ஆன்லைனில் ஆசையாக நூடுல்ஸ் ஆர்டர் போட்ட பள்ளி மாணவி! சாப்பிட்ட கொஞ்ச நேரத்தில் பலி! திருச்சி நடுங்குதே
திருச்சி: திருச்சி திருவெறும்பூர் பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர் ஆன்லைனில் நூடுல்ஸ் வாங்கி வீட்டில் சமைத்துச் சாப்பிட்டுள்ளார். இருப்பினும், அதைச் சாப்பிட்ட சில மணி நேரத்தில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவர் மரணத்திற்கு என்ன காரணம் என்பது தெளிவாகத் தெரியாத நிலையில், இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நவீன உலகில் மொபைல் தான் எல்லாம் என்று ஆகி வருகிறது. கிட்டதட்ட ஆறாவது விரல் போல மாறுகிறது எனக் கூடச் சொல்லலாம். ஷாப்பிங் முதல் டேட்டிங் வரை எல்லாமே இப்போது ஆன்லைனில் செய்ய முடிகிறது.

ஆன்லைன் ஆர்டர்: அதன்படி இப்போது ஆர்டர் செய்தால் 10 நிமிடத்தில் மளிகை பொருட்களை டெலிவரி செய்யும் செயலிகள் அதிகரித்துள்ளது. இதை இன்ஸ்டன்ட் டெலிவரி செயலி என்கிறார்கள். இதில் நீங்கள் மளிகை பொருட்களை ஆர்டர் செய்தால் 10 நிமிடங்களில் வீட்டிற்கே அதை டெலிவரி செய்துவிடுவார்கள். உடனடியாக தேவைப்படும் பொருட்கள் வீட்டிற்கே வருவதால் இப்போது பலரும் இதைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.
அதேநேரம் இதுபோல ஆன்லைனில் பொருட்களை வாங்கும் போது சில நேரங்களில் அது மிகப் பெரிய பிரச்சினையைக் கூட நமக்குக் கொடுக்கிறது. அப்படியொரு ஷாக் சம்பவம் தான் இப்போது திருச்சியில் நடந்துள்ளது. அங்கு ஆன்லைனில் ஆசையாக நூடுல்ஸ் ஆர்டர் செய்து, அதைச் சமைத்துச் சாப்பிட்ட பள்ளி மாணவி பரிதாபமாக உயிரிழந்துள்ளான்.
திருச்சி சிறுமி: அதாவது திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அடுத்துள்ள அரியமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் ஜான் ஜூடி மெயில்ஸ்.. ரயில்வே ஊழியராக இவர், அப்பகுதியில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது மகள் தான் ஸ்டெபி ஜாக்குலின் மெயில்ஸ்.. அவருக்கு வயது 15. திருச்சியில் உள்ள பிரபல தனியார்ப் பள்ளியில் ஸ்டெபி 11ஆம் வகுப்பு படித்து வந்தார்.
ஸ்டெபிக்கு நூடுல்ஸ் சாப்பிடுவது என்பது பிடிக்குமாம்.. இதனால் சில நேரங்களில் கடைகளில் நூடுல்ஸ் வாங்கியும் சில நேரங்களில் வீட்டிலேயே சமைத்தும் நூடுல்ஸை சாப்பிடுவதை அவர் வழக்கமாகக் கொண்டிருக்கிறார். அடிக்கடி நூடுல்ஸை விரும்பி சாப்பிட்டு வந்துள்ளார். அப்படி தான் சனிக்கிழமை இரவு அவர் வழக்கம்போல் ஆன்லைனில் நூடுல்ஸ் பாக்கெட் ஆர்டர் போட்டுள்ளார்.
உயிரிழப்பு: அது சில நிமிடங்களில் வீட்டிற்கே வந்துவிட்டது. அதைத் தொடர்ந்து அவர் நேற்று இரவு நூடுல்ஸ் செய்து சாப்பிட்டு இரவு படுத்துவிட்டார். இருப்பினும், காலை அவர் நீண்ட நேரமாகியும் எழவில்லை. குடும்பத்தினர் அவரை எழுப்ப முயன்ற போது தான் அவர் உயிரிழந்துவிட்டது தெரிய வந்துள்ளது. இன்று காலை இந்த சம்பவம் குறித்து அரியமங்கலம் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
அதாவது ஸ்டெபி இறப்பில் சந்தேகம் உள்ளதாகத் தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், ஸ்டெபி உடலைத் திருச்சி அரசு மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்க முயன்றனர். அப்போது ஸ்டெபியின் உறவினர்களுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஸ்டெபியின் உடலைத் தர உறவினர்கள் மறுத்ததாக தெரிகிறது.
இருப்பினும், புகார் வந்துள்ளதால் நிச்சயம் பிரேதப் பரிசோதனை நடத்த வேண்டும் என்று போலீசார் திட்டவட்டமாகக் கூறிவிட்டனர். ஸ்டெபி உடல் பிரேதப் பரிசோதனைக்காகத் திருச்சி அரசு மருத்துவமனை எடுத்துச் செல்லப்பட்டுள்ள நிலையில், பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பிறகு உயிரிழப்பிற்கான காரணம் தெரிய வரும்.
-
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
திருச்சி மேடையில் அதை பேசியிருக்கனும்.. முதல்வர் விஜய்யின் உரை ஏமாற்றம்! ஆதங்கப்பட்ட அன்புமணி -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
"வெறும் 2 நிமிடங்களில் 15 லட்சம் சைபர் தாக்குதல்.." CBSE போர்ட்டலை மொத்தமாக முடக்க முயற்சி! பகீர் -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications