திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

80 மணி நேர போராட்டம்.. கடைசி கட்டத்தில் நடந்தது என்ன?.. சுஜித் பலியானது உறுதி செய்யப்பட்டது எப்படி?

குழந்தை சுஜித்தை மீட்கும் போராட்டத்தில் கடைசி கட்டத்தில் நடந்தது என்ன? இன்று அதிகாலை சுஜித் உடல் எப்படி மீட்கப்பட்டது என்று விவரங்கள் வெளியாகி உள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    Sujith rescue operation | சுஜித் பலியானது உறுதி செய்யப்பட்டது எப்படி?

    திருச்சி: குழந்தை சுஜித்தை மீட்கும் போராட்டத்தில் கடைசி கட்டத்தில் நடந்தது என்ன? இன்று அதிகாலை சுஜித் உடல் எப்படி மீட்கப்பட்டது என்று விவரங்கள் வெளியாகி உள்ளது.

    ஆழ்துளை கிணற்றுக்குள் சிறுவன் சுஜித் விழுந்த சம்பவம் நாட்டையே பதை பதைக்க வைத்துள்ளது. திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியை சேர்ந்த சுஜித் கடந்த வெள்ளிக்கிழமை மாலை ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்தார்.

    இந்த நிலையில் 4 நாட்களுக்கும் மேலாக சுஜித்தை மீட்கும் பணி தீவிரமாக நடந்தது. இன்று அதிகாலை 4.30 மணிக்கு சுஜித்தின் உடல் சடலமாக மீட்கப்பட்டது.

    4 மாதம் முன்.. பஞ்சாப் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன்.. 110 மணி நேரத்திற்கு பின் மீட்கப்பட்ட கதை4 மாதம் முன்.. பஞ்சாப் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன்.. 110 மணி நேரத்திற்கு பின் மீட்கப்பட்ட கதை

    என்ன முடிவு

    என்ன முடிவு

    சுஜித்தை மீட்க தீவிரமாக போராட்டம் நடந்து வந்த நிலையில் கடைசி நேரத்தில் ஆழ்துளை கிணறு வழியாகவே மீட்டு விடலாம் என்று மீட்பு படையினர் முடிவு எடுத்தனர். இதற்கு என்ன காரணம் என்று விவரம் வெளியாகி உள்ளது. அதேபோல் கடைசி கட்டத்தில் மீட்பு பணியின் போது என்ன நடந்தது என்ற விவரமும் தற்போது வெளியாகி இருக்கிறது.

    நேற்று மாலை

    நேற்று மாலை

    அதன்படி நேற்று மாலை 5.30 மணிக்கு 60 அடி வரை பள்ளம் தோண்டப்பட்டு இருந்தது. அப்போதுதான் சுரங்கம் தோண்டும் பணி தீவிரம் எடுத்தது. ரிக் இயந்திரம் மற்றும் போர்வெல் இயந்திரம் கொண்டு மீட்பு பணிகள் செய்யப்பட்டது . நேற்று 7.30 மணி அளவில் 63 அடி வரை குழி தோண்டப்பட்டது.

    ரிக் இயந்திரம்

    ரிக் இயந்திரம்

    அதன்பின் பாறை கிடையாது. வெறும் மணல் தரை மட்டுமே இருந்தது. இதனால் மீண்டும் ரிக் இயந்திரம் கொண்டு பள்ளம் தோண்டப்பட்டது. ஆனால் சில அடி தூரம் சென்ற பின் மீண்டும் பாறைகள் தென்பட்டது. இதனால் தீயணைப்பு வீரர் அஜித்குமார் கீழே சென்று பார்த்தார்.

    மீட்பு குழு

    மீட்பு குழு

    குழிக்குள் ஆக்சிஜன் சிலிண்டர் கட்டி உள்ளே இறங்கி எப்படி இருக்கிறது என்று பார்த்துவிட்டுவந்தார். இதையடுத்து எப்படியும் 35 அடி மேலும் தோண்ட வேண்டும் என்றால் ஒன்றரை நாள் ஆகும் என்று மீட்பு குழுவினர் தெரிவித்தனர். இதனால் உடனடியாக மருத்துவர்களிடம் மீட்பு குழு ஆலோசனை செய்தது.

    இப்போதே மீட்பு

    இப்போதே மீட்பு

    சுஜித்தை இப்போதே மீட்க வேண்டும். சுஜித் பெரும்பாலும் இறந்திருக்க வாய்ப்புள்ளது. 60 அடிக்கு கீழே சுவாசிப்பது கடினம். அதனால் சுஜித்தை ஆழ்துளை கிணறு வழியாகவே வெளியே கொண்டு வாருங்கள். அவர் பெரும்பாலும் உயிரோடு இருக்க வாய்ப்பில்லை என்று மருத்துவர்கள் கூறினார்கள்.

    அறிவிப்பு

    அறிவிப்பு

    மருத்துவர்களின் அறிவுறுத்தலின் படி அதிகாலை 2.30க்கு குழந்தை சுஜித் உயிரிழந்துவிட்டதாக வருவாய் நிர்வாக ஆணையர் தகவல் அறிவித்தார். சுஜித்தின் உடல் இருந்த குழியில் இருந்து துர்நாற்றம் வீசியதை அடுத்து அவர் இறந்ததாக உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து சுஜித் உடலை ஆழ்துளை கிணறு வழியாகவே மீட்டு எடுக்கும் பணிகள் நடந்தது.

    சடலமாக மீட்பு

    சடலமாக மீட்பு

    இரண்டு மணி நேரப் போராட்டத்திற்கு தேசிய பேரிடர் மீட்பு படை மூலம் அதிகாலை 4:30 மணியளவில் குழந்தை சுஜித்தின் உடல் சிதைந்த சிலையில் சடலமாக மீட்கப்பட்டது. 4 நாட்களுக்கும் மேலாக நடைபெற்ற மிகப்பெரிய போராட்டம் பெரும் தோல்வியில் முடிந்தது.

    English summary
    What actually happened at the end of Sujith rescue operation? - Here is the full details.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X