Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓட முயற்சி..2 ரவுடிகள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு..பரபரத்த திருச்சி

திருச்சியில் போலீசை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓட முயன்ற ரவுடிகள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

Subscribe to Oneindia Tamil

திருச்சி: திருச்சி குழுமாயி அம்மன் கோவில் அருகே போலீசை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓட முயன்ற ரவுடிகள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சியில் தேடப்படும் குற்றவாளிகள் பட்டியலில் இருக்கக்கூடியவர் துரை.

துரையை இன்று காலை உறையூர் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் பிடித்து விசாரணைக்காக அழைத்து வந்திருக்கிறார்.

5 கொலை வழக்குகள்

5 கொலை வழக்குகள்

ரவுடி துரைக்கு எதிராக 5 கொலை வழக்கு உள்பட 64 வழக்குகள் இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்தனர். தேடப்படும் குற்றவாளியாக துரைராஜ் உள்ளார். அதேபோல், இவரது சகோதரர் சோமசுந்தரம் என்பவரும் இவருக்கு உடைந்தையாக இருந்துள்ளார். இருவரும் இணைந்து பல்வேறு சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

காவலரின் கழுத்தை நெறித்த ரவுடி

காவலரின் கழுத்தை நெறித்த ரவுடி

இந்த நிலையில், இந்த இரு ரவுடிகளையும் இன்று காலை போலீசார் கைது செய்தனர். இருவரையும் உறையூர் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் மோகன் மற்றும் காவலர் சிற்றரசு ஆகியோர் இன்று ஜீப்பில் வைத்து அழைத்து வந்தனர். அப்போது திருச்சி குழுமாயி அம்மன் கோவில் அருகே வந்த போது ஜீப்பை ஓட்டி வந்த காவலரின் கழுத்தை ரவுடி துரை ராஜ் நெறித்துள்ளார். இதில் ஜீப் நிலை தடுமாறி சாலையின் ஓரம் இறங்கிவிட்டது.

துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர்

துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர்

இந்த சமயத்தை பயன்படுத்தி இரு ரவுடிகளும் ஜீப்பில் ஏற்கனவே இருந்த ஆயுதங்களை பயன்படுத்தி காவலர் சிற்றரசு என்பவரை வெட்டிவிட்டு தப்பி ஓட முயன்று இருக்கின்றனர். உடனடியாக காவல் ஆய்வாளர் மோகன், இரண்டு ரவுடிகளையும் காலில் துப்பாக்கியால் சுட்டு பிடித்துள்ளார். தற்போது இரு ரவுடிகளும் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி காவல் ஆணையர் ஆய்வு

திருச்சி காவல் ஆணையர் ஆய்வு

இந்த நிலையில், ரவுடிகள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடைபெற்ற குழுமாயி கோவில் பகுதி அருகே திருச்சி காவல் ஆணையர் சத்திய பிரியா ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சத்திய பிரியா, "மறைத்து வைத்திருந்த நகைகளை மீட்க சென்ற போது குற்றவாளிகள் தப்ப முயன்றனர். போலீசாரை தாக்கி விட்டு தப்பி ஓட முயற்சித்ததால் துப்பாக்கியால் சுட வேண்டிய நிலை ஏற்பட்டது" என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+