பஞ்சப்பூர் பேருந்து நிலையம் வந்த நேரம்.. திருச்சி அடியோடு மாறிடுச்சு பாருங்க.. வருது பிக் ப்ராஜெக்ட்

Subscribe to Oneindia Tamil

திருச்சி: திருச்சி பஞ்சப்பூரில் புதிய ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் செயல்படத் தொடங்கியுள்ள நிலையில், அரை வட்டச் சாலைத் திட்டம் மற்றும் அதனுடன் திட்டமிடப்பட்டுள்ள மேம்பாலங்கள் கட்டுவதற்கான பணிகள் தொடங்கி உள்ளன.

திருச்சியைச் சுற்றியுள்ள முக்கிய தேசிய நெடுஞ்சாலைகளை இணைக்கும் அரை வட்டச் சாலைக்கான விரிவான திட்ட அறிக்கை (DPR) ஆகஸ்ட் இறுதிக்குள் இறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான ஆலோசகர்கள் விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்கும் பணியின் இறுதிக்கட்டத்தில் உள்ளனர் என்று தேசிய நெடுஞ்சாலை ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Panjappur Trichy

சென்னை-திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, நீண்டகாலமாக நிலுவையில் உள்ள அரை வட்டச் சாலைத் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திட்டத்திற்கான டெண்டரை இந்த நிதியாண்டிலேயே வழங்க NHAI ஆர்வமாக உள்ளது என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பஞ்சப்பூரில் பேருந்து நிலையம்

இந்த திட்டத்தில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்திற்கு அருகில் மேம்பாலம் அமைப்பதும் அடங்கும். இந்த மேம்பாலம் நெடுஞ்சாலையில் செல்லும் வாகன போக்குவரத்திற்கு உதவும். மேலும், துவாக்குடி மற்றும் பஞ்சப்பூர் இடையே உள்ள இரண்டு வழிப்பாதையை நான்கு வழிப்பாதையாகவும், பஞ்சப்பூர் மற்றும் திண்டுக்கரை இடையே நான்கு வழிப்பாதையாகவும் மாற்ற NHAI திட்டமிட்டுள்ளது.

சுமார் 45 கி.மீ நீளமுள்ள இந்த புறவழிச்சாலை, துவாக்குடியிலிருந்து திண்டுக்கரை வரை, மாத்தூர் மற்றும் பஞ்சப்பூர் வழியாக தஞ்சாவூர், காரைக்குடி, மதுரை, திண்டுக்கல் மற்றும் கரூர் ஆகிய ஐந்து தேசிய நெடுஞ்சாலைகளை இணைக்கும் அரை வட்டச் சாலையின் ஒரு பகுதியாக மாறும். இந்த சாலை அதிவேக வாகனப் போக்குவரத்திற்காக கட்டுப்படுத்தப்பட்ட அணுகுமுறையுடன் இருக்கும்.

பஞ்சப்பூர்-திண்டுக்கல் புறவழிச்சாலை திட்டம் 15 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டாலும், பல ஆண்டுகளாக நிச்சயமற்ற நிலையில் இருந்தது. திருச்சி-கரூர் சாலையை NHAI அகலப்படுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த பணிகள் தொடங்கப்பட்டன. ஆனால், இந்த திட்டம் 2010-ம் ஆண்டு நிறுத்தப்பட்டது. ஏனெனில், இந்த சாலைகள் திருச்சி மாவட்டத்தில் உள்ள கோத்தமங்கலம், கல்லுக்குடி மற்றும் புங்கனூர் ஆகிய நீர்நிலைகளை பாதிக்கும் வகையில் இருந்ததால், சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை இந்த திட்டத்திற்கு தடை விதித்தது. நீர் ஆதாரங்களை பாதிக்காத வகையில் சாலை அமைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் பிறகு, புதிய பாதை இறுதி செய்யப்பட்டு, திட்டத்தை செயல்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டது.

தற்போது, இந்த புறவழிச்சாலை பிரிவில் தேவையான சில மாற்றங்களைச் செய்ய விரிவான திட்ட அறிக்கை ஆலோசகர் பணியாற்றி வருகிறார். இந்த திட்டத்திற்கான டெண்டரை இந்த ஆண்டு இறுதியில் NHAI வெளியிடும் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பஞ்சப்பூர் பேருந்து நிலையம்

திருச்சிராப்பள்ளி மத்திய பேருந்து நிலையத்தை முனையமாக (Terminus) கொண்டு இயக்கப்படும் அனைத்து புறநகர பேருந்துகள் மற்றும் நகர பேருந்துகள் பஞ்சப்பூர் முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி ஒருங்கிணைந்த பேருந்து முனையத்திற்கு நேற்று முதல் மாற்றம் செய்யப்படுகிறது. பல லட்சம் பயணம் செய்த , திருச்சியின் அடையாளங்களில் ஒன்றாக இருந்த மத்திய பேருந்து நிலையம் இனி கொஞ்சம் கொஞ்சமாக கைவிடப்படும். ஏற்கனவே அங்கு செயல்படும் பேருந்துகள் பஞ்சப்பூருக்கு மாற்றப்பட்டுவிட்டது.

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் 09.05.2025 அன்று திறந்தவைக்கப்பட்ட முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தில் பயணிகள் பயன்படுத்தும் வகையில் அனைத்து பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதை தொடர்ந்து திருச்சிராப்பள்ளி மத்திய பேருந்து நிலையத்தை முனையமாக (Terminus) கொண்டு இயக்கப்பட்ட அனைத்து புறநகர பேருந்துகள் மற்றும் நகர பேருந்துகள் முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி ஒருங்கிணைந்த பேருந்து முனையத்திற்கு நேற்று முதல் மாற்றம் செய்யப்படுகிறது.

திருச்சிராப்பள்ளி மத்திய பேருந்து நிலையத்தை முனையமாக (Terminus) கொண்டு இயக்கப்படும் அனைத்து புறநகர பேருந்துகள் மற்றும் நகர பேருந்துகளும் முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி ஒருங்கிணைந்த பேருந்து முனையத்திற்கு நேற்று முதல் மாற்றம் செய்யப்படுகிறது. அதன் விபரம் வருமாறு:

விரைவுபேருந்துகள் / புறநகரப் பேருந்துகள்

சென்னை/திருப்பதி/வேலூர்/விழுப்புரம்/காஞ்சிபுரம்/புதுச்சேரி மார்க்கம்
மேற்கண்ட வழித்தடங்களில் திருச்சி நோக்கி உள்வரும் அனைத்து பேருந்துகளும் நெ.1 டோல்கேட், பழையபால்பண்ணை,தேசிய நெடுஞ்சாலை வழியாக பஞ்சப்பூர் முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி ஒருங்கிணைந்த பேருந்து முனையத்திற்கு செல்ல வேண்டும். பஞ்சப்பூர் முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி ஒருங்கிணைந்த பேருந்து முனையத்திலிருந்து தேசிய நெடுஞ்சாலை வழியாக திரும்பச் செல்ல வேண்டும்.

தஞ்சாவூர்/கும்பகோணம்/வேளாங்கண்ணி/காரைக்கால் மார்க்கம்

மேற்கண்ட வழித்தடங்களில் திருச்சி நோக்கி உள்வரும் அனைத்து பேருந்துகளும் துவாக்குடி, திருவெறும்பூர், பழைய பால்பண்ணை, டிவிஎஸ் டோல்கேட், மன்னார்புரம் ரவுண்டானா வழியாக பஞ்சப்பூர் முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி ஒருங்கிணைந்த பேருந்து முனையத்திற்கு செல்லவேண்டும். பஞ்சப்பூர் முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி பேருந்து முனையத்திலிருந்து தேசிய நெடுஞ்சாலை, டிவிஎஸ் டோல்கேட், பழைய பால்பண்ணை வழியாக திரும்பச் செல்ல வேண்டும்.

நாமக்கல்/சேலம் /பெங்களூரு மார்க்கம்

மேற்கண்ட வழித்தடங்களில் திருச்சி நோக்கி உள்வரும் அனைத்து பேருந்துகளும் நெ.1 டோல்கேட், பழைய பால்பண்ணை, டிவிஎஸ் டோல்கேட், மன்னார்புரம் ரவுண்டானா வழியாக பஞ்சப்பூர் முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி ஒருங்கிணைந்த பேருந்து முனையத்திற்கு செல்ல வேண்டும். பஞ்சப்பூர் முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி ஒருங்கிணைந்த பேருந்து முனையத்திலிருந்து தேசிய நெடுஞ்சாலை,டிவிஎஸ் டோல்கேட், क्र.1 டோல்கேட் வழியாக திரும்பச் செல்லவேண்டும்.

புதுக்கோட்டை/அறந்தாங்கி/ராமேஸ்வரம் மார்க்கம்

மேற்கண்ட வழித்தடங்களில் திருச்சி நோக்கி உள்வரும் அனைத்து பேருந்துகளும் விமான நிலையம், டிவிஎஸ் டோல்கேட், மன்னார்புரம் ரவுண்டானா வழியாக பஞ்சப்பூர் முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி ஒருங்கிணைந்த பேருந்து முனையம் வரை செல்ல வேண்டும். பஞ்சப்பூர் முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி ஒருங்கிணைந்த பேருந்து முனையத்திலிருந்து இதே வழித்தடத்தில் திரும்பச் செல்ல வேண்டும்.

கரூர்/ஈரோடு/திருப்பூர்/கோயம்புத்தூர் மார்க்கம்

மேற்கண்ட வழித்தடங்களில் திருச்சி நோக்கி உள்வரும் அனைத்து பேருந்துகளும் சத்திரம் பேருந்து நிலையம், கரூர் புறவழிச்சாலை, சாஸ்திரி சாலை, மாவட்ட நீதிமன்றம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், வ.உ.சிசாலை, மத்திய பேருந்து நிலையம், மன்னார்புரம் ரவுண்டானா வழியாக பஞ்சப்பூர் முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி ஒருங்கிணைந்த பேருந்து முனையம் வரை செல்ல வேண்டும். பஞ்சப்பூர் முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி ஒருங்கிணைந்த பேருந்து முனையத்திலிருந்து இதே வழித்தடத்தில் திரும்பச் செல்லவேண்டும்.

மணப்பாறை/திண்டுக்கல்/பழனி/குமுளி மார்க்கம்

மேற்கண்ட வழித்தடங்களில் திருச்சி நோக்கி உள்வரும் அனைத்து பேருந்துகளும் கருமண்டபம், மன்னார்புரம் ரவுண்டானா வழியாக பஞ்சப்பூர் முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி ஒருங்கிணைந்த பேருந்து முனையத்திற்கு செல்ல வேண்டும். இவை பஞ்சப்பூர் முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி ஒருங்கிணைந்த பேருந்து முனையத்திலிருந்து இதே வழிதடத்தில் திரும்பச் செல்ல வேண்டும்.

மதுரை/தூத்துக்குடி/விருதுநகர்/திருநெல்வேலி மார்க்கம்

மேற்கண்ட வழித்தடங்களில் திருச்சி நோக்கி உள்வரும் அனைத்து பேருந்துகளும் தேசிய நெடுஞ்சாலை வழியாக பஞ்சப்பூர் முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி ஒருங்கிணைந்த பேருந்து முனையம் வரை செல்ல வேண்டும். இவை பஞ்சப்பூர் முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி ஒருங்கிணைந்த பேருந்து முனையத்திலிருந்து இதே வழிதடத்தில் திரும்பச் செல்ல வேண்டும்.

நகரப் பேருந்துகள்

மத்திய பேருந்து நிலையத்தை முனையமாகக் (Terminus) கொண்டு இயங்கும் அனைத்து நகரப் பேருந்துகளும் மத்திய பேருந்து நிலையம், மன்னார்புரம் வழியாக பஞ்சப்பூர் முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி ஒருங்கிணைந்த பேருந்து முனையத்திற்கு செல்ல வேண்டும். இவை பஞ்சப்பூர் முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி ஒருங்கிணைந்த பேருந்து முனையத்திலிருந்து இதே வழிதடத்தில் திரும்பச் செல்லவேண்டும்.

ஆம்னிபேருந்துகள்

மத்திய பேருந்து நிலையத்தின் சுற்றுப்பகுதிகளில் ஒப்பந்த ஊர்தி ஆம்னி பேருந்துகளை நிறுத்தி பயணிகளை ஏற்றக்கூடாது. இவை முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி ஒருங்கிணைந்த பேருந்து முனையத்திற்கு அருகில் தற்காலிகமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள காலி இடத்தில் பயணிகளை ஏற்றி, இறக்க வேண்டும்.

உள் வருகை மற்றும் வெளிச்செல்கை (Entry and Exit)

அனைத்து பேருந்துகளும் பேருந்து முனையத்திற்கு உள்வரும்போது (Entry) காவல் சோதனை சாவடி எண். 2 (CP-2) வழியாக சென்று பேருந்து முனையத்தின் பின்வழியாக உள்ளே வரவேண்டும்.
பேருந்து முனையத்திலிருந்து வெளிச்செல்லும் (Exit) அனைத்து பேருந்துகளும் (மதுரை மார்க்கம் தவிர்த்து) தேசிய நெடுஞ்சாலை வழியாக பஞ்சப்பூர் சந்திப்பு வரை சென்று திரும்பி (U Turn) செல்ல வேண்டும்.

பயணிகளுக்கான வசதிகள்

திருச்சி பஞ்சப்பூர் பேருந்து முனையத்திற்கு வந்து செல்லும் பயணிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு அவர்களுக்கு தேவையான உணவு, சிற்றுண்டி, தேநீர், காபி மற்றும் குளிர்பானங்கள் போன்ற உணவு பொருட்கள் விற்பனைக்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இப்பேருந்து முனையத்தில் 20 எண்ணிக்கையில் 10 கடைகளும், 12 எண்ணிக்கையில் உணவகங்களும், 10 எண்ணிக்கையில் சிற்றுண்டி கடைகளும் (Snacks) செயல்படவுள்ளது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+