ஹாலிவுட் ஸ்டைல்.. போலீஸையே மிரள வைக்கும் லலிதா ஜுவல்லரி திருட்டு..பெரிய நெட் ஒர்க் இருக்கும் போல!
நகை கொள்ளையில் ஊழியர்களிடம் விசாரணை நடந்து வருகிறது
Recommended Video
திருச்சி: ஹாலிவுட் டெக்னிக்குடன் நடந்த லலிதா ஜூவல்லரி கொள்ளை சம்பவத்தை பார்த்தால் பெரிய நெட் ஒர்க் உள்ளே இறங்கி வேலை பார்த்திருக்கும்போல தெரிகிறது. ஏகப்பட்ட சந்தேகங்கள் இந்த வழக்கில் நமக்கு ஏற்படுகிறது.
லலிதா ஜூவல்லரி ஒன்றும் சந்துபொந்தில் இல்லை. சத்திரம் பஸ் ஸ்டேண்டு அருகில்தான் செயல்பட்டு வருகிறது. பரபரப்பான இடம்தான் இது. இன்னும் சொல்ல போனால், இந்த நகரிலேயே இந்த கடைதான் ரொம்பவும் பிரம்மாண்டமான கடை.
நூற்றுக்கணக்கான ஊழியர்கள் பகல் நேரத்தில் இருந்தாலும், பகல், இரவு நேரங்களில் நிறைய வாட்ச்மேன்கள் இருப்பார்களாம். குறிப்பாக நைட் நேரத்தில் குறைந்தது 6 பேராவது டியூட்டி பார்ப்பார்களாம். இப்படி சுவரை ஓட்டை போட்டுக் கொண்டு உள்ளே வந்து சாவகாசமாக திருடி சென்றுள்ளது எப்படி இவர்களுக்கு தெரியாமல் இருந்திருக்கும் என தெரியவில்லை.

சுவரில் ஓட்டை
கடையின் பின்புறம் ஏசி மெஷின்கள் உள்ளன. இந்த இடத்தில் பகலிலேயே ஆள் நடமாட்டம் இருக்காதாம். அதனால்தான் இதை நன்றாக நோட்டமிட்டு, ஏசி மெஷின்கள் இருக்கும் சுவர் வழியாக ஓட்டையை போட்டு உள்ளே குதித்துள்ளனர். 2 அடிக்கு விசாலமாக அந்த சுவரில் ஓட்டையை போட்டுள்ளார்கள் என்றால், இது ஒரே நாளில் நடந்திருக்க வாய்ப்பே இருக்காது.

அர்த்த ராத்திரி
இவ்வளவு பெரிய துளை போட நேரம்பிடிக்கும், துளை போட்டாலும் சத்தம் கேட்கவே செய்யும். அதனால் கொஞ்ச கொஞ்சமாகத்தான் பிளான் பண்ணி துளை போட்டிருக்க முடியும். கொஞ்ச நேரத்துக்குள்ளேயே, ஒரு ஆள் நுழையும் அளவுக்கு, அர்த்த ராத்திரியில் ஒரு துளையை போட சான்ஸே இல்லை.

100 கிலோ
இந்த பில்ட்டிங் சுற்றி 60க்கும் மேற்பட்ட சிசிடிவி காமிராக்கள் இருந்தாலும், 2 பேர் உருவம் மட்டுமே பதிவாகி உள்ளது. உள்ளே குதித்து வந்தது 2 பேர் என்றாலும், வெளியில் பலர் இந்த கொள்ளைக்கு உதவி இருக்கலாம். ஏனென்றால், 100 கிலோ நகைகளை வெறும்2 பேர் கொண்டு செல்ல முடியாது.

செக்யூரிட்டிகள்
இதைதவிர செக்யூரிட்டிகள் மீதும் சந்தேகம் இருந்து கொண்டே இருக்கிறது. கடைக்கு முன் பக்கம் வர வாய்ப்பில்லை, மொட்டைமாடி வழியாகவோ, பின் பக்கமோ வழி இல்லை என்பதால்தான் ஓட்டை போடும் முடிவுக்கு வந்துள்ளனர். இந்த விஷயம் கடை சம்பந்தப்பட்டவர்களுக்குதான் நன்கு தெரியும் வாய்ப்பு உள்ளது. கடையில் உள்ள ஏசி மெஷின் வழியாக, ஊழியர்களின் உதவியில்லாமல் துளை போட முடியாது.

ஸ்குரூ டிரைவர்
இப்போதைக்கு ஒரு க்ளூவும் கிடைக்கவில்லை. சந்தேகத்தில் 6 பேர் பிடிபட்டுள்ளனர். ஆனால் அவர்கள்தானா என்று முடிவாகவில்லை. கைரேகையும் கிடைக்கவில்லை.. தடயங்களும் கிடைக்கவில்லை.. மோப்ப நாய் அர்ஜுன் வந்தும் பிரயோஜனம் இல்லை.. இப்போதைக்கு ஒரே ஒரு ஸ்க்ரூ டிரைவர் மட்டுமே கிடைத்துள்ளதாம். அதனால் கடையின் செக்யூரிட்டிகள் உட்பட கிடுக்கிப்பிடி விசாரணையை போலீசார் கையில் எடுத்துள்ளனர்.
-
திருச்சியில் கார் ஓட்டுநரால் 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. மது கொடுத்து பாலியல் தொல்லை! -
திருச்சி நர்சிங் மாணவி உயிரிழப்புக்கு தரமற்ற மருந்தே காரணம்.. ஆய்வறிக்கையில் வெளியான அதிர்ச்சி தகவல் -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
திருச்சி மேடையில் அதை பேசியிருக்கனும்.. முதல்வர் விஜய்யின் உரை ஏமாற்றம்! ஆதங்கப்பட்ட அன்புமணி -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications