Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கிளாம்பாக்கம் தோற்கும்.. திருச்சி பஞ்சப்பூர் பஸ் ஸ்டாண்டில்.. தமிழகத்தில் எங்குமே இல்லாத வசதிகள்

Subscribe to Oneindia Tamil

திருச்சி: திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் பஞ்சப்பூர் என்ற இடத்தில் சுமார் 40 ஏக்கர் பரப்பளவில் ரூ.408 கோடி திட்ட மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த பஸ் நிலையம் அமைக்கப்பட்டது. இது தமிழகத்திலேயே முதன்முதலாக முற்றிலும் குளிர்சாதன வசதியுடன் கட்டப்பட்ட பஸ் நிலையம் ஆகும். இங்கு 401 பேருந்துகளை ஒரே நேரத்தில் நிறுத்த முடியும். 2000 இருசக்கர வாகனங்களை நிறுத்த வசதி உள்ளது. ஏறவும் இறங்கவும் லிப்டுகள், பெண்களுக்கு 81, ஆண்களுக்கு 52 கழிப்பறைகள்
மாற்றுத் திறனாளிகளுக்காக 4 மற்றும் திருநங்கை பிரிவுக்காக 2 தனி கழிப்பறைகள் என பிரம்மாண்டமாக உள்ளது.

திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் பஞ்சப்பூர் என்ற இடத்தில் சுமார் 40 ஏக்கர் பரப்பளவில் ரூ.408 கோடி திட்ட மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பேருந்து நிலையத்திற்கு முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி ஒருங்கிணைந்த பேருந்து முனையம்' என தமிழக அரசால் பெயரிடப்பட்டது. இந்த பஸ் நிலையத்தை கடந்த மே மாதம் 9-ந் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

Trichy Panchapur bus stand has facilities that are not found anywhere else in Tamil Nadu

திறப்பு

ஆனால் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரவில்லை.. பஸ் நிலையத்தை பராமரிப்பதற்கான தனியார் ஒப்பந்த டெண்டர் மற்றும் நிலுவையில் இருந்த சிறு, சிறு வேலைகள் காரணமாக பஸ் நிலையம் செயல்பாட்டுக்கு கொண்டுவர முடியாத நிலை இருந்தது. இந்நிலையில் ஒருங்கிணைந்த பஸ் நிலையம் ஜூலை மாதம் 16-ந் தேதி முதல் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வரும் என அறிவிக்கப்பட்டது.

உணவகங்கள்

அதன்படியே ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் திருச்சி பஞ்சப்பூரில் நேற்று செயல்பாட்டிற்கு வந்துள்ளது. நேற்று காலை 6 மணி அளவில் தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு பேருந்து நிலையத்தை தொடங்கி வைத்தார். இந்த பஞ்சப்பூர் பேருந்து நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக உணவகங்கள், டீ மற்றும் பிஸ்கட் உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் அதிக அளவில் உள்ளன.

இலவச பேட்டரி கார்

மேலும் ஆவின் பால் விற்பனை நிலையங்களும் பயணிகளின் தேவையான இடங்களில் திறக்கப்பட்டிருக்கின்றன மேலும் அனைத்து நடைமேடைகளிலும் குடிநீர் வசதி, ஆண்கள் மற்றும் பெண்களுக்காக தனித்தனி கழிப்பறைகளும் அமைக்கப்பட்டிருக்கின்றன. வயதானவர்கள் மற்றும் நடக்க முடியாதவர்கள் ஒரு நடைமேடையில் இருந்து இன்னொரு நடைமேடைக்கு செல்வதற்கு வசதியாக இலவச பேட்டரி கார்களும் இயக்கப்படுகின்றன. தரைத்தளத்தில் இருந்து முதல் தளத்திற்கு செல்வதற்கு லிப்ட்' மற்றும் எஸ்கலேட்டர் வசதிகளும் உள்ளன.

இதுவரை திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்பட்ட அனைத்து பஸ்களும் நேற்று முதல் ஒருங்கிணைந்த பஸ் நிலையத்தில் இருந்தே புறப்பட்டு செல்கின்றன. பஸ் நிலையத்தின் தரைத்தளத்தில் மொத்தம் 8 நடைமேடைகள் உள்ளன.

ஒவ்வொரு நடைமேடையில் இருந்தும் எந்தெந்த ஊர்களுக்கு பஸ்கள் புறப்படும், அவை புறப்படும் நேரம் ஆகிய அனைத்து விவரங்களும் பஸ் நிலையத்தின் பிரதான நுழைவு வாயில் அருகில் அகன்ற திரையில் டிஜிட்டல் முறையில் அறிவிப்பு வெளியிடப்பட்டு வருகீறது. இது தவிர ஆங்காங்கே டிஜிட்டல் அறிவிப்பு பலகைகளும் வைக்கப்பட்டு உள்ளன. ஒலிபெருக்கிகளிலும் ஊர்களின் பெயர்கள் அறிவிக்கப்படுகிறது. மேலும் பயணிகளுக்கு உதவுவதற்காக ஹெல்ப் டெஸ்க்' அமைக்கப்பட்டு அதில் உள்ள பணியாளர்கள் பயணிகளுக்கு வழிகாட்டுகிறார்கள்.

அனைத்து பேருந்துகளும்

சென்னை, பெங்களூர், திருப்பதி, கோவை, ஈரோடு, சேலம், நாமக்கல், திண்டுக்கல்,மதுரை, தேனி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை உள்பட அனைத்து நகரங்களுக்கும் பஸ்கள் பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பஸ் நிலையத்தில் இருந்தே புறப்பட்டு செல்கின்றன. இதில் எந்தெந்த பஸ்கள் எந்தெந்த வழியாக செல்லும், எந்தெந்த வழியாக உள்ளே வரும் என்கிற விவரங்களும் தெளிவாக அறிவிக்கப்பட்டு உள்ளன.

டவுன் பஸ்கள்

பஞ்சப்பூர் பேருந்து நிலையத்தின் முதல் தளத்தில் டவுன் பஸ்களுக்காக 4 நடைமேடைகள் உள்ளன. இங்கிருந்து மத்திய பஸ் நிலையம், ஜங்ஷன், பாலக்கரை, தில்லைநகர், உறையூர், சத்திரம் பஸ் நிலையம், ஸ்ரீரங்கம், சமயபுரம் மற்றும் திருவெறும்பூர், துவாக்குடி, விமான நிலையம் உள்ளிட்ட இடங்களுக்கு டவுன் பஸ்கள் புறப்பட்டு சென்று வருகின்றன.

வாகனம் நிறுத்த வசதி

திருச்சி பஞ்சப்பூர் பேருந்தில் வாகன வசதி என்பது மிகப்பெரிய அளவில் செய்யப்பட்டுள்ளது. பேருந்து நிலையத்திற்கு வரும் பயணிகள் தங்களது இரு சக்கர வாகனங்கள் மற்றும்கார்களை நிறுத்துவதற்கு தரை கீழ் தளத்தில் பார்க்கிங் வசதி உள்ளது. இதில் சுமார் 2 ஆயிரம் இருசக்கர வாகனங்களை நிறுத்த முடியும். பார்க்கிங் பகுதியில் இருந்து பயணிகள் நேரடியாக லிப்ட் மற்றும் எஸ்கலேட்டர் மூலம் தரைத்தளம் மற்றும் முதல் தளத்தில் உள்ள நடைமேடைகளுக்கு நேரடியாக செல்லும் வசதியும் செய்யப்பட்டிருக்கிறது.

என்னென்ன வசதிகள்

ஒட்டுமொத்தமாக 401 பேருந்து நிறுத்துமிடங்கள் உள்ள இந்த மையத்தில், நீண்ட தூரம், குறுகிய தூரம் மற்றும் நகர பேருந்துகளுக்கே தனித்தனியாக இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கின்றன. பயணிகள் வசதிக்காக பல்வேறு சிறப்பு அம்சங்கள் கொண்ட இந்த பேருந்து முனையத்தில் ஏறவும் இறங்கவும் லிப்டுகள் வசதிகள் உள்ளன.

பெண்களுக்கு 81, ஆண்களுக்கு 52 கழிப்பறைகள், மாற்றுத் திறனாளிகளுக்காக 4 மற்றும் திருநங்கை பிரிவுக்காக 2 தனி கழிப்பறைகள், என ஒட்டுமொத்தமாக 173 சிறுநீர் கழிவறைகள் மற்றும் 21குளியல் அறைகள் உள்ளன. இதுதவி வர்த்தக கடைகள், காத்திருப்பு மண்டபங்கள் மற்றும் ஆட்டோ நிறுத்தங்கள் இவை அனைத்தும் கட்டமைக்கப்பட்டுள்ளன, இது தமிழ்நாட்டில் முதன்முறையாக உள்ளே உள்ள கடைகள் மற்றும் உணவக பகுதிகளில் குளிர்சாதன வசதியுடன் அறிமுகமாகும் கட்டமைப்பு கொண்ட பேருந்து நிலையம்மாக பஞ்சப்பூர் பேருந்து நிலையம் இருக்கிறது.

இணைப்பு சாலை

திருச்சியின் புதிய பேருந்து நிலையத்திற்கும் நகர மையத்திற்கும் இடையிலான தொடர்பை மேம்படுத்தும் வகையில், 9.8 கிலோமீட்டர் நீளமுள்ள இணைப்பு சாலை உருவாக்கப்படுகிறது. இதன் முதல் கட்டத்திற்கு ரூ.81.7 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மொத்த திட்ட மதிப்பு ரூ.367 கோடியாகும். இதில் மேம்பாலம், பாதசாரி நடைபாதை, மழைநீர் வடிகால் போன்ற அம்சங்களும் இடம்பெறுகின்றன.

திருச்சி பழைய பேருந்து நிலையம் என்னவாகும்

இந்நிலையில், 1972ம் ஆண்டு முதல் செயல்பட்டு வந்த திருச்சி பழைய மத்திய பேருந்து நிலையம் தற்போது வணிக வளாகமாக மாற்றப்பட உள்ளதாக திருச்சி மாநகராட்சி அறிவித்துள்ளது. வர்த்தக வளாகங்கள், அலுவலகங்கள் மற்றும் பொழுதுபோக்கு மையங்கள் என்பவற்றுடன் கூடிய வடிவமைப்புக்கான ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+