வட்டிக்கு வட்டிகேட்டு நாள் முழுக்க கட்டி வைத்து அடிஉதை.. ரயில்வே ஊழியருக்கு கொடுமை.. தப்பிய நடிகர்
திருச்சி: திருச்சி பொன்மலை ரெயில்வே ஊழியரை கந்து வட்டி பிரச்சினையில் கடத்திச்சென்று அடித்து உதைத்தவர் கைது செய்யப்பட்டார். நடிகர் உள்பட 2 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.
திருச்சி கொட்டப்பட்டு ஐஸ்வர்யா நகர் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 56). இவர் பொன்மலை ரெயில்வே பணிமனையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 2019-ம் ஆண்டு, மறைந்த நடிகர் அலெக்சின் மருமகனும், நடிகருமான ஜெரால்டு என்பவரிடம் ரூ.35 ஆயிரம் கடன் வாங்கியுள்ளார்.

அதற்கு வட்டி கட்டி வந்த நிலையில் கொரோனா பிரச்சினையால் சில மாதமாக பணம் கட்டவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் கடந்த சனிக்கிழமை வழக்கம்போல் வேலை முடிந்து பணிமனையில் இருந்து வெளியே வந்த ஆறுமுகத்தை, 3 பேர் வழிமறித்து இருசக்கர வாகனத்தில் அவரை கடத்திச்சென்றனர்.
பின்னர் தென்னூர் பகுதியில் உள்ள ஒரு இடத்தில் வைத்து ஒரு நாள் முழுவதும் அவரை கட்டி வைத்து, வட்டிக்கு மேல் வட்டி கேட்டு அடித்து உதைத்ததாக தெரிகிறது. பின்னர், அவர்களிடம் கால அவகாசம் கேட்டு, அங்கிருந்து தப்பி வந்த அவர் இதுபற்றி பொன்மலை போலீஸ்நிலையத்தில் புகார் செய்தார்.
அந்த புகாரில், நடிகர் ஜெரால்டிடம் ரூ.35 ஆயிரம் கந்து வட்டிக்கு வாங்கி இருந்தேன். கொரோனா காரணமாக கடந்த சில மாதமாக வட்டி கட்டவில்லை. இதனால் வட்டிக்கு மேல் வட்டிகேட்டு மிரட்டி பணி முடித்து விட்டு வெளியே வந்த என்னை 3 பேர் கடத்திச்சென்று கட்டி வைத்து அடித்து உதைத்தனர் என்று புகாரில் தெரிவித்துள்ளார்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்!












Click it and Unblock the Notifications