திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சக்ஷன் முறையில் எப்படி சுஜித்தை மீட்பார்கள்?

உறிஞ்சி எடுக்கும் புதிய தொழில்நுட்ப முறை என்றால் என்ன?

Google Oneindia Tamil News

Recommended Video

    போர்வெல்லில் குழந்தைகள் சிக்கிக் கொண்டால் இப்படி மீட்கலாம்..

    திருச்சி: 70 அடியில் இருந்த குழந்தை சுஜித் 80 அடியில் விழுந்துவிட்டான்.. இதனால் சுஜித்தை மீட்பதில் மிகப் பெரி சவால்களை மீட்புப் படையினர் சந்தித்து வருகின்றனர். பல வழிகளை முயன்றும் கூட எதுவும் பலனளிக்காத நிலையில் தற்போது சக்ஷன் முறையை கையில் எடுத்துள்ளனர் தேசிய பேரிடர் மீட்புப் படையினர். இன்னொரு பக்கம் சுரங்கம் போன்று குழி தோண்டி குழந்தையை எடுக்க என்எல்எசி குழு இறங்கி உள்ளது.

    தேசிய பேரிடர் மீட்புப் படையினர் போர்வெல்களில் சிக்கிக் கொள்ளும் குழந்தைகளை இதுபோன்ற முறையில் பொதுவாக மீட்பது வழக்கம்தான். தற்போது சுஜித்தையும் இதே பாணியில் மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    what is suction method in rescue operations

    சுஜித்தை மீட்க நேற்று மாலை 5.40 மணியிலிருந்து மீட்புப் படையினர் முயன்று வருகின்றனர். ஆனால் இதுவரை எந்த பலனும் இல்லை. மாறாக 70 அடிக்குக் கீழ் போய் விட்டான் குழந்தை. சற்று நேரத்துக்கு முன்பு 70 80 அடிக்கு கீழ் இறங்கிவிட்டான். அதாவது 600 அடி ஆழமுள்ள கிணற்றில் 80-வது அடியில் உள்ளான் குழந்தை சுஜித். இதனால் குடும்பத்தினரும், கிராமத்தினரும், ஒட்டுமொத்த தமிழகமும் பெரும் வேதனையில் மூழ்கியுள்ளது.

    இந்த நிலையில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் தற்போது புதிய முயற்சியை கையில் எடுத்துள்ளனர். அதுதான் சக்ஷன் எனப்படும் உறிஞ்சி எடுக்கும் முறை. தற்போது சிறுவனின் தலைப் பகுதியில் மண் மூடிக் கிடப்பதால் மண்ணை முதலில் கம்ப்ரசர் மூலம் அப்புறப்படுத்தி விட்டு சிறுவனை அங்கிருந்து சக்ஷன் முறையில் வெளியில் கொண்டு வரதிட்டமிட்டுள்ளனர்.

    சுஜித் மீட்பு பணிதீவிரம்.. சக்ஷன் முறையில் வெளியில் எடுக்க புதிய முயற்சி.. பரபரப்பில் மணப்பாறைசுஜித் மீட்பு பணிதீவிரம்.. சக்ஷன் முறையில் வெளியில் எடுக்க புதிய முயற்சி.. பரபரப்பில் மணப்பாறை

    இந்த முறையின்படி சிறுவனின் தலை அல்லது கைப் பகுதியில் ஒரு கருவி பொருத்தப்படும். நன்றாக இறுகிப்பிடித்துக் கொள்ளும் அந்தக் கருவியை மேலிருந்து இயக்கி அப்படியே அலேக்காக மேலே தூக்கி வருவதுதான் இந்த சக்ஷன் முறையின் திட்டம். இதற்கு முன்பு இதுபோல செய்துள்ளனர். ஆனால் சுஜித் விஷயத்தில் நிறைய சிக்கல்கள் இருப்பதால் இந்த முயற்சி எந்த அளவுக்கு பலன் தரும் என்று தெரியவில்லை.

    ஒருவேளை இதன்மூலம் பலன் தரவில்லை என்றால், மாற்று வழி மூலம் குழந்தையை எடுப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. மேலும் என்எல்சி குழுவினர் குழந்தையை மீட்க இன்னொரு பக்கம் முயற்சி மேற்கொள்கின்றனர். அதாவது கிணறுக்கு ஒரு மீட்டருக்கு அருகிலேயே சுரங்கம் போன்ற குழி தோண்டி குழந்தையை எடுக்க முடிவு செய்துள்ளனர். இவர்களுடன் தனியார் அமைப்பும் இணைந்து 70 அடி ஆழத்துக்கு இந்த போர்வெல் போடும் வேலையில் இறங்கி உள்ளனர். இதன்மூலம் குழந்தையை எளிதாக மீட்டுவிடலாம் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

    பார்க்கலாம்.

    English summary
    2 years old child sujith rescue: what is suction method in rescue operations
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X