ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கிட்ட யார் பாருங்க? ரங்கநாதசுவாமி கோயிலில் நுழைந்த ஜாகீர் உசேன்! வாவ் திருச்சி

Subscribe to Oneindia Tamil

திருச்சி: திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலுக்கு, குடும்பத்துடன் கிளம்பி வந்துவிட்டார் ஜாகிர் உசேன்.. இதையடுத்து, ஜாகிர் உசேன் செய்த காரியம், ரெங்கநாதர் கோயிலுள்ள அனைவரையுமே திக்குமுக்காட வைத்துவிட்டது. அப்படியென்ன நடந்தது திருச்சியில்?

ஆழ்வார்கள் பாடிய 108 வைணவ தலங்களில் முதன்மையானதும் தலைசிறந்ததாகவும் கருதப்படுவது ஸ்ரீரங்கம் கோயிலாகும்.. 108 வைணவ தலங்களில் முதன்மையானது திருச்சி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில்.

trichy srirangam

இந்த கோவில் பூலோக வைகுண்டம் எனும் சிறப்புப் பெயரையும் பெற்றுள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிநாடு, வெளிமாநிலத்தில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் தினமும் ஸ்ரீரங்கத்திற்கு வந்து செல்கின்றனர்.

சிறப்புகள்: 21 கோபுரங்களும் 156 ஏக்கர் பரப்பளவும் கொண்டு இந்த பிரம்மாண்ட கோவில் உலகின் 2வது பெரிய கோவில் என்று சொல்லப்படுகிறது. வைணவ கோயில்களிலேயே, வருடத்தில் 322 நாட்களும் திருவிழா நடைபெறும் ஒரே கோவில் இந்த ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் தானாம்.. உலகில் பல்வேறு இடங்களில் இருந்து வைகுண்ட ஏகாதசி நாட்களில் மட்டும் தோராயமாக 10 லட்சம் பக்தர்கள் இங்கே தரிசனத்திற்காக வருவதே இந்த கோயிலின் சிறப்பாகும்.

இந்த நிலையில், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு சென்னையை சேர்ந்த பரதநாட்டிய கலைஞர் ஜாகீர்உசேன் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார். பிறகு ரெங்கநாத கோவிலின் உற்சவர் நம்பெருமாளுக்கு பல கோடி ரூபாய் மதிப்புள்ள வைர கிரீடத்தை பரதநாட்டிய கலைஞரான இஸ்லாமிய பக்தர் ஜாகிர் உசேன் என்பவர் வழங்கியிருக்கிறார்..

சால்வைகள்: கோவில் இணை ஆணையர் மாரியப்பன், தலைமை அர்ச்சகர் சுந்தர் பட்டர் ஆகியோரிடம் இந்த கிரீடத்தை ஜாகிர் உசேன் வழங்கினார். அப்போது கோவில் நிர்வாகம் சார்பில் அவருக்கு சால்வை அணிவிக்கப்பட்டு பிரசாதங்களும் வழங்கப்பட்டன.

இதுகுறித்து ஜாகிர் உசேன் செய்தியாளர்களிடம் சொல்லும்போது, "ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் மேல் உள்ள பக்தியால் இந்த வைர கிரீடத்தை காணிக்கையாக தந்துள்ளேன்.. ஏறத்தாழ அரை அடி உயரம் கொண்ட இந்த கிரீடமானது 3,160 கேரட் மாணிக்கக்கல், 600 வைரக்கற்கள், தங்கம் மற்றும் மரகதக்கல்லை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

மாணிக்கக்கற்கள்: ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து ஒற்றை மாணிக்கக்கல் கொண்டு வரப்பட்டு குடைந்து எடுக்கப்பட்டு, 400 கிராம் தங்கத்தில் வைரம், மரகத கற்கள் பதிக்கப்பட்டு செய்யப்பட்டது. இதனை டிசைன் செய்வதற்கு சுமார் 8 வருடங்கள் ஆனது. உலகில் முதன்முறையாக மாணிக்க கற்களால் செய்யப்பட்ட வைரக்கிரீடம் என்பது இதன் தனி சிறப்பாகும்.. பிறப்பால் நான் முஸ்லிம் மதத்தை சேர்ந்தவராக இருந்தாலும் ரெங்கநாதர் மேல் உள்ள பற்றால் இதனை செய்துள்ளேன்" என்று சிலாகித்து சொல்கிறார் ஜாகிர் உசேன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+