கொள்ளையடிக்கப்பட்ட பணம்.. நகைகளை திருவண்ணாமலையில் பதுக்கியதாக சுரேஷ் தகவல்.. விரைந்தது தனிப்படை
Recommended Video
திருச்சி: திருச்சி நகைக்கடை கொள்ளையில் கைது செய்யப்பட்ட சுரேஷை தனிப்படை போலீசார் திருவண்ணாமலை அழைத்து செல்கிறார்கள். கொள்ளையடித்த பணம் மற்றும் நகைகளை திருவண்ணாமலையில் பதுக்கிவைத்துள்ளதாக, போலீஸ் விசாரணையில் சுரேஷ் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள லலிதா ஜூவல்லரி நகைக்கடையில், கடந்த 2-ம் தேதி அதிகாலை மிகப்பெரிய கொள்ளை சம்பவம் நடந்தது.இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் திவிர வாகன சோதனை நடத்தினர்.
திருவாரூர் மடப்புரம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்ற மணிகண்டன் என்பவர் போலீஸை பார்த்ததும் தப்பி ஓட முயன்றார். அவரை போலீசார் விரட்டிப் பிடித்தனர். ஆனால், அவரின் கூட்டாளியும் நகைக்கடைக் கொள்ளையருமான சுரேஷ் தப்பினார்.

சுரேஷ்- முருகன்
இதையடுத்து . போலீஸார், மணிகண்டனைப் பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர் வைத்திருந்த அட்டைப்பெட்டியில் 5 கிலோ மதிப்பிலான தங்க நகைகள் மட்டுமே இருந்தது. இதையடுத்து அவரிடம் நடந்த விசாரணையில் முருகன் மற்றும் சுரேஷ் ஆகியோருடன் இணைந்து கொள்ளை சம்பவத்தில் மணிகண்டன் ஈடுபட்டது தெரியவந்தது.

செங்கத்தில் சரண்
இதற்கிடையே சுரேஷின் தாய் கனகவல்லி மற்றும் மணிகண்டன் ஆகியோரை கைது செய்த போலீசார் திருச்சி குற்றவியல் நீதிமன்ற நீதிபதி திரிவேணியின் முன்பு கடந்த 5ம் தேதி ஆஜர்படுத்தினர். தலைமறைவாக இருந்த சுரேஷ், கடந்த 10-ம் தேதி திருவண்ணாமலை செங்கம் நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவர் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார். அவரை நாள் காவலில் எடுத்து விசாரித்து வரும் திருச்சி போலீசார் நகைகள் தொடர்பாக விசாரித்து வருகின்றனர்.

நகைகள் பதுக்கல்
இந்நிலையில் கொள்ளையடித்த பணம் மற்றும் நகைகளை திருவண்ணாமலையில் பதுக்கிவைத்துள்ளதாக, போலீஸ் விசாரணையில் சுரேஷ் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதன்பேரில் சுரேஷை தனிப்படை போலீசார் திருவண்ணாமலை அழைத்து செல்கிறார்கள்.

12 கிலோ தங்கம்
முன்னதாக திருச்சி நகைக்கடை கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளியான முருகன், கடந்த 11ஆம் தேதி பெங்களூரு நீதிமன்றத்தில் சரணடைந்தார். இதனிடையே அவர் பெங்களூருவில் நடந்த பல்வேறு கொள்ளை வழக்குகளில் ஈடுபட்டுள்ளார். பெங்களூருவில் மட்டும் 119 வழக்குகள் முருகன் மீது உள்ளதாக கர்நாடகா போலீசார் தெரிவித்துள்ளனர். முருகன் கொடுத்த தகவலின்படி, திருவெறும்பூர் அடுத்த பூசத்துறை காவிரி ஆற்றுப்படுகையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ. 4.30 கோடி மதிப்பிலான 12 கிலோ தங்க நகைகளை பெங்களூரு போலீசார் சில நாட்களுக்கு முன்பு கைப்பற்றி உள்ளனர். அவரிடம் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.
-
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம்












Click it and Unblock the Notifications