திருச்சியில் கோவில் அருகே 2 நாட்களாக கேட்பாரற்று கிடந்த காரால் பீதி- உரிமையாளருக்கு போலீஸ் வலைவீச்சு
திருச்சி: திருச்சியில் அய்யப்பன் கோவில் அருகே கடந்த 2 நாட்களாக கேட்பாரற்று கிடந்த கார் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
கோவை உக்கடம் ஈஸ்வரன் கோவில் முன்பாக காரில் இருந்த சிலிண்டர் வெடித்த சம்பவத்தில் ஜமேசா முபின் என்பவர் உயிரிழந்தார். சிலிண்டர் வெடித்த இடத்தில் இருந்து ஆணிகள், பால்ரஸ் குண்டுகள் கைப்பற்றப்பட்டன. முபினின் வீட்டிலும் வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்டன.

கார் சிலிண்டர் வெடிப்பு
இதனைத் தொடர்ந்தே கோவை கார் வெடிப்பு சம்பவமானது பயங்கரவாதத்துடன் தொடர்புடையது என தெரியவந்தது. மேலும் முபின் கூட்டாளிகள் 6 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவ வழக்கை தேசிய புலனாய்வு ஏஜென்சியான என்.ஐ.ஏ.க்கு மாற்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பரிந்துரைத்துள்ளார்.

கார்கள் பறிமுதல்
இதனிடையே கோவையின் பல பகுதிகளில் கேட்பாரற்று கிடந்த கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மொத்தம் 7 கார்களை பறிமுதல் செய்த போலீசார் அந்த கார்கள் குறித்து விசாரணை நடத்தினர். இதேபோல் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். சாலை ஓரங்களில் கேட்பாரற்று நிறுத்தப்பட்ட கார்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.

திருச்சியில் கார் பீதி
இந்நிலையில் திருச்சி கண்டோமென்ட் ஐயப்பன் கோவில் அருகில் விபத்துக்குள்ளான கார் ஒன்று 2 நாட்களாக நின்று கொண்டிருப்பதாக திருச்சி கண்டோன்மென்ட் போக்குவரத்து ஒழுங்கு பிரிவு காவல்துறையினருக்கு தகவல் வந்தது. இத்தவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் அங்கு விபத்து ஏற்பட்டு நின்று கொண்டிருந்த TN 45AA4947என்ற எண் கொண்ட காரை சோதனையிட்டு பின்னர் அதனை காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

உரிமையாளரை தொடர்பு கொள்ள முயற்சி
தொடர்ந்து அந்த கார் யாருக்கு சொந்தமானது? எப்படி விபத்து ஏற்பட்டது? அப்பகுதியில் காரை தனியே விட்டு சென்ற நபர் யார் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் கரூர் மாவட்டம் கருப்பத்தூரை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் அரவிந்த், கார் உரிமையாளர் என தெரியவந்தது. அவரது செல்போன் எண்ணை போலீசார் தொடர்பு கொள்ள முயற்சித்தனர். ஆனால் தொடர்பு கொள்ள முடியவில்லை என போலீசார் தெரிவித்தனர். கோவையில் சிலிண்டர் வெடித்த கார், 10 பேரின் கைகள் மாறி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications