மதிமுக வசமாகும் திருச்சி? சூறாவளியாய் சுழலும் துரை வைகோ! ஐயூஎம்எல் நிர்வாகிகளுடன் முக்கிய சந்திப்பு
திருச்சி: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் திருச்சி தெற்கு மாவட்ட நிர்வாகிகளை அலுவலகத்தில் சந்தித்து வாக்கு சேகரித்தார் திருச்சி லோக்சபா தொகுதி வேட்பாளர் துரை வைகோ.
கடந்த 2019ம் ஆண்டை போல இந்த ஆண்டும் நாடு முழுவதும் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டை பொறுத்த அளவில், வரும் ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதில் திமுக 21 தொகுதிகளும், அதன் கூட்டணி கட்சிகள் மற்ற தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. கூட்டணியில் உள்ள மதிமுகவுக்கு கடந்த முறை ஈரோடு தொகுதி ஒதுக்கப்பட்டிருந்தது. இந்த முறை திருச்சி கொடுக்கப்பட்டிருக்கிறது.

வேட்பளராக மதிமுகவின் தலைமைக் கழகச் செயலாளர் துரை வைகோ போட்டியிடுகிறார். இந்நிலையில், திருச்சி பாலக்கரையில் உள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அலுவலகத்தில் நேற்று மாலை துரை வைகோ வாக்கு சேகரித்திருக்கிறார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் திருச்சி தெற்கு மாவட்ட நிர்வாகிகளை சந்தித்த துரை வைகோ, அவர்களுடன் கலந்துரையாடி வாக்கு சேகரித்திருக்கிறார்.
அவருக்கு தெற்கு மாவட்டம் சார்பில் தெற்கு மாவட்ட தலைவர் கே.எம்.கே.ஹபீபுர் ரஹ்மான் பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார். பின்னர் பேசிய ரஹ்மான், திருச்சி தெற்கு மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் வெற்றிக்காக பாடுபடுவார்கள் என துரை வைகோவுக்கு உறுதி அளித்தார்கள்.
இந்த நிகழ்ச்சியில் மதிமுக மாநில துணைப் பொதுச் செயலாளர் டாக்டர் ரொஹையா, மதிமுக திருச்சி மாநகர மாவட்ட செயலாளர் வெல்லமண்டி சோமு, சட்டமன்ற உறுப்பினர் பூமிநாதன், மாநில துணைச் செயலாளர் ஹாஜதி வி.எம்.பாரூக், தெற்கு மாவட்ட செயலாளர் ஜி.எச்.சையது ஹக்கீம், தெற்கு மாவட்ட பொருளாளர் பி.எம்.ஹுமாயூன், சுதந்திர தொழிலாளர் யூனியனின் மாநில துணைத்தலைவர் ஷேக் முகமது கௌஸ், தெற்கு யூத் லீக் மாவட்ட தலைவர் அஜீம் , தெற்கு யூத் லீக் மாவட்ட செயலாளர் மைதீன் அப்துல் காதர், தெற்கு மாவட்டத் துணைத் தலைவர் ஏ.கே.அலாவுதீன், தெற்கு யூத் லீக் மாவட்ட துணைத் தலைவர் செய்யது முஹம்மது, தெற்கு மாவட்ட எம். எஸ். எப். அமைப்பு குழு உறுப்பினர்கள் மஹாதீர் முஹம்மத், உபயதுல்லா ஜுனைத் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.

மேலும் வடக்கு மாவட்ட செயலாளர் நிஜாமுதீன், தெற்கு எஸ். டி. யூ. மாவட்ட துணைத் தலைவர் சையது முஸ்தபா, தெற்கு மாவட்டத் துணைச் செயலாளர் சாதிக்குள் அமீன், 51 வது வார்டு தலைவர் என். கே. அமீருதீன, ஆழ்வார்தோப்பு வார்டு தலைவர் ஆரிப், வார்டு செயலாளர் ரோஷன் முஸ்தபா, தமிழ்நாடு தகவல் தொழில் நுட்ப அணி திருச்சி மாவட்ட தலைவர் கே. சம்சுதீன் , சிந்தாமணி வார்டு செயலாளர் ஷாஜகான், எம். எஸ். எப். முனீஸ் கனி, உனேஷ் கனி, திருச்சி தெற்கு வர்த்தக அணி மாவட்ட துணை செயலாளர் முஃபசீர் இளைஞர் அணி யாசர் அரஃபாத், சாய் மற்றும் மாவட்ட மாநில கூட்டணி கட்சியை சார்ந்த நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
தமிழகத்தின் மிக முக்கிய, மத்திய மாவட்டமான திருச்சியில் துரை வைகோ வெற்றி பெற தொடர்ச்சியாக பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முன்னதாக மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்குவதில் தாமதம் ஏற்பட்டிருந்த நிலையில், இன்று தீப்பெட்டி சின்னம் ஒதுக்கப்பட்டிருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. இதனையடுத்து தீப்பெட்டி சின்னத்துடன் மதிமுகவினர் களமிறங்கியுள்ளனர்.












Click it and Unblock the Notifications