Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விஜய் வருகையின்போது மக்கள் வெள்ளத்தில்.. ஆம்புலன்ஸ்க்கு வழி ஏற்படுத்தி கொடுத்த தவெக தொண்டர்கள்!

Subscribe to Oneindia Tamil

திருச்சி: திருச்சி விமான நிலையத்துக்கு தவெக தலைவர் விஜய் வருகை தந்தபோது, அப்பகுதியில் கூட்ட நெரிசலில் சிக்கி ஸ்தம்பித்த ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு தவெக தொண்டர்கள் வழி ஏற்படுத்தி பத்திரமாக அனுப்பி வைத்தனர். அண்மையில் அதிமுக பிரச்சார கூட்டத்தின்போது ஆம்புலன்ஸ் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இன்று தனது தேர்தல் சுற்றுப்பயணத்தை தொடங்குவதற்காக திருச்சி வந்தடைந்தார். விமான நிலையத்தில் விஜய்க்கு தவெக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். விமான நிலையத்தில் இருந்து வழிநெடுங்க ஆயிரக்கணக்கான தொண்டர்கள் விஜய்யை காண குவிந்தனர். விமான நிலையத்தில் இருந்தே விஜய்யின் வாகனம் வெளியே வரமுடியாத நிலையில், ஆயிரக்கணக்கான தொண்டர்கள் அவரை சூழ்ந்தனர்.

TVK Volunteers Clear Way for Ambulance During Vijay s Arrival at Trichy Airport

திருச்சியில் விஜய்

கட்டுக்கடங்காத கூட்டம், விஜய்யின் பிரச்சார வாகனத்துக்கு முன்பும், பின்பும் சென்று வருகிறது. தொண்டர்கள் விஜய்யின் வாகனத்தை விமான நிலையம் முதலே பின்தொடரத் தொடங்கினர். காவல்துறை நிபந்தனைகளை எல்லாம் மீறி தொண்டர்கள் அதிகளவில் திரண்டதால், விமான நிலையத்தில் இருந்து மரக்கடை பகுதிக்கு விஜய்யின் பிரச்சார வாகனம் ஊர்ந்து செல்கிறது.

காலை 10.35 மணிக்கு விஜய் திருச்சி காந்தி மார்க்கெட் மரக்கடை எம்ஜிஆர் சிலை அருகே பிரச்சாரம் மேற்கொள்ள அனுமதியளிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் பிரச்சார இடத்துக்கு செல்வதில் பெரும் தாமதம் ஏற்பட்டுள்ளது. கூட்டம் கட்டுக்கடங்காமல் இருப்பதால் அவர் நிகழ்விடத்துக்குச் செல்லவே இன்னும் ஒரு மணி நேரம் ஆகும் என்று கூறப்படுகிறது.

ஆம்புலன்ஸுக்கு வழி

இதற்கிடையே, விமான நிலைய பகுதியில் தவெகவினரின் கூட்ட நெரிசலில் சிக்கி ஸ்தம்பித்த ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு தவெக தொண்டர்கள் வழி ஏற்படுத்தி பத்திரமாக அனுப்பி வைத்தனர். கூட்டத்திற்கு மத்தியில் சைரன் ஒலித்து ஆம்புலன்ஸ் திணறிய நிலையில் சில தவெக தொண்டர்கள், அதற்கு உடனடியாக வழி ஏற்படுத்திக் கொடுத்து அனுப்பி வைத்தனர்.

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, "மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்" என்ற பெயரில் பிரசார பயணம் மேற்கொண்டு வருகிறார். சில நாட்களுக்கு முன்பு வேலூர் மாவட்டத்தில் பிரசாரம் மேற்கொண்ட போது 108 ஆம்புலன்ஸ் சென்றது. நோயாளி இல்லாமல் ஒவ்வொரு கூட்டத்திலும் வெறும் வாகனத்தை வேண்டுமென்றே ஓட்டிக்கொண்டு வருவதாக எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டினார்.

ஆம்புலன்ஸ் சர்ச்சை

இனி நான் பிரச்சாரம் செய்யும்போது ஆம்புலன்ஸ் வந்தால் ஆம்புலன்ஸை ஓட்டி வருபவர் அதே ஆம்புலன்ஸில் நோயாளியாக போவார் என மிரட்டல் விடுத்தார் எடப்பாடி பழனிசாமி. இதையடுத்து அதிமுக தொண்டர்கள் ஆம்புலன்ஸ் வாகனத்தை சூழ்ந்து கொண்டு தாக்கிய சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. திருச்சி மாவட்டம் துறையூரில் எடப்பாடி பழனிசாமி பரப்புரையின்போது வந்த ஆம்புலன்ஸை அதிமுகவினர் தாக்கினர். இதில் ஆம்புலன்ஸ் டிரைவர் மற்றும் உதவியாளரான கர்ப்பிணி பெண் ஆகியோர் காயமடைந்தனர். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

டிஜிபி உத்தரவு

இந்நிலையில், அதிக போக்குவரத்து மிகுந்த பிரதான சாலைகளில் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள், பொதுக்கூட்டங்களுக்கு அனுமதி வழங்கக்கூடாது. தவிர்க்க முடியாத பட்சத்தில், அனுமதிக்கும்போது போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என காவல் ஆணையர்கள், காவல் கண்காணிப்பாளர்களுக்கு டிஜிபி அறிவுறுத்தி உள்ளார்.

மேலும், 108 ஆம்புலன்ஸ், தீயணைப்பு, மீட்பு வாகனங்கள் மற்றும் காவல் மீட்பு வாகனங்கள் உட்பட அனைத்து அவசர கால வாகனங்களும் தடையின்றிச் செல்ல முடியும் என்பதை முன்கூட்டியே உறுதிப்படுத்த வேண்டும். அவசர கால வாகனங்கள் செல்வதற்கான பாதையை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்றும் டிஜிபி அறிவுறுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+