"லீலை".. தேவியின் திருவிளையாடலில் சிக்கிய மைனர்.. மிட்நைட்டில் அதிர்ந்த பெற்றோர்.. திணறிய திருச்சி

Subscribe to Oneindia Tamil

திருச்சி: உறையூரே உறைந்து போயிருக்கிறது இந்த டீச்சர் செய்த காரியத்தை பார்த்து.. புத்தி பேதலித்து, காமம் தலைக்கேறி, கேடுகெட்ட செயலை செய்துள்ளார் அரசு பள்ளி ஆசிரியை ஒருவர்.. என்ன நடந்தது உறையூரில்?

பாலியல் சீண்டல்களினால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்குழந்தைகள்தான்.. உடல் மற்றும் மனரீதியான பிரச்சனைகளை பெண் குழந்தைகள் அதிகம் எதிர்கொள்ள நேரிடுகிறது..

Who is this Devi teacher and Minor children should be brought up by parents with more care

அதேசமயம், இந்த கொடுமைக்குள் பிஞ்சு சிறுவர்களும் அடக்கம் என்பதை பலர் அறிவதில்லை. இப்படிப்பட்ட சிறுவர்களை வன்கொடுமைக்கு உள்ளாக்குவது பெரும்பாலும், பெண்களே என்பது அதிர்ச்சி நிறைந்த உண்மை.

தேவி டீச்சர்: சமீபகாலமாகவே, போக்சோவில் இளம்பெண்கள் கைதாகி வருவதும், மிகுந்த கவலையை உண்டாக்கி வருகிறது.. இதோ இந்த பெண் ஒரு ஆசிரியை.. இவர் வழிதவறி சென்றதுடன், தன்னிடம் டியூஷன் படிக்க வந்த மாணவனையும் வழி தவற செய்திருக்கிறார்..

திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் வலையப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் தேவி.. 40 வயதாகிறது.. அரசு உதவி பெறும் பள்ளியில் கணக்கு டீச்சராக பணிபுரிந்து வருகிறார்.. கல்யாணம் ஆகிவிட்டது.. வி.மேட்டூர் பகுதியை சேர்ந்த ஒருவரை, கடந்த 13 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார்...

2 குழந்தைகள்: கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கணவர் டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு எழுதி நாமக்கல்லில் அரசு பணியில் உள்ளார். இந்த தம்பதியருக்கு 2 பெண் குழந்தைகள் இருக்கிறார்கள்.. கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்படவும், 2 பேருமே பிரிந்துவிட்டனர்..

குழந்தைகளுடன் தன்னுடைய பெற்றோர் வீட்டிற்கு வந்துவிட்டார் தேவி.. நாமக்கல்லிலேயே கணவர் வேலை பார்த்து வருகிறார்.. இந்நிலையில், தன்னுடைய கிளாஸில் படிக்கும் மாணவர்களுக்கு, சாயங்காலம் நேரங்களில் டியூஷன் எடுத்து வந்திருக்கிறார் தேவி.. இதில் அதே பகுதியை சேர்ந்த 10ம் வகுப்பு மாணவர் ஒருவரும், டீச்சரிடம் டியூஷன் படிக்க வந்திருக்கிறார்.. தேவி பணிபுரியும் அதே ஸ்கூலில்தான் இந்த மாணவனும் படித்து வருகிறார்.. கணக்கு பாடம் சரியாக வரவில்லை.. குறைந்த மார்க் எடுக்கவும், தங்கள் மகனை தேவியிடம் டியூஷனுக்கு மாணவனின் பெற்றோர் அனுப்பி வைத்துள்ளனர்...

டியூஷன் நேரம்: ஸ்கூல் முடிந்து வீட்டுக்கு வந்ததுமே, அந்த மாணவன் டீச்சர் வீட்டுக்கு சென்று விடுவாராம்.. நைட் 9 மணி வரை டீச்சர் வீட்டிலேயே இருப்பார்.. கிட்டத்தட்ட 5 மணி நேரம் டியூஷன் நடப்பதை பார்த்து பெற்றோர் பூரித்தனர்.. இவ்வளவு நேரம் டியூசன் படித்து வந்த காரணத்தால், தங்கள் மகன் கணிதத்தில் நன்றாக தேறி 100 மார்க் எடுப்பான் என்றெல்லாம் பெற்றோர் எதிர்பார்ப்பில் இருந்தனர்..

படிப்பில் வித்தியாசம் தெரியும் என்று நம்பி கொண்டிருந்தால், மகனிடமே வித்தியாசம் தெரிவதை பார்த்து பெற்றோர் அதிர்ந்து போனார்கள் - குழம்பியும் போனார்கள்.. அதற்கு பிறகுதான், பலான பாடம் டியூஷனில் எடுக்கப்பட்டுள்ளதை அறிந்து விக்கித்து உறைந்தனர்.

நடுராத்திரி பேச்சு: இதுபற்றி போலீஸார் சொல்லும்போது, "கடந்த சில மாதங்களாகவே, அந்த மாணவரின் செயல்பாடுகளில் மாற்றங்கள் தென்பட்டிருக்கிறது.. ஸ்கூல் முடிந்ததுமே தேவி வீட்டுக்கு சென்றுவிடுவான்.. லீவு நாட்களிலும்கூட, வீட்டில் இருக்காமல் தேவி வீட்டுக்கு சிறுவன் சென்றிருக்கிறான்.. மணிக்கணக்கில் அந்த வீட்டிலேயே இருந்து வந்துள்ளான்... வீட்டுக்கு வந்ததும், நைட் முழுக்க செல்போனில் மூழ்கி இருந்துள்ளான்.. 12 மணி வரைக்கும் டீச்சரிடம்தான் போனில் பேசி வந்திருக்கிறான்.. அவனது பெற்றோருக்கு பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியது இந்த நடுராத்திரி போன் பேச்சுக்கள்தான்.

கணக்கு டீச்சர்: அதன்பிறகுதான், மகனை கண்காணிக்க தொடங்கினர்.. இதில் தேவியின் லீலைகளை அறிந்து அதிர்ச்சி அடைந்து, என்ன செய்வதென்றே புரியாமல் விழித்துள்ளனர்.. பிறகு, குழந்தைகள் நல அமைப்புக்கு தகவல் தந்துள்ளனர்.. தகவல் அறிந்த அவர்கள் மாணவரிடம் தனியாக விசாரித்தனர். அப்போது தேவி டீச்சர், அந்த மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து குழந்தைகள் நல அமைப்பு அளித்த புகாரின் பேரில் முசிறி மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமி, தேவி டீச்சர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர்.

அந்த மாணவர் குழந்தைகள் நிலை காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.. கைதான தேவி தன்னுடைய வகுப்பில் படிக்கும் வேறு மாணவர்களுக்கும் பாலியல் ரீதியாக துன்புறுத்தல் அளித்திருப்பதாக தெரிகிறது.. அதனால், சக மாணவர்களிடமும் விசாரணையை தொடங்கியுள்ளனர்" என்றனர். போக்சோவில் ஸ்கூல் டீச்சர் கைதானது மிகப்பெரிய அதிர்வலைகளை பெற்றோர்கள் மத்தியில் ஏற்படுத்தி உள்ளது..

கொடுமைய பாருங்க: பெண் குழந்தைகளை மட்டுமல்ல, ஆண் குழந்தைகளையும் பெற்றோர்கள், அதிக கண்காணித்து வளர்க்க வேண்டும் என்பதை இந்த சம்பவம் அழுத்தமாக வலியுறுத்தியிருக்கிறது.. உயர்வான அரசு பணி என்பதையும் மதிக்காமல், புனிதமான ஆசிரியர் பணி என்பதையும் மதிக்காமல், கணவரையும் விரட்டியனுப்பிவிட்டு, மாணவர்களின் எதிர்காலத்தையும் சூனியமாக்கிவிட்டு, இன்று ஜெயிலில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார் தேவி.. வீட்டில் 2 பெண் குழந்தைகளை வைத்திருக்கிறோமே என்பதைகூட, இந்த தேவி டீச்சர் யோசிக்கவில்லையே..!!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+