பூஜை ஒன்றையே உயிர் மூச்சாக கருதுகிறோம்.. துர்கா ஸ்டாலினிடம் ஸ்ரீரங்கம் கோயில் பட்டர்கள் கோரிக்கை..!
திருச்சி: ஆண்டாண்டு கால வழக்கப்படி கோயில்களில் வழிபாடு நடத்த அரசு உறுதுணையாக இருக்க வேண்டும் என ஸ்ரீரங்கம் கோயில் பட்டர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.
Recommended Video
மேலும், பூஜை ஒன்றையே தாங்கள் உயிர் மூச்சாக கருதி வாழ்ந்து வருவதாகவும் அவர்கள் துர்கா ஸ்டாலினிடம் தெ ரிவித்துள்ளனர்.
இதனிடையே ஸ்ரீரங்கம் கோயில் பட்டர்கள் தரப்பில் அளிக்கப்பட்ட கோரிக்கை மனுவை பெற்றுக்கொண்ட துர்கா ஸ்டாலின், அதனை முதலமைச்சரிடம் கொடுத்துவிடுவதாக உறுதியளித்திருக்கிறார்.

ஆன்மிகப் பயணம்
முதலமைச்சர் மனைவி துர்கா ஸ்டாலின் கடந்த 2 நாட்களாக ஆன்மிகப் பயணமாக திருச்சியில் முகாமிட்டு பல்வேறு முக்கிய கோயில்களுக்கு சென்று வழிபட்டார். தேர்தல் நேரத்தில் தனது கணவர் மு.க.ஸ்டாலினுக்காக செய்த பிரார்த்தனைகள் பலித்ததால் இப்போது வேண்டுதலை நிறைவேற்றும் வகையில் அவர் இப்போது ஆன்மிகப் பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் கடந்த புதன்கிழமை திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு சில கிலோ மீட்டர்கள் பாதயாத்திரையாக சென்று நன்றிக்கடன் செலுத்தினார்.

ஸ்ரீரங்கம் கோயில்
அதைத் தொடர்ந்து நேற்றைய தினம் திருச்சி உறையூர் வெக்காளியம்மன் கோயில், ஸ்ரீரெங்கம் அரங்கநாதர் கோயில் என சென்று தனது வேண்டுதலை நிறைவேற்றினார் துர்கா ஸ்டாலின். அப்போது அவரை சந்தித்த ஸ்ரீரங்கம் கோயில் பட்டர்கள், கோரிக்கை மனு அடங்கிய கடிதம் ஒன்றை அவரிடம் கொடுத்து முதலமைச்சரின் கவனத்துக்கு இதை கொண்டு செல்லுமாறு கோரசாக குரல் கொடுத்தனர்.

உருக்கம்
பூஜை வாழ்வாதாரத்தை தவிர வேறு எந்த ஊதியமும் தாங்கள் பெறுவதில்லை என்றும் பூஜை ஒன்றையே உயிர்மூசாக கருதி வாழ்ந்து வருவதால் அதற்கு இடையூறு ஏற்படாமல் ஆண்டாண்டு கால வழக்கப்படி வழிபாடு நடத்த அரசு உறுதுணையாக நிற்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர். மேலும், தங்களின் வாரிசுகளும் கோயில்களில் தான் கைங்கர்யங்கம் செய்து வருவதாகவும் தெரிவித்தனர்.

உறுதி
மேலும், கோயிலில் மேற்கொள்ள வேண்டிய புதிய வசதிகள் தொடர்பாகவும் எடுத்துக்கூறினர். இதனை பொறுமையுடன் கேட்டுக் கொண்ட துர்கா ஸ்டாலின், கோரிக்கை மனுவை முதலமைச்சரிடம் கொடுப்பதாக ஸ்ரீரங்கம் கோயில் பட்டர்களிடம் உறுதியளித்துவிட்டு புறப்பட்டார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications