்து விளையாடியது.

வறுமை வாட்டியது
பூடான் செல்ல வேண்டுமானால் ஒருவருக்கு ரூ.40 ஆயிரத்துக்கு மேல் செலவாகும். வறுமையில் வாடி தவிக்கும் இந்த விளையாட்டு வீரர்களால் என்ன செய்வதென்றே தெரியவில்லை. இதனை தொடர்ந்து நண்பர்கள், உறவினர்கள் வலிறுத்தியதன் பேரில் திருச்சி மாவட்ட ஆட்சியர் சு. சிவராசுவிடம் சென்று 3 பேரும் உதவி செய்யும்படி கடந்த மாதம் கேட்டனர்.

பேருதவி செய்த மாவட்ட ஆட்சியர்
இந்த இளைஞர்களின் சாதிக்க துடிக்கும் ஆர்வத்தையும், திறமையையும் கண்டுணர்ந்த மாவட்ட ஆட்சியர் சு. சிவராசு தனது சொந்த பணத்தில் இருந்து ரூ.5 ஆயிரம் வழங்கினார். 'போட்டிகளில் சாதித்து தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்க்க வேண்டும்' என்று அவர்களை தட்டி கொடுத்து பாராட்டினார் ஆட்சியர் சிவராசு. இதனை தொடர்ந்து இந்த விளையாட்டு வீரர்களின் நிலை சமூக ஊடகங்கள் வாயிலாக பரவலாக தெரியவந்தது.

நிதியுதவி குவிந்தது
இதன் பின்னர் பல்வேறு தரப்பினரும் தாமாக முன்வந்து அருண், சரவணகுமாா் மற்றும் விஜயகுமாருக்கு நிதியுதவி வழங்கி அவர்களை ஊக்குவித்தனர். போதிய அளவில் பணம் கிடைத்ததால் 'சாதித்து காட்டுவோம்' என்ற நம்பிக்கையுடன் 3 விளையாட்டு வீரர்கள் நேற்று பூடான் புறப்பட்டு சென்றனர். திருச்சி ரயில் நிலையத்தில் இவர்களை வாழ்த்தி வழியனுப்பும் நிகழ்ச்சி நடந்தது.

வழியனுப்பி வைத்தனர்
மக்கள் விளையாட்டு வீரா்களை வெற்றியுடன் 'திரும்பி வாருங்க

உதவிகள் கிடைப்பதில்லை
தற்போது ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 'ஒலிம்பிக் போட்டி 2020' நடந்து வருகிறது. இந்தியா இதில் ஒரு சில பதக்ககங்களை வென்றாலும், அதிக மக்கள் தொகை கொண்ட இந்தியாவால் சில குட்டி, குட்டி நாடுகளை வீட சிறப்பாக சாதிக்க முடியவில்லை என்பதே உண்மை. நமது நாட்டில் பல்வேறு திறமையான விளையாட்டு வீரர்கள் பரவி கிடந்தாலும், தேசிய, சர்வதேச அளவில் சாதிப்பதற்கு அவர்களுக்கு போதிய பயிற்சி உள்ளிட்ட உதவிகள் கிடைப்பதில்லை.

அரசு முன்வர வேண்டும்
நாம் மேலே பார்த்த அருண், சரவணகுமாா் மற்றும் விஜயகுமாா் போல் பல வீரர்கள் திறமை இருந்தும், சாதிக்கும் மனம் இருந்தும் பணம் இல்லாததால் முடங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மத்திய அரசும், அந்தந்த மாநில அரசுகளும் இதுபோல் கிராமங்களில் உள்ள திறமையான இளைஞர்களை ஊக்குவித்து, அவர்களுக்கு தேவையான உதவி செய்ய வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது. நாம் மேலே பார்த்த அருண், சரவணகுமாா் மற்றும் விஜயகுமாா் போல் பல வீரர்கள் திறமை இருந்தும், சாதிக்கும் மனம் இருந்தும் பணம் இல்லாததால் முடங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மத்திய அரசும், அந்தந்த மாநில அரசுகளும் இதுபோல் கிராமங்களில் உள்ள திறமையான இளைஞர்களை ஊக்குவித்து, அவர்களுக்கு தேவையான உதவி செய்ய வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.
-
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு?












Click it and Unblock the Notifications