10ம் வகுப்பிலேயே.. மரத்தடியில் பெட்ஷீட் + தாலி + மரக்காணம் அஜித்.. இதெல்லாம் எங்கே போயி முடியுமோ?

Subscribe to Oneindia Tamil

திருச்சி: வெறும் 15 வயதுதான் ஆகிறது.. அதுக்குள்ளேயே காதல்.. அதுக்குள்ளேயே விரக்தி... அதுக்குள்ளேயே கல்யாணம்.. அதுக்குள்ளேயே தற்கொலை - இந்த 10ம் வகுப்பு பெண்ணை நினைத்து பதறிப்போய் கிடக்கிறது திருச்சி.

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்து புத்தானத்தம் அருகே உள்ளது கருத்தக்கோடங்கிப்பட்டி.. இங்கு வசித்து வரும் தம்பதி பொன்னுசாமி- சித்ரா. இவர்களது மகள் ஸ்ரீநிதி.. அங்கிருக்கும் அரசு உயர்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார் 15 வயது ஸ்ரீநிதி.

why did 10 std student Take this sudden decision and who is this Trichy Marakanam boyfriend

திடீர் மாயம்: இந்நிலையில், கடந்த 6-ம் தேதி வீட்டிலிருந்த ஸ்ரீநிதி திடீரென மாயமானார்.. அவர் எங்கே போனார் என்றே தெரியவில்லை.. கடைக்கு எங்காவது சென்றுவிட்டு வீட்டிற்கு வந்துவிடுவார் என்று நினைத்துள்ளனர்.. ஆனால், நேரமாகியும் வீடு திரும்பாததால், பெற்றோர் பதறிப்போய்விட்டார்கள். இதனால், ஸ்ரீநிதியை பல்வேறு இடங்களில் தேடினார்கள்.. எங்குமே மகள் கிடைக்கவில்லை.

எனவே, புத்தானத்தம் போலீசுக்கு சென்று புகார் தந்தார்கள்.. போலீசாரும் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன ஸ்ரீநிதியை தேட துவங்கினார்கள். அப்போதுதான், அந்த கிராமத்தை ஒட்டியிருக்கும் காட்டுப்பகுதியில், ஒரு மரத்தில் ஸ்ரீநிதியும், ஒரு இளைஞரும் ஒன்றாக சேர்ந்து தூக்கில் பிணமாக தொங்கியபடி கிடந்தனர்..

இதையடுத்து போலீசார், இருவரின் சடலத்தையும் கைப்பற்றி போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிறகு விசாரணயையும் மேற்கொண்டனர்..

அஜித்குமார்: ஸ்ரீநிதியுடன் தூக்கில் தொங்கியது அவரது காதலன் அஜித்குமார் என்று தெரியவந்துள்ளது.. அஜித்குமாருக்கு நைனான் என்ற இன்னொரு பெயரும் உண்டு.. 19 தான் ஆகிறது.. ஸ்ரீநிதியின் வீட்டு பக்கத்தில்தான் இவரும் வசித்து வந்துள்ளார்.. அப்போது இருவருமே காதலித்து வந்திருக்கிறார்கள்.

போட்டோக்கள்: ஆனால், இறக்கும்போது ஸ்ரீநிதி கழுத்தில் தாலி இருந்திருக்கிறது.. இவர்கள் தூக்கில் தொங்கிய மரத்திற்கு அடியில், ஒரு பெட்ஷீட்டும், அஜித்குமாரின் செல்போனும் கிடந்துள்ளது.. அந்த செல்போனில் கவர்போட்டோவாக ஸ்ரீநிதியுடன் எடுத்துக் கொண்ட போட்டோவை வைத்திருக்கிறார்.

பிறகு அந்த போட்டோவையே பதிவிட்டு, "மிஸ் யூ ஆல்... போயிட்டு வரேன்" என்று வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைத்திருக்கிறார். இவர்கள் 2 பேருமே ஒன்றாக சேர்ந்து எடுத்துக்கொண்ட போட்டோக்களும் அந்த செல்போனில் நிறைய இருந்திருக்கிறது.

தற்கொலை காரணம்: எதுக்காக இவர்கள் இருவரும் தற்கொலை செய்து கொண்டார்கள் என்று தெரியவில்லை. காதலுக்கு வீட்டில் எதிர்ப்பு இருந்ததா? அல்லது இறப்பதற்கு முன்பு, தாலி கட்டிக் கொண்டார்களா? கல்யாணம் செய்து கொண்டு இறந்துவிட வேண்டும் என்று நினைத்தார்களா? வேறு ஏதாவது காரணமா? என்ற விசாரணையை துவங்கினார்கள்.
அப்போதுதான், இவர்களது காதலுக்கு எதிர்ப்பு கிளம்பிய காரணத்தால் இவர்கள் தற்கொலை செய்து கொண்டதாக முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

15 வயசு, 19 வயசு... இந்த வயதிலேயே காதல் - ஏமாற்றம் - கல்யாணம் - தற்கொலை என்று மொத்தமாக வாழ்க்கையை முடித்து கொண்டுவிட்டது இந்த பரிதாப ஜோடி..!!

ஆனால், இவர்கள்தான் தங்களது "எதிர்கால உலகம்" என்று, இத்தனை நாளும் நம்பிக் கொண்டிருந்த இவர்களது பெற்றோர்களின் கதறல்? அது அதைவிட பரிதாபமாக உள்ளது..!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+