Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருச்சியில் அரசு பள்ளியில் இரவில் தங்கிய ஜோடி.. அன்-டைம் வேற! இதென்ன லாட்ஜ்ஜா? ஆடிப்போன ஆசிரியர்கள்

Subscribe to Oneindia Tamil

திருச்சி: அரசு பள்ளிகளில் மது அருந்துவது, போதை மருந்து உட்கொள்வது என நாளுக்கு நாள் அட்டகாசங்கள் பெருகிவருகின்றன... சில மாணவர்களும், மாணவிகளும் இதுபோன்ற தகாத செயல்களில் ஈடுபட்டு, அது தொடர்பான வீடியோக்களும் இணையத்தில் வெளியாவதுண்டு.. இதுதொடர்பாக ஒழுக்கக்கேடான செயல்களால் ஆசிரியர்களும், பெற்றோர்களும் ஏற்கனவே கவலையில் உள்ள நிலையில், ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் திருச்சியில் நடந்துள்ளது. இந்த வீடியோவும் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.

திருச்சி மாவட்டம், லால்குடியை அடுத்துள்ளது வாளாடி.. இங்கு அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இஙகு 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள்..

Trichy Government School lodge

இந்த நிலையில், இந்த பள்ளி வளாகத்தின் பின்புறம் உள்ள கட்டிடத்தில் ஒரு ஆணும் பெண்ணும் இருந்துள்ளனர்.. இந்த விஷயம் அந்த பள்ளி ஆசிரியர்களுக்கு தெரியவந்துள்ளது.. இதனால் ரகசியமாக அந்த ஜோடியை வீடியோ எடுக்க சென்றுள்ளனர்.

அரசு பள்ளியில் ஜோடி

அந்த ஜோடி தூங்கி கொண்டிருந்ததால், அவர்களை ஆசிரியர்கள் தட்டி எழுப்பியிருக்கிறார்கள்.. அப்போதுதான், அந்த ஆணும், பெண்ணும் மதுபோதையில் இருப்பது தெரியவந்தது.. பள்ளி வளாகத்தில் காம்பவுண்ட் சுவர் மீது எகிறி குதித்து இவர்கள் உள்ளே வந்திருக்கிறார்கள்.. திடீரென ஆசிரியர்கள் வந்து நிற்பதை பார்த்ததுமே அந்த ஜோடி அதிர்ச்சியடைந்தது.

நவீன் என்ற அந்த நபர், "நடுராத்திரி இங்கு வந்துட்டோம்.. அன் டைம் என்பதால் இங்கு வந்து படுத்துட்டோம். இப்போது கிளம்புகிறோம்.. நாங்க இங்கே வந்ததில் இப்ப என்ன தப்பு?" என்று அலட்சியமாகவும், மிரட்டும் தொனியிலும் கேட்டார்.

இதென்ன லாட்ஜ்ஜா

இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள், "அதுக்கு ஸ்கூலுக்கு ஏன் வந்தீங்க? நடுராத்திரி படுத்துவிட்டு போவதற்கு இதென்ன லாட்ஜா?" என்று கேட்டார்கள்..

அதற்கு அந்த நபர், "நைட்டு இங்க படுத்துட்டு காலையில் போய் விடுவோம்னு சொல்றேன் இல்ல? இதுல உங்களுக்கு என்ன பிரச்சனை" என்று மீண்டும் மிரட்டியிருக்கிறார்.

இதையடுத்து, ஆசிரியர்கள் "நாங்க என்ன லாட்ஜா கட்டி விட்டிருக்கோம்" என்று மீண்டும் கேட்டனர்.. உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்... அத்துடன், இந்த வீடியோவை ஆதாரமாக வைத்து அவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. லால்குடி போலீஸார் நவீன்குமார் என்ற அந்த நபர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது.. நவீன்குமாருக்கு 28 வயதாகிறது.. கீழவாளாடி கீழத் தெருவைச் சேர்ந்தவராம்.

தொடரும் அசம்பாவிதங்கள்

கடந்த 6 மாதங்களாகவே இந்த பள்ளி வளாகத்திற்குள் சிலர் தண்ணி அடித்துவிட்டு, மது பாட்டில்களை அங்கேயே தூக்கி வீசி விட்டு போய்விடுகிறார்களாம்.. மேலும், பள்ளி வளாகத்திலுள்ள உடைமைகளை சேதப்படுத்திவிடுவதாகவும் கூறப்படுகிறது. இதுபோன்ற அசம்பாவிதங்களுக்கு நடுவில் கள்ள ஜோடியே, பள்ளி வளாகத்தில் இரவெல்லாம தங்கியிருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை தந்து வருகிறது.

அத்துடன், "நடுராத்திரி ஸ்கூலுக்கு வந்து தூங்கினோம், இதோ நாங்கள் கிளம்புகிறோம் என்று நவீன் என்ற நபர் ஆசிரியர்களை மிரட்டிய வீடியோ, கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள், மாணவர்களிடம் அச்சத்தை உண்டுபண்ணி வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+