திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

திருச்சியை வெல்லப்போவது யார்? வளைத்து வளைத்து ஓட்டு போட்டு அசரவைத்த பெண்கள்! கலக்கத்தில் கட்சிகள்!

Google Oneindia Tamil News

திருச்சி: திருச்சி மாவட்டத்தில் வாக்களித்த 17.20 லட்சம் பேரில் ஆண்களை விட கூடுதலாக 66,948 பெண்கள் வாக்களித்து தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி சாதனை படைத்துள்ளனர். மாவட்டம் முழுவதும் 11,35,780 ஆண், 12,02,728 பெண், 237 இதர என 23,38,754 மொத்த வாக்காளர்களில், 8,41,493 ஆண், 8,78,722 பெண், 64 இதர என 17,20,279 பேர் வாக்களித்தனர்.

தமிழக சட்டமன்ற தேர்தல் நேற்று முன்தினம் (6ம் தேதி) நடைபெற்றது. திருச்சி மாவட்ட இறுதி வாக்குப்பதிவு பட்டியலை திருச்சி தேர்தல் நடத்தும் அலுவலர் கலெக்டர் திவ்யதர்ஷினி நேற்று மாலை வெளியிட்டார். தொகுதி வாரியாக வாக்களித்தவர்கள் விவரம் வருமாறு:

மணப்பாறை தொகுதி: 1,41,744 ஆண், 1,47,758 பெண், 10 இதர என 2,89,512 வாக்காளர்களில், 1,08,803 ஆண், 1,11,275 பெண், 1 இதர என 2,20,079 பேர் வாக்களித்தனர். 76.02 சதவீதம் வாக்குப்பதிவானது.

ஸ்ரீரங்கம் தொகுதி

ஸ்ரீரங்கம் தொகுதி

ஶ்ரீரங்கம் தொகுதி: 1,50,363 ஆண், 1,61,093 பெண், 28 இதர என 3,11,484 வாக்காளர்களில், 1,16,450 ஆண், 1,20,742 பெண், 15 இதர என 2,37,207 பேர் வாக்களித்துள்ளனர். 76.15 சதவீதம்.

திருச்சி மேற்கு: 1,29,764 ஆண், 1,39,352 பெண், 17 இதர என 2,69,132 வாக்காளர்களில், 88,402 ஆண், 91,952 பெண், 3 இதர என 1,80,357 பேர் வாக்களித்துள்ளனர். 67.01 சதவீதம்.

திருச்சி கிழக்கு: 1,23,789 ஆண், 1,31,150 பெண், 44 இதர என 2,54,992 வாக்காளர்களில், 84,815 ஆண், 85,683 பெண், 10 இதர என 1,70,508 பேர் வாக்களித்தனர். 66.87 சதவீதம்.

திருவெறும்பூர்: 1,43,784 ஆண், 1,49,163 பெண், 56 இதர என 2,93,003 வாக்காளர்களில், 96,223 ஆண், 98,926 பெண், 23 இதர என 1,95,172 பேர் வாக்களித்தனர். 66.61 சதவீதம்.

மண்ணச்சநல்லூர்

மண்ணச்சநல்லூர்

லால்குடி: 1,05,451 ஆண், 1,12,371 பெண், 15 இதர என 2,17,837 வாக்காளர்களில், 82,912 ஆண், 89,676 பெண், 3 இதர என 1,72,591 பேர் வாக்களித்தனர். 79.23 சதவீதம்.

மண்ணச்சநல்லூர்: 1,17,994 ஆண், 1,26,018 பெண், 31 இதர என 2,44,043 வாக்காளர்களில், 94,763 ஆண், 99,577 பெண், 1 இதர என 1,94,341 பேர் வாக்களித்தனர். 79.63 சதவீதம்.

துறையூர்

துறையூர்

முசிறி: 1,13,467 ஆண், 1,19,166 பெண், 21 இதர என 2,32,654 வாக்காளர்களில், 86,392 ஆண், 90,373 பெண், 6 இதர என 1,76,771 பேர் வாக்களித்தனர். 75.98 சதவீதம்.

துறையூர் (தனி) தொகுதி: 1,09,415 ஆண், 1,16,658 பெண், 15 இதர என 2,26,088 வாக்காளர்களில், 82,733 ஆண், 90,518 பெண், இதர 2 என 1,73,253 பேர் வாக்களித்தனர். 76.63 சதவீதம்.

எவ்வளவு வாக்கு

எவ்வளவு வாக்கு

மாவட்டம் முழுவதும் 11,35,780 ஆண், 12,02,728 பெண், 237 இதர என 23,38,754 மொத்த வாக்காளர்களில், 8,41,493 ஆண், 8,78,722 பெண், 64 இதர என 17,20,279 பேர் வாக்களித்தனர். அதேபோல, 2,94,287 ஆண்கள், 3,24,006 பெண்கள், 173 திருநங்கைகள் என 6,18,466 பேர் வாக்களிக்கவில்லை. மொத்த வாக்குப்பதிவு 73.56 சதவீதம் பதிவாகி உள்ளது. ஆண்களை விட 66,948 பெண்கள் கூடுதலாக வாக்களித்து ஜனநாயக கடமையாற்றி சாதனை படைத்துள்ளனர்.

English summary
Out of 17.20 lakh voters in Trichy district, 66,948 women fulfilling their democratic duty outnumbered men.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X