திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் ஆச்சரியம்.. ஒரே வாரத்தில் இவ்வளவா.. தலைகீழாக மாற்றம்
திருச்சி: திருச்சி புகழ்பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியல்களில் பக்தர்கள் அளித்த காணிக்கை மலைப்பை தந்து வருகிறது.. இந்த உண்டியலிலுள்ள காணிக்கைகள் எண்ணப்பட்டு, அந்த தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டம், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயில் தமிழகத்திலுள்ள அம்மன் கோயில்களிலேயே மிகவும் பிரசித்தி பெற்றது.. எனவேதான், தமிழகம் மட்டுமல்லாது, பிற மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் சமயபுரத்துக்கு வந்து தரிசனம் செய்து, தங்களது நேர்த்திக் கடனை நிறைவேற்றி காணிக்கைகளையும், உண்டியலில் செலுத்தி வணங்கி வருகிறார்கள்.

தன்னார்வலர்கள்: இவ்வாறு பக்தர்கள் கோயில் உண்டியலில் செலுத்திய காணிக்கைகளை கோயிலின் மண்டபத்தில் கோயில் இணை ஆணையர் தலைமையில், உதவி ஆணையர்கள் முன்னிலையில் பல்வேறு தன்னார்வலர்கள் கோயில் பணியாளர்கள் மற்றும் வங்கி பணியாளர்கள் உள்ளிட்டோர் முன்னிலையில், ஒரு குறிப்பிட்ட நாள் இடைவெளியில் எண்ணப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது.
அந்தவகையில், அதன்படி, கடந்த 5 நாட்களில் உண்டியல்களில் செலுத்தப்பட்ட காணிக்கை எண்ணப்பட்டது.. நேற்றைய தினமும் கோயில் உண்டியலில் செலுத்திய காணிக்கைகளை கோயிலின் மண்டபத்தில் கோயில் இணை ஆணையர் பிரகாஷ் தலைமையில், உதவி ஆணையர்கள் முன்னிலையில், தன்னார்வலர்கள், தனியார் கல்லூரி மாணவ, மாணவிகள், கோயில் பணியாளர்கள், வங்கி பணியாளர்கள் உள்ளிட்டோர் எண்ணினார்கள்..
காணிக்கைகளை எண்ணியதில் 55 லட்சத்து, 95 ஆயிரத்து, 692 ரூபாய் ரொக்கமும்,1 கிலோ 100 கிராம் தங்கமும், 3 கிலோ 100 கிராம் வெள்ளியும், 151 அயல்நாட்டு நோட்டுகளும், 885 அயல்நாட்டு நாணயங்களும் கிடைக்கப்பெற்றன.
அதேபோல், சமயபுரம் கோயிலின் உபகோயில்களான அருள்மிகு ஆதிமாரியம்மன் கோயில் உண்டியலில் ரூ.3 லட்சத்து 32 ஆயிரத்து 362 ரொக்கமும், அருள்மிகு உஜ்ஐயினி மாகாளியம்மன் கோயில் உண்டியலில் ரூ.26,019 ரொக்கமும், அருள்மிகு போஜீஸ்வரர் கோயிலில் ரூ.5008-ம் காணிக்கைகளாக கிடைக்கப் பெற்றன என கோயிலின் இணை ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
ஆனால், கடந்த வாரம் கோயில் உண்டியலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கைகளை எண்ணியதில் 1 கோடியே, 27 லட்சத்து, 82 ஆயிரத்து, 683 ரூபாய் ரொக்கமும், 3 கிலோ 785 கிராம் தங்கமும், 4 கிலோ 430 கிராம் வெள்ளியும், 327 அயல்நாட்டு நோட்டுகளும், 1444 அயல்நாட்டு நாணயங்களும் கிடைக்கப்பெற்றிருப்பதாக கோயிலின் இணை ஆணையர் பிரகாஷ் தகவல் தெரிவித்திருந்தது பெரும் ஆச்சரியத்தை கிளப்பியிருந்தது.
கடந்த 10 நாட்களுக்கு முன்பு, சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு நேர்த்திக்கடனாகவும், காணிக்கையாகவும் வரப்பெற்ற தங்கத்தை தரம்பிரித்து எடை போடும் பணி நடைபெற்றது.. கோயிலுக்கு காணிக்கையாக வரப்பெற்ற 300 கிலோ 675 கிராம் தங்கத்தை தரம் பிரித்து, அளவீடு செய்யும் பணியில், சுப்ரீம்கோர்ட் ஓய்வு பெற்ற நீதிபதி துரைசாமி ராஜூ, ஹைகோர்ட் ஓய்வுபெற்ற நீதிபதிகள் கே.ரவிச்சந்திரபாபு, ஆர்.மாலா ஆகியோர் தலைமையில் இப்பணிகள் நடந்திருந்தன.
காரணம், பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் தங்கம் எல்லாமே, ஒரே மாதிரியான தரத்துடன் இருக்காது. அதனால்தான், அவைகளை தரம்பிரித்து, பாரத ஸ்டேட் வங்கிமூலமாக மும்பையில் உள்ள அரசின் உருக்காலைக்கு கொண்டுசெல்லப்படும்..
அங்கு 24 காரட் சுத்த தங்கக்கட்டிகளாக மாற்றி, ரிசர்வ் வங்கியில் முதலீடு செய்யப்படும். இதனை தொடா்ந்து, சுத்த தங்கத்திற்கான மதிப்பின் அடிப்படையில் தங்கப் பத்திரம் பெறப்பட்டு, அதிலிருந்து கிடைக்கும் வட்டி கோயில் வருவாயில் சோ்க்கப்படும் என்று அதிகாரிகள் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
இனி தங்கம் உங்க கையில விளையாடும்! தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு! 5 நாள் ட்ரெய்னிங் போதும்! -
நான் வந்துட்டேன்.. மீண்டும் கெத்தாக திரும்பிய தங்கம்! டாலரால் தலைகீழான மார்க்கெட்! அடுத்து என்ன? -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
தங்கம்.. இந்திய மக்களின் ஆசையை குழி தோண்டி புதைத்த வரி.. 2 வாரத்தில் தலைகீழாக மாறியது! -
ஆட்டம் போடும் அமெரிக்க டாலர்.. கோடிக்கணக்கான ரூபாய் தங்கத்தை விற்ற ரிசர்வ் வங்கி! இது தான் காரணமா? -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
தங்க திருட்டு வழக்கில் கைதான தம்பதியின் செயலால்... தாம்பரம் சேலையூர் போலீசாருக்கு பெரிய சிக்கல் -
திருச்சி நர்சிங் மாணவி உயிரிழப்புக்கு தரமற்ற மருந்தே காரணம்.. ஆய்வறிக்கையில் வெளியான அதிர்ச்சி தகவல் -
திருச்சியில் கார் ஓட்டுநரால் 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. மது கொடுத்து பாலியல் தொல்லை! -
திருச்சியில் பட்டப்பகலில் கொடூரம்.. 17 வயது பெண்ணை காரில் கடத்தி பலாத்காரம்.. போலீஸ் தீவிர வலைவீச்சு -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்!












Click it and Unblock the Notifications