திருச்சி அருகே டாஸ்மாக் பாரில் மது வாங்கி குடித்த 2 பேர் மரணம்.. ஒருவர் உயிர் ஊசல்.. பகீர் பின்னணி
திருச்சி: திருச்சி அருகே டாஸ்மாக் பாரில் மது வாங்கி குடித்த 2 பேர் மரணம் அடைந்தனர். ஒருவர் உயிருக்கு போராடி வருகிறார். இந்த சம்பவம் திருச்சி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி மாவட்டம் தா.பேட்டை அருகே உள்ள கண்ணனூரில் டாஸ்மாக் மதுக்கடை உள்ளது. இந்த கடையில் பாரும் செயல்பட்டு வருகிறது. இந்த பாருக்கு காலை 6.30மணிக்கு சென்ற சரவணன்(வயது 30), ரத்தினம் (55), சதீஷ் (30) ஆகியோர் சட்டவிரோதமாக விற்கப்பட்ட மதுவை வாங்கி குடித்திருக்கிறார்கள்.

இதில் மது அருந்திய 3 பேரும் ஒருவர் பின் ஒருவராக சுருண்டு விழுந்து கடும் வயிற்று வலியால் துடித்திருக்கிறார்கள். இதில் சரவணன் என்பவர் நிகழ்விடத்திலேயே துடி துடித்து உயிரிழந்தார்.
மற்ற இரண்டு பேரையும் பொதுமக்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதில் ரத்தினம் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். சதீஷை சிகிச்சைக்காக பெரம்பலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கண்ணனூர் டாஸ்மாக் மதுக்கடை பாரில் சட்டவிரோதமாக மதுவிற்பனை செய்யப்படுவதுடன் மதுவில் போதை அதிகம் ஏறுவதற்காக சில பொருட்கள் சேர்க்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளது. இதையடுத்து பாரில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த அனைத்து மது பாட்டில்களையும் பறிமுதல் செய்த போலீசார் அவற்றை ஆய்வுக்காக கொண்டு சென்றனர்.
இந்த சம்பவம் குறித்து ஜம்புநாதபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். திருச்சி மாவட்டத்தில் பல டாஸ்மாக் பார்களில் சட்டவிரோதமாக விடிய விடிய மது விற்பனை நடந்து வருவதாகவும் இதனால் அப்பாவி ஏழைகள் கடுமையாக பாதிக்கப்படுவதாகவும் புகார்கள் எழுந்துள்ளது. இந்த விஷயத்தில் திருச்சி மாவட்ட காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
திருச்சி லாட்ஜில் காதலிக்கு போடப்பட்ட போதை ஊசி.. காதலன், நண்பனை விசாரித்தால் திடுக்கிடும் தகவல்கள் -
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது?












Click it and Unblock the Notifications