சூரிய குல வம்சத்தின் குல தெய்வம்.. அயோத்தி ராமருக்கும் ஸ்ரீரங்கநாதருக்கும் இப்படி ஒரு தொடர்பா?
திருச்சி: அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்காக விரதம் இருந்து வரும் பிரதமர் மோடி, ஸ்ரீரங்கம் ரங்கநாதரையும், ராமேஸ்வரம் ராமநாதசுவாமியையும் தரிசனம் செய்யப்போகிறார். ராமருக்கும் ஸ்ரீரங்கநாதருக்கும் என்ன தொடர்பு என்று பார்க்கலாம்.
குலதெய்வம்: மனிதர்களாக பிறந்த அனைவருக்குமே குல தெய்வம் என்று உள்ளது. அதே போல மகாவிஷ்ணு மனிதராக ஸ்ரீராமராக அவதாரம் எடுத்தவர். அயோத்தியில் அவர் வணங்கிய குல தெய்வம்தான் ஸ்ரீரங்கம் ரங்கநாதர். இதனை நிரூபிக்கும் வகையிலேயே உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக சில ஆண்டுகளுக்கு முன்பு அடிக்கல் நாட்டும் போது ராமரின் குலதெய்வ கோவிலான ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலிலிருந்து வஸ்திரங்கள் மற்றும் கொள்ளிடம் ஆற்றில் இருந்து மண் அனுப்பி வைக்கப்பட்டது.

அயோத்தி ராமர்: ராமர் கோயில் கும்பாபிஷேகம் வரும் ஜனவரி மாதம் 22ம் தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவிற்காக பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. பால ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. இதற்காக 11 நாட்கள் கடும் விரதம் இருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி.
மோடி தரிசனம்: கும்பாபிஷேகத்திற்கு முன்பாக நாட்டில் உள்ள பிரபல ராமர் ஆலயங்களுக்கும், ராமபிரானுக்கு தொடர்புடைய ஆலயங்களுக்கும் சென்று வழிபட்டு வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி. நாளை மறுநாள் 19ஆம் தேதியன்று ஸ்ரீரங்கம் வந்து ஸ்ரீரங்கநாதரையும், ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாதசுவாமியையும் தரிசனம் செய்யப்போகிறார்.
ஸ்ரீரங்கம் ரங்கநாதர்: மகாவிஷ்ணுவின் 108 திவ்ய தேசங்களில் முதன்மையானதாகவும், பூலோக வைகுண்டம் என்றும் போற்றப்படுவது திருச்சி ஸ்ரீரங்கம் ஆலயம். இந்த ஆலயம் எப்படி இங்கு வந்தது? ஸ்ரீரங்கநாதர் இங்கு எழுந்தருளியது எப்படி என்று பலருக்கும் கேள்வி எழலாம். ஆழ்வார்கள் பலரால் பாடப்பெற்றுள்ளது ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயம். மூலவர் ரங்கநாதர் என்றும் பெரிய பெருமாள் என்றும் திருநாமங்கள் உடையவர். உற்சவ மூர்த்தியான ரங்கராஜர், நம்பெருமாள் என்றும் அழகிய மணவாளன் என்றும் போற்றப்படுகிறார்.
சுக்கிரன் ஸ்தலம்: ஸ்ரீரங்கம் சுக்கிர ஸ்தலமாக போற்றப்படுகிறது. வலக்கை திருமுடியைத் தாங்க, இடக்கை மலர்ப்பாதத்தை சுட்டிக் காட்ட தெற்கு முகமாக இலங்கையை நோக்கியபடி அருள் பாலிக்கிறார் மூலவர் ஸ்ரீரங்கநாதர். இதற்கும் ஒரு காரணம் உண்டு. பிரம்மா செய்த தவத்தால் திருப்பாற்கடலிருந்து வெளிப்பட்டு தோன்றியதால் பள்ளி கொண்ட பெருமாளை சுயம்பு என்று கூறுகின்றனர்.
சூரியன் செய்த பூஜை: ஸ்ரீரங்கநாதருக்கு தினமும் பூஜை செய்வதற்காக சூரியனை நியமித்தார் பிரம்மா. இதன் காரணமாகவே சூரிய குலத்தவர்களின் குல தெய்வமானார் ஸ்ரீரங்கநாதர். பல ஆயிரம் ஆண்டுகள் பிரம்மா மகாவிஷ்ணுவை நோக்கித் தவம் இருந்து, பாற்கடலிலிருந்து பெறப்பட்டது ரங்க விமானம். நான்கு வேதங்களையும் பிரம்மா இந்த விமானத்தின் முன் ஓதியுள்ளார். ஸ்ரீரங்க விமானத்துக்குள் ஆதிசேஷன் மீது பள்ளி கொண்டிருக்கிறார் ஸ்ரீரங்கநாதர்.
ஸ்ரீராமர் கொடுத்த பரிசு: ரங்க விமானத்தில் அர்ச்சா ரூபமாக அவதரித்த ஸ்ரீரங்கநாதரை இச்வாகு குலத்தைச் சேர்ந்த மன்னர்கள் தங்களின் குல தெய்வமாக அயோத்தியில் வைத்து பூஜை செய்து வந்தனர். இந்த குலத்தைச் சேர்ந்த ராமபிரான், சீதையை மீட்க உதவிய விபீஷணனுக்கு ஸ்ரீரங்கநாதர் விக்கிரகத்தை பரிசாக அளித்தார். விபீஷணன் இலங்கைக்கு எடுத்துச் செல்லும் வழியில் தர்ம வர்மா என்னும் சோழ மன்னனின் வேண்டுகோளுக்கு இணங்க மூர்த்தத்தை காவிரி நதியின் கரையில் தன் அரசனான இலங்கையை நோக்கி அருள் தரும் முகமாக பிரதிஷ்டை செய்ததாக ரங்க மகாத்மியம் கூறுகிறது.
பிரம்மாண்ட திருவிழா: விபீஷணன் அசுர குலத்தை சேர்ந்தவர் என்பதால் இவ்வளவு பெரிய விமானத்தை ஸ்ரீரங்கம் வரை சுமந்து வந்திருக்கிறார். இந்த ஆலயத்தில் தை மாதத்தில் நடைபெறும் பிரம்மாண்ட திருவிழா பூபதி திருநாள் கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. 19ஆம் தேதியன்று 4ஆம் திருநாள் கருடசேவை தரிசனம் நடைபெற உள்ளது. அன்றைய தினம் ஸ்ரீரங்கம் வருகிறார் பிரதமர் நரேந்திரமோடி.
ராமேஸ்வரம்: ராமாயண இதிகாசத்துடன் தொடர்புடையது ராமேஸ்வரம். ராவணனை கொன்ற பாவம் தீர பிரம்மஹத்தி தோஷம் நீங்குவதற்காக சிவ பூஜை செய்வதற்காக ராமர் உருவாக்கிய லிங்கம்தான் ராமநாதசுவாமி என்று புராண கதையில் கூறப்பட்டுள்ளது. பித்ருக்களுக்கு தர்ப்பணம், திதி அளிக்க நாடு முழுவதிலும் இருந்து ராமேஸ்வரத்திற்கு பலரும் வருகின்றனர். காசி யாத்திரை செல்பவர்கள் அவசியம் ராமேஸ்வரம் வந்து புனித நீராடி வழிபட்டு செல்வார்கள்.
குல தெய்வ வழிபாடு: அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு முன்பாக ராமரின் குல தெய்வமான ஸ்ரீரங்கநாதரையும், அவர் நிர்மானித்த ராமேஸ்வரம் ராமநாத சுவாமியையும் வழிபட வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி. ஸ்ரீரங்கம் வரும் பிரதமர் மோடியை வரவேற்க பாஜகவினர் தயாராகி வருகின்றனர்.
பிரம்மாண்ட வரவேற்பு: ராமதூதராகவும் ஸ்ரீ ராமபிரான் அவதரித்த அயோத்தியை புணரமைத்து பாலன் ராமரை பிரதிஷ்டை செய்யும் முன்பு சென்னையில் இருந்து நேராக ஸ்ரீராமபிரானின் குலதெய்வமான ஸ்ரீரங்கப் பெருமானை சேவித்து அங்கிருந்து ஸ்ரீ ராமர் பூஜித்த ராமேஸ்வர ஈஸ்வரனையும் தரிசித்து ஆசிகளைப் பெற்றுக் கொண்டு நேராக அயோத்திக்கு செல்ல இருக்கிறார். இந்த ராம காரியத்தில் பங்கு கொள்ளும் விதமாக ராம பக்தனாக நாம் பிரதமரை வரவேற்க வேண்டும் என்று பாஜகவினர் சமூக வலைத்தளங்களில் அழைப்பு விடுத்துள்ளனர்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications