திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம் முழுவதும் போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.. பொதுமக்களுக்கு தடை
திருச்சி: திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம் முழுவதும் போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. நடைமேடைக்கு செல்ல பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இந்தியா முழுவதும் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு உள்ளது. தமிழகத்தில் 64 எக்ஸ்பிரஸ் ரயில்கள் மற்றும் பாசஞ்சர் ரயில்கள் வருகிற 31-ந்தேதி வரை இயக்கப்படாது என்று தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது. திருச்சி- சென்னை இடையே இயக்கப்பட்டு வந்த மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்கள் திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.

ரயில்கள் இயக்கப்படாததால் திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தின் இரண்டு பிரதான வாசல்களும் நேற்று முன்தினம் இரவே மூடப்பட்டு விட்டன. பயணச்சீட்டு முன்பதிவு மையம், முன்பதிவில்லா பயணச்சீட்டு வழங்குமிடம் ஆகியவையும் மூடப்பட்டு விட்டன. வருகிற 31-ந்தேதி வரை இந்த மையங்கள் செயல்படாது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
நேற்று காலை முதல் ரயில் நிலையத்தின் உள் பகுதி வரை டவுன் பஸ்கள் செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஆட்டோ, கார், இருசக்கர வாகனங்கள் உள்பட எந்த ஒரு வாகனங்களையும் போலீசார் உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. பொதுமக்கள் நடைமேடைக்கு செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டது. இதன் மூலம் ஜங்ஷன் ரயில் நிலையம் முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் வந்து விட்டது.
ரயில்கள் ரத்து செய்யப்பட்டு விட்டதால் ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகளை ரத்து செய்து விட்டு பணத்தை திரும்ப பெறுவதற்காக சில பயணிகள் நேற்று முன்பதிவு மையத்திற்கு வந்தனர். அவர்களை போலீசார் உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. இதனால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினார்கள்.
ரயில் நிலையத்தின் முன்பகுதியில் ஒரு தகவல் பலகை வைக்கப்பட்டு உள்ளது. அதில், வருகிற 31-ந்தேதி வரை ரயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு விட்டதால் முன்பதிவு செய்த பயணிகள் பயணச்சீட்டை ரத்து செய்து பணத்தை திரும்ப பெற நேரில் வரவேண்டியது இல்லை. பயண தேதியில் இருந்து 3 மாதங்கள் வரை எப்போது வேண்டுமானாலும் அவர்கள் பயணச்சீட்டிற்கான கட்டணத்தை திரும்ப பெற்றுக்கொள்ளலாம் என எழுதி வைக்கப்பட்டு இருக்கிறது. ரயில் நிலையத்தின் அனைத்து நடைமேடைகளிலும் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ரயில்வே சுகாதார பணியாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக தினமும் இரண்டு முறை இதுபோன்ற பணிகள் நடப்பதாகவும் அவர்கள் கூறினார்கள்.
-
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications