ஜெயலலிதாவை திரும்பி பார்த்த ஜெயா.. முன்னாள் திருச்சி அதிமுக மேயர் காலமானார்.. ஷாக்கில் மலைக்கோட்டை
திருச்சி மாஜி மேயர் ஜெயா மாரடைப்பால் காலமானார்
திருச்சி: திருச்சி மாநகராட்சியின் முன்னாள் மேயர் ஜெயா இன்று மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 59..!
திருச்சி மாநகராட்சிக்கு புகழ் சேர்த்தவர் ஜெயா என்பதில் மாறுபட்ட கருத்து யாருக்கும் இருக்க முடியாது.. காரணம், திருச்சி மாநகராட்சியில் 2011-16 வரை அதிமுகவின் முதல் பெண் மேயராக பதவி வகித்தவர் எம்.எஸ்.ஆர்.ஜெயா தான்.
திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் எம்.எஸ்.ராஜேந்திரனின் மனைவிதான் ஜெயா.. இவர் திருச்சி பீமநகர் நியூராஜா காலனியில் குடும்பத்துடன் வசித்து வந்தார்... இந்த நிலையில் இன்று காலை ஜெயாவுக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

குடும்பத்தினர்
அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் உடனே அவரை அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். டாக்டர்கள் பரிசோதித்தபோது அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரியவந்தது... அவரது உடலுக்கு மாநகர் மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள், கட்சியினர், தொழிலதிபர்கள், மாற்று கட்சியினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்..

போட்டி
வருகிற பிப்ரவரி 19-ந் தேதி நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தலில் ஜெயா போட்டியிட முடிவு செய்திருந்தாராம்.. இதை பற்றி நிர்வாகிகளிடமும் பேசியபடியே இருந்துள்ளார்.. போட்டியிட முடிவு செய்திருந்த நிலையில் ஜெயா இறந்த செய்தி திருச்சி அதிமுகவினரை அதிர்ச்சி அடைய செய்துள்ளது..

ஜெயலலிதா
திருச்சி மலைக்கோட்டை மாநகராட்சியில் தன்னுடைய பணியை அன்றே சிறப்பாக செய்தவர் ஜெயா.. அதனால்தான், அடுத்த முறையும் அதாவது ஜெயலலிதா, அப்போது நடந்த மேயர் தேர்தலில் மீண்டும் வாய்ப்பு தந்தார்.. இத்தனைக்கும் முன்னாள் மேயரான சாருபாலா தொண்டைமானும் களத்தில் இருந்தார்.. அந்த சமயத்தில் சாருபாலாவா? ஜெயாவா? யாருக்கு வெற்றி என்று திருச்சி மக்களிடம் பெரும் எதிர்பார்ப்பும் ஏற்பட்டது..

மறைவு
காரணம், அதிக அளவில் கவுன்சிலர்களை வெல்லும் கட்சிக்கே மேயர் ஆகும் தகுதி கிடைக்கும் என்பதால் திருச்சியில் போட்டி பலமாகவே எப்போதும் இருக்கும்.. இந்த முறையும் அதை கணக்குபோட்டுதான் ஜெயா போட்டியிட முடிவு செய்திருக்கிறார்.. ஆனால், அதற்குள் இப்படி ஒரு சோக முடிவு வந்துள்ளது மலைக்கோட்டையை அதிர வைத்து வருகிறது.
-
திமுகவுடன் குதிரை பேரம் நடத்தியது யார்?.. எடப்பாடிக்கு செங்கோட்டையன் அடுக்கடுக்கான கேள்வி! -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா!












Click it and Unblock the Notifications