மனைவியை சிலிண்டரால் அடித்து கொடூரமாக கொலை செய்த கணவன்.. திருச்சியில் பயங்கரம்
திருச்சி: திருச்சியில் கடன் வாங்கி தர மறுத்த மனைவியை சிலிண்டரால் அடித்துக் கொலை செய்த கணவரை கைது செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருச்சி எடமலைப்பட்டி புதூர் ஜே.ஜே.நகர் பகுதியை சேர்ந்தவர் அனிதா. இவர் முதல் கணவரிடம் விவாகரத்து பெற்று கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கோபால் என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு குடிபோதையில் வந்த கோபால் மனைவி அனிதாவிடம் 20ஆயிரம் பணம் கடன் வாங்கி தர சொல்லி கேட்டதாக கூறப்படுகிறது. கோபம் அடைந்த அனிதா தினமும் குடித்து விட்டு வருவதை கண்டித்தார். மேலும் கடன் வாங்கி கொடுக்க மறுத்தார். இதன் காரணமாக கணவன் மனைவி இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது.

அனிதா மீது தாக்குதல்
வாய்த்தகராறு முற்றிய நிலையில் ஒரு கட்டத்தில் போதையில் இருந்த கோபால் சமையல் அறையில் வைத்திருந்த கேஸ் சிலிண்டரை எடுத்து அனிதாவை தலையில் பலமாக தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த அனிதா கூச்சலிடவே இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் இதுகுறித்து எடமலைப்பட்டிபுதூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

உயிரிழப்பு
தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர் காயமடைந்து ரத்தம் சொட்டிய நிலையில் மயங்கிக் கிடந்த அனிதாவை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு தீவிர சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டும் நேற்று காலை சிகிச்சை பலனின்றி அனிதா பரிதாபமாக உயிரிழந்தார். இதனை தொடர்ந்து கணவர் கோபாலை எடமலைப்பட்டி புதூர் காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

போக்சோவில் கைது
ஆவடி அருகே அத்தை வீட்டில் தங்கி இருந்த போது, அவரது 14வயது மகளை கர்ப்பமாக்கிய கல்லூரி மாணவரை போலீசார் கைது செய்தனர்.
முன்னதாக கர்ப்பமான விஷயம் இரு வீட்டாருக்கும் தெரியவந்ததால், காதும் காதும் வைத்த மாதிரி கோவிலில் திருமணமும் நடந்தது. இந்நிலையில் மருத்துவமனையில் சிறுமி சிகிச்சைக்கு வந்த போது உண்மை வெளியில் தெரிந்தது. இதனால் கல்லூரி மாணவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

ஆவடி இளைஞர்
திருவள்ளூர் மாவட்டம் ஆவடியை அடுத்த திருநின்றவூர், ராஜாகுப்பம், காந்தி தெருவை சேர்ந்தவர் விக்ரம் (20). இவர் திருநின்றவூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி மூன்றாமாண்டு படித்து வருகிறார். இவரது அத்தை மகள் 14வயது சிறுமி. இவர் அங்குள்ள ஒரு பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார்.

பாலியல் பலாத்காரம்
இதற்கிடையில், சமீபத்தில் சிறுமிக்கு ஏற்பட்ட உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் அத்தை வீட்டில் விக்ரம் தங்கி உள்ளார். அப்போது, விக்ரம் அவளை திருமண ஆசை காட்டி பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார். இந்த தகவல் இரு வீட்டாருக்கும் தெரிய வந்தது. இதனால் , சிறுமியை அழைத்துக்கொண்டுபோய் கோவிலில் வைத்து விக்ரம் திருமணம் செய்து கொண்டார்.

சிறுமி கர்ப்பம்
இதனை அடுத்து, பெற்றோரும் வேறு வழியின்றி வீட்டில் ஏற்று கொண்டனர். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு சிறுமிக்கு வயிறு வலி ஏற்பட்டு உள்ளது. இதனை அடுத்து, சிறுமியை உறவினர்கள் கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அழைத்து கொண்டு பரிசோதனைக்கு சென்றுள்ளனர். அப்போது, சிறுமி கர்ப்பமாகி இருப்பது தெரியவந்தது.

போலீசார் விசாரணை
இதனிடையே சிறுமிக்கு 14 வயது தான் இருக்கும் என்பதை கணித்த மருத்துவர்கள், ஆவடி அனைத்து மகளிர் காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். இன்ஸ்பெக்டர் லதா தலைமையில் போலீசார் சிறுமியை அழைத்து விசாரணை நடத்தினார். அப்போது விக்ரம் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததால், கர்ப்பமாகி இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து, போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து விக்ரமை நேற்று கைது செய்தனர்,












Click it and Unblock the Notifications