ஏம்ப்பா.. நேற்றுதான் கல்யாணமாச்சு.. மனைவியை தூக்கிட்டு போயிட்டீங்களே.. போலீசில் கணவர் புகார்

Subscribe to Oneindia Tamil

திருச்சி: சிங்கப்பூரில் இருந்து அவசர அவசரமாக சொந்த ஊருக்கு வந்து காதலியை திருமணம் செய்த நிலையில், மணமான மறுநாளே உறவினர்கள் கடத்திச் சென்றால் காதலன் அதிர்ச்சியடைந்தார். காதல் மனைவியை உடனடியாக மீட்டுத் தருமாறு திருச்சி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த அழிஞ்சி மேட்டுப்பட்டியைச் சேர்ந்த கிருபாகரன் என்பவர், ஆலத்தூரில் உள்ள தனியார் பின்னலாடை நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். அதே நிறுவனத்தில் அழககவுண்டம்பட்டியைச் சேர்ந்த அழகர் என்பவரின் மகள் சிவரஞ்சனியும் வேலை செய்து வந்துள்ளார். அப்போது, கிருபாகரனுக்கும், சிவரஞ்சனிக்கும் காதல் ஏற்பட்டு இருவரும் ஒருவருக்கொருவர் மனதார காதலித்து வந்துள்ளனர்.

 சிங்கப்பூரில் வேலை

சிங்கப்பூரில் வேலை

இந்நிலையில், பின்னலாடை நிறுவனத்தில் பணியாற்றி வந்த கிருபாகரனுக்கு திடீரென சிங்கப்பூரில் வேலை கிடைத்ததால், அவர் சிங்கப்பூருக்கு சென்று விட்டார். வெளிநாட்டில் இருந்த போதிலும் சிவரஞ்சனியுடனான காதலை தொடர்ந்துள்ளார். இந்த காதல் விவகாரம் சிவசரஞ்சனியின் பெற்றோருக்கு தெரிய வரவே, உடனடியாக தனது மகளுக்கு ஏற்ற மணமகனை தேடி பிடிக்கும் வேலையில் இறங்கியுள்ளனர். திருமணத்தை விரைந்து முடிக்கவும் சிவரஞ்சனியின் பெற்றோர் தீவிரம் காட்டி வந்ததாக கூறப்படுகிறது.

தனக்கு வேறு இடத்தில் வரன் பார்ப்பதை அறிந்த சிவரஞ்சனி, உடனடியாக, சிங்கப்பூரில் பணியாற்றி வந்த காதலன் கிருபாகரனுக்கு இதுகுறித்து தகவல் கூறியுள்ளார். மனதார காதலித்து வந்த காதலிக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை தேடுவதால் அதிர்ச்சியடைந்த கிருபாகரன், அவசர அவசரமாக சிங்கப்பூரில் இருந்து கடந்த 5-ம் தேதி சொந்த ஊருக்கு வந்தடைந்தார்.

காதலியுடன் திருமணம்

காதலியுடன் திருமணம்

சொந்த ஊருக்கு வந்ததும் முதல் வேளையாக காதலி சிவரஞ்சனியை திருமணம் செய்ய கிருபாகரன் முடிவு செய்தார். இதற்காக திட்டமிட்டு, கடந்த 6-ம் தேதி, திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகேயுள்ள வீரநாயக்கன்பட்டியில் உள்ள ஒரு விநாயகர் கோவிலில் வைத்து காதலி சிவரஞ்சனியை முறைப்படி திருமணம் செய்துகொண்டார் கிருபாகரன்.

மணமகள் கடத்தல்

மணமகள் கடத்தல்

மகளுக்கு மாப்பிள்ளை பார்த்துக் கொண்டிருக்கும்போது, காதலுடன் திருமணம் ஆனதால் சிவரஞ்சனியின் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக தனது உறவினர்கள் 15 பேருடன் கார் மற்றும் இருசக்கர வாகனங்களில் வந்து, கிருபாகரன் வீட்டில் இருந்த சிவரஞ்சனியை வலுக்கட்டாயமாக அங்கிருந்து கடத்திச் சென்றனர். அப்போது அவர்களை தடுக்க முயன்றவர்களை, தாங்கள் கொண்டு வந்த ஆயுங்களை காட்டி மிரட்டி, புதுப்பெண்ணை இழுத்துச் சென்றுள்ளனர்.

காவல் நிலையத்தில் கணவர்

காவல் நிலையத்தில் கணவர்

திருமணம் ஆன மறுநாளே, தனது காதல் மனைவி, பெற்றோர்களால் கடத்தப்பட்டதால் அதிர்ச்சி அடைந்த காதலன் கிருபாகரன், தனது உறவினர்களுடன் உடனடியாக இதுகுறித்து புத்தாநத்தம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். கடத்தப்பட்ட காதல் மனைவியை உடனடியாக மீட்டுத்தருமாறு புகார் மனு அளித்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் சிவரஞ்சனியை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

காதலியை கரம்பிடிக்க சிங்கப்பூரில் இருந்து அவசர அவசரமாக பறந்த வந்து, திருமணம் செய்த நிலையில், மணமான மறுநாளே மணப்பெண்ணை உறவினர்கள் வலுக்கட்டாயமாக கடத்திச் சென்ற சம்பவம்
மணப்பாறை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+