பெரியார் சிலைக்கு செருப்பு மாலை.. கொதித்த பாஜக தலைவர் முருகன்! பரபரப்பு அறிக்கை

Subscribe to Oneindia Tamil

திருச்சி: திருச்சியில் ஈ.வே.ரா சிலைக்கு செருப்பு மாலை அணிவித்தது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றும், இத்தகைய: அநாகரிகமான செயலை யார் செய்திருந்தாலும் சட்டப்படி காவல்துறை தண்டிக்க வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் எல். முருகன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருச்சியில் ஈ.வே.ரா சிலை மீது செருப்பு மாலையிட்டு அவமதித்திருப்பது வன்யைமாக கண்டிக்கத்தக்கது. இந்த அநாகரீகமான செயலை யார் செய்திருந்தாலும் சட்டப்படி தண்டிக்க வேண்டும். காவி புனிதமானது. அனைவரையும் அரவணைக்கும் தியாக பண்பின் குணமே காவி. அதை தவறான சிந்தனையோடு பயன்படுத்துவது பண்பல்ல.

wearing garland of sandals to the periyar statue in Trichy was highly reprehensible: bjp leader murugan

ஆனால் அதே நேரத்தில் திமுகவின் பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி, ஈ.வே.ரா.வின் பிறந்த நாளன்று நான் கூறியதை மேற்கோள் காட்டி இது தான் அவருக்கு நீங்கள் காட்டும் மரியாதையா என்று கேட்டிருப்பது அரசியல் உள்நோக்கத்துடன் வீசியிருக்கிற கேள்வி காவல்துறை விசாரித்துக் கொண்டிருக்கும் போது நேரத்திலேயே, இத்தகைய உள்நோக்கம் கற்பித்து அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கும் தி.மு.கவின் வன்மையமான அரசியல் உள்நோக்கம் கண்டிக்கத்தக்கது.

wearing garland of sandals to the periyar statue in Trichy was highly reprehensible: bjp leader murugan

மேலும் விசாரணை நிலுவையில் இருக்கும் போதே இப்படி பேசியிருப்பது , இந்த செய் திட்டமிட்ட சதியாக இருக்குமோ என்ற சந்தேகத்தையும் எழுப்புகிறது. ஆகையால் காவல்துறையினர் கனிமொழியிடம் இதுகுறித்து விசாரித்து உண்மையை அறிய வேண்டும். அநாகரீகமான செயலின் பின்னால் யார் இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்" இவ்வாறு கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+