அஜாக்கிரதையால் தொலைத்த பணம்! ஜாக்கிரதையுடன் ஒப்படைப்பு! மெக்கானிக் செயலால் திருச்சி நெகிழ்ச்சி!
திருச்சி: திருச்சியில் பேருந்து நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த பணத்தை எடுத்து பொறுப்புடன் காவல்நிலையத்தில ஒப்படைத்த மெக்கானிக்கை போலீசார் பாராட்டி கவுரவித்துள்ளனர்.
மேலும் கேட்பாரற்று கிடந்து கண்டெடுக்கப்பட்ட பணத்துக்கு சொந்தக்காரர் யார் என கண்டெறிந்து உரியவரிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

அனாவசியமாக கிடந்த பணம்
திருச்சி மாவட்டம் ஆலம்பட்டியை சேர்ந்த அழகர்சாமி மெக்கானிக் கடை வைத்துள்ளார். திங்கட் கிழமையன்று அழகர்சாமி வழக்கம்போல் கடைக்கு வருவதற்காக பேருந்தில் இருந்து இறங்கியபோது பேப்பர் சுற்றிய ஒரு பொட்டலம் இருப்பதை பார்த்தார். பொட்டலம் என்றாலே ஏதாவது வெடிகுண்டாக இருக்குமோ என்று எடுக்காமல் கடந்து செல்பவர்கள அதிகம். ஆனால் அதை கையில் எடுத்து அழகர்சாமி பார்த்தபோது கட்டு கட்டாக பணம் இருந்துள்ளது.

பணம் போலீசிடம் ஒப்படைப்பு
அதில் எவ்வளவு பணம் இருக்கிறது என்றுகூட எண்ணிக்கூட பார்க்காமல் உடனடியாக கண்டொன்மென்ட் காவல்நிலையத்திற்கு சென்று போலீசாரிடம் ஒப்படைத்தார் மெக்கானிக். இதை அடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் மணப்பாறையை சேர்ந்த வழக்கறிஞர் மனோ விஜயசங்கர் பணத்தை தொலைத்துவிட்டு தேடிவருவதாக தெரியவந்துள்ளது.

உரியவரிடம் ஒப்படைப்பு
இந்த விவரம் அறிந்த கண்டோன்மென்ட் காவல் ஆய்வாளர் வேல்முருகன் விஜயசங்கரை அழைத்து பேருந்து நிலையத்தில் கண்டெடுக்கப்பட்ட பணத்தின் அடையாளத்தை கூறுமாறு கேட்டார். விஜயசங்கர் சொன்ன அடையாளங்கள் பொருந்திப் போனதால் அவரிடம் பணம் ஒப்படைக்கப்பட்டது.

மெக்கானிக்குக்கு பாராட்டு
அதுமட்டுமின்றி பணம் கிடைத்தவுடன் எடுத்து பாக்கெட்டில் போட்டுக் கொண்டு செல்லாமல் காவலரிடம் ஒப்படைத்த இருசக்கர வாகன மெக்கானிக் அழகர்சாமியை பாராட்டி, சால்வை அணிவித்து கவுரவித்தார் காவல் ஆய்வாளர் வேல்முருகன்.

சமூக வலைதளவாசிகளும் பாராட்டு
1 ரூபாய் கீழே கிடைத்தால் கூட தொலைத்தவனின் விதி என்று எடுத்து பாக்கெட்டில் போட்டுக் கொண்டு செல்பவர்கள் மத்தியில், உழைக்காமல் கிடைக்கும் பணத்தால் உறக்கம் வராது எண்ணி அந்த பணத்தை உரியவரிடம் ஒப்படைக்க உதவி மெக்கானிக்கை சமூக வலைதளங்களில் பாராட்டி வருகின்றனர். இதன் மூலம் அழகர்சாமி ரிப்பேர் செய்வது பழுதான பைக்குகளை மட்டுமல்ல; பழுதான எண்ணங்கள் கொண்ட இதயங்களையும்தான்.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications