திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் யாரிந்த பெண்.. ரூ.400 டிக்கெட்? வீடியோவை கலெக்டருக்கு அனுப்பு
திருச்சி: கலெக்டர் அலுவலகத்திற்கு வேண்டுமென்றாலும் வீடியோ எடுத்து அனுப்பு, எனக்கு இங்கே 20 வருடமாக சர்வீஸ்.. உன்னை மாதிரி பல பேரை பார்த்திருக்கேன்.. சூப்பிரண்டு சொல்வதை தான் நான் செய்கிறேன் என்று திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பக்தர்களிடம் பெண் ஊழியர் கடுமையாக பேசும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி அதிர்ச்சியை தந்துள்ளது.. என்ன நடந்தது?
திருச்சி மாவட்டம், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயில் தமிழகத்திலுள்ள அம்மன் கோயில்களிலேயே மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.. சக்தி ஸ்தலங்களில் முதன்மையாகவும் இந்த கோயில் விளங்கி கொண்டிருக்கிறது.. இதனால் இந்த கோயிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்தவண்ணம் இருப்பார்கள்.

இந்த கோவிலில் வடக்கு வாசலில் பக்தர்களை அனுமதிக்க கூடாது என்றும், இந்த வழியாக முதியவர்கள், கர்ப்பிணி பெண்கள், கை குழந்தைகளை வைத்திருப்பவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் தமிழக சட்டசபையில் 110 விதியின் கீழ் சட்டம் இயற்றப்பட்டுள்ளது.
தமிழக அரசு விதிமுறை
ஆனால் அந்த விதியை மீறும் வகையில் பல வருடங்களாக அந்த வீதியில் டிக்கெட் பெற்றுக் கொண்டும், சூப்பரண்ட்டண்டு உள்ளிட்ட உயர் அதிகாரிகள் அனுமதி பெற்று இலவசமாக பக்தர்கள் உள்ளே அனுப்பப்படுவதாகவும் புகார்கள் கசிந்தன.
இந்நிலையில், சம்பவத்தன்று 2 பக்தர்கள் கோவிலுக்குள் செல்வதற்காக 100 ரூபாய் தரிசன டிக்கெட் கேட்டிருக்கிறார்கள்.. அப்போது கோவிலிலிருந்த பெண் ஊழியர் நித்யா என்பவர், 2 பேருக்கும் 400 ரூபாய் தந்தால்தான் உள்ளே விட முடியும் என்று சொல்லி உள்ளார்..
400 ரூபாய் எடுங்க
இதனால் அதிர்ச்சி அடைந்த 2 பேரும், 400 ரூபாய் எதுக்கு? என்று கேட்டுள்ளார்கள்.. அதற்கு அந்த பெண், சூப்பர்வைசர் சொல்வதை தான் செய்கிறேன்.. 400 தந்து டிக்கெட் வாங்க முடிந்தால் வாங்குங்க, இல்லாட்டி வெளியே போங்க, வீடியோ எடுக்கறீங்களா? எடுங்க, அந்த வீடியோவை கலெக்டர் ஆபீஸில் கொண்டு போய் கொடு..
எனக்கு இந்த மாரியம்மன் கோயிலில் 20 வருஷம் சர்வீஸ்.. எத்தனையோ பேரை உன்னை மாதிரி பார்த்துட்டுதான் இங்கே இருக்கேன்.. நீயெல்லாம் எனக்கு எம்மாத்திரம்?" என்று கடுமையாக பேசுகிறார்.
இந்த வீடியோ இணையத்திலும் பரவி வைரலாகி, பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை தந்து வருகிறது.
தரிசன டிக்கெட் ரூ100
பொதுவாக, தரிசன டிக்கெட்டில் எவ்வளவு ரூபாய் என்று அச்சிடப்பட்டிருக்காது.. ஆனால், கோவிலில் வழங்கப்படும் டிக்கெட்டில் ரூ.100 என்று அச்சாகியிருக்கும்.. அதனால்தான், கோவில் அதிகாரிகள் சிலர், போலி டிக்கெட் அச்சிட்டு விற்று வருவதாகவும், தினமும் இப்படி பல லட்சம் ரூபாய் பக்தர்களிடம் வசூலிப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன..
சமயபுரம் கோவில் வடக்கு வாசல் பகுதி என்பது தமிழக அரசால் முதியவர்கள் கர்ப்பிணி பெண்கள் பச்சிளம் குழந்தைகளை வைத்திருப்பவர்கள் உள்ளே செல்வதற்கு ஏற்படுத்தப்பட்ட வழியாகும்.. ஆனால், அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் அதிகாரிகள் செயல்படுவது பக்தர்களிடையே கடும் அதிருப்தியையும், அதிர்ச்சியையும் உண்டு பண்ணி வருகிறது..
மேலும், இதுதொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பக்தர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பணிநீக்கம் செய்ய கோரிக்கை
இதனிடையே, இந்த விவகாரம் குறித்து இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கூறும்போது, ''நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட, அதிகமாக வசூல் செய்வதற்கு, சமயபுரம் மாரியம்மன் கோவில் ஊழியருக்கு அனுமதி அளித்தது யார் என்ற கேள்வி எழுகிறது.
பக்தர்களிடம் 2 மடங்கு கட்டணம் வசூலித்ததோடு, பக்தர்களை அவமதிப்புக்கு உள்ளாகிய, கோவில் பெண் ஊழியரை உடனடியாக பணி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications