Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பவுன்சர்களால் பஞ்சராகும் விஜய் இமேஜ்.. திருச்சி விமான நிலையத்தில் மீண்டும் ஒரு பஞ்சாயத்து

Subscribe to Oneindia Tamil

திருச்சி: தமிழக வெற்றி கழகம் கட்சி தலைவர் விஜய் பிரசாரம் என்றாலே பிரச்சினைதான் என்பது போல.. திருச்சி விமான நிலையத்தில் அரங்கேறியிருக்கிறது மீண்டும் ஒரு அட்ராசிட்டி.. என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.

தமிழக வெற்றி கழகம் என கட்சி தொடங்கிய விஜய் யாருடனும் கூட்டணி அமைக்காமல் தமிழகம் முழுவதும் இருநூற்று முப்பத்தி நான்கு தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தி தனியே களம் காண்கிறார். திமுக, அதிமுக என இரு பெரும் கட்சிகளுக்கும் மாற்றாக தனது அரசியல் கட்சி தமிழகத்தில் மாற்றத்தை நிகழ்த்தப் போகிறது என்கிற சூளுரையோடு தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார் விஜய். ஆனால், தனது தேர்தல் பிரச்சாரத்தையே சரியாக திட்டமிட முடியாத விஜய் தமிழகத்தை எப்படி திட்டமிட்டு முன்னேற்றம் நோக்கி வழிநடத்த போகிறார் என மக்கள் கேட்கும் கேள்விகளை தவிர்க்க முடியவில்லை.

Vijay s Image Takes a Hit Due to Bouncers Another Controversy Erupts at Trichy Airport

தமிழகம் முழுவதும் விஜய் சுற்றுப் பிரசாரம் செய்யும் இடங்களில் எல்லாம் ஏதோ ஒரு தடங்கல் அல்லது திட்டமிடல் தவறு நடந்து கொண்டே தான் இருக்கிறது. அதை உறுதி செய்யும் விதமாக இன்று திருச்சி விமான நிலையத்தில் விஜயுடன் வந்த தனியார் பாதுகாவலர்கள் என அழைக்கப்படும் பவுன்சர்களுக்கும் செய்தியாளர்களுக்கும் ஏற்பட்ட தள்ளுமுள்ளு விஜய் மீதான எதிர்மறை வெறுப்பை இன்னும் அதிகமாக்கி இருக்கிறது என்றே சொல்ல வேண்டும். திருச்சி விமான நிலையத்தில் இது முதல் முறை அல்ல வ் கரூர் பரப்புரை மேற்கொள்வதற்காக தவெக தலைவர் விஜய் வந்தபோது திருச்சி விமான நிலையம் என்ன பாடுபட்டது என்பதை நாடே அறியும்.

அதன் நீட்சியாக இன்று தென் மாவட்டங்களில் குறிப்பாக காரைக்குடி, மதுரை உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு சென்னை திரும்புவதற்காக தவெக தலைவர் விஜய் திருச்சி விமான நிலையம் வந்தார் அவர் சென்ற பிறகு விஜயின் பாதுகாவலர்கள் செய்தியாளர்களை செய்தி சேகரிக்க விட முடியாமல் வாக்குவாதத்திலும் அதையும் மீறி தள்ளுமுள்ளுவிலும் ஈடுபட்டது சர்ச்சைக்கு உள்ளாக்கி உள்ளது.

தன்னை பாதுகாக்கும் தனிப்பட்ட பாதுகாவலர்கள் விஷயத்திலேயே விஜய் இவ்வளவு அசட்டையாக இருக்கிறார் என்றால்... அவரை நம்பி தமிழ்நாட்டை ஒப்படைத்தால் அவர் தமிழ்நாட்டு மக்களை பாதுகாக்கும் விஷயத்தில் எவ்வளவு அசட்டையாக இருப்பார் என்று தான் திமுக ஆதரவாளர்கள் பேசிக் கொள்கிறார்கள். தவெக தலைவராகவும், தமிழகத்தில் மாற்று அரசியலை முன்னெடுப்பதாகவும் விஜய் இப்பொழுதுதான் முதல்முறையாக தேர்தலில் களம் காண்கிறார். அதற்குள்ளாகவே தனது பவுன்சர்கள் மூலம் செய்தியாளர்களை தடுக்கும் விஜய் எப்போது நேரடியாக களத்தில் மக்களை சந்திக்கப் போகிறார்?.... எப்படி சந்திக்கப் போகிறார் என்கிற கேள்விக்கு விஜய் தான் பதில் சொல்ல வேண்டும் என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+