திருச்சியில் 14 வயது சிறுமி எரிந்த நிலையில் பிணமாக கிடந்த சம்பவம்: உறவினர் கைது
திருச்சி: திருச்சியில் 14 வயது சிறுமி எரிந்த நிலையில் பிணமாக கிடந்த வழக்கில் அவரது உறவினர் செந்தில் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருச்சி சோமரசம்பேட்டை அருகே உள்ள அரியாவூர் அதவத்தூர் பாளையத்தைச் சேர்ந்தவர் பெரியசாமி. இவர் நெய்தலூர் காலனியில் ஹார்டுவேர்ஸ் கடை நடத்தி வருகிறார். இவரது 2 ஆவது மகள் கங்கா தேவி (14) அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வந்தார்.

கடந்த 6ம் தேதி ( திங்கள்கிழமை) அன்று மதியம் சக தோழிகளுடன் விளையாடிக் கொண்டிருந்த அவர் இயற்கை உபாதை கழிக்க காட்டுப் பகுதிக்கு செல்வதாக வீட்டிலுள்ளவர்களிடம் தெரிவித்துவிட்டு வெளியே சென்றார்.
நீண்ட நேரமாகியும் கங்காதேவி வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த அவரது தாய் காட்டுப்பகுதியில் தேடி வந்துள்ளார். அப்போது அங்குள்ள அடர்ந்த கருவேலமுள் பகுதியில் பாதி உடல் எரிந்த நிலையில் இறந்து கிடந்தை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
கங்காதேவியின் தாய் கூச்சலிடும் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் நிகழ்விடத்தில் திரண்டனர். இதற்கிடையே தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சோமரசம்பேட்டை போலீஸார் சிறுமியின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
சம்பவ இடத்திற்கு வந்த மத்திய மண்டல ஐ.ஜி. ஜெயராமன், திருச்சி சரக டிஐஜி ஆனி விஜயா உள்ளிட்டோரும் ஆய்வு மேற்கொண்டனர். சிறுமியின் உடல் கிடப்பதாக அடையாளம் காட்டிய உறவினர்கள் 2 பேரிடம் போலீசார் விசாரணை தீவிர விசாரணை நடத்தினர். இதற்கிடையில் மரணமடைந்த சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகவில்லை என்று பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தெரியவந்தது.
இந்நிலையில் சிறுமி உயிரிழந்த வழக்கில் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்திய போலீசார் உறவினர் செந்தில் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.. அவர் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
-
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு!












Click it and Unblock the Notifications