அவசர தரையிறக்கம்.. ஆனாலும் திருச்சி விமானம் 2 மணிநேரம் வட்டமடித்தது ஏன்? மாஜி IAF அதிகாரி விளக்கம்
திருச்சி: திருச்சியில் இருந்து சார்ஜா நோக்கி புறப்பட்ட விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக வானில் இரண்டரை மணிநேரம் வட்டமடித்து அவசரமாக திருச்சி விமான நிலையத்தில் தரையிறங்கியது. இந்த நிலையில் தான் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்ட பிறகும் கூட திருச்சி - சார்ஜா விமானம் உடனடியாக தரையிறங்காமல் வானில் இரண்டரை மணிநேரம் வட்டமடித்தது ஏன்? என்பது பற்றி ஓய்வு பெற்ற இந்திய விமானப்படை அதிகாரி மாதேஸ்வரன் விளக்கம் அளித்துள்ளார்.
திருச்சி விமான நிலையத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு தினமும் விமானங்கள் இயங்கி வருகின்றன. அந்த வகையில் இன்று மாலையில் இன்று மாலை 5.40 மணிக்கு 141 பயணிகள் மற்றும் விமான பணியாளர்களுடன் ஏர் இந்தியா ஏஎக்ஸ்பி 613 என்ற விமானம் சார்ஜா புறப்பட்டு சென்றது.

விமான நிலையத்தின் ஓடுதளத்தில் இருந்து மேலே பறந்த விமானத்தில் சிறிது நேரத்தல் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. அதாவது லேண்டிங் கியரில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால் விமானங்களின் சக்கரங்கள் உள்ளே செல்லவில்லை. ஹைட்ராலிக் பிரச்சனை ஏற்பட்டதால் சக்கரங்களை உள்ளே இழுக்க முடியாமல் விமானம் பறந்துள்ளது.
இதையறிந்த விமானி உடனடியாக கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து விமானத்தை அவசரமாக தரையிறக்க முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து அந்த விமானம் புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தமலை மற்றும் அதனை சுற்றிய பகுதிகளில் வட்டமடித்து கொண்டிருந்தது. சுமார் 2.30 மணிநேரம் வானில் வட்டமடித்த விமானம் எமர்ஜென்சி முறையில் பத்திரமாக திருச்சி விமான நிலையத்தில் இரவு 8.30 மணிக்கு பத்திரமாக தரையிறங்கியது. பயணிகள் பத்திரமாக உள்ளனர்.
இந்நிலையில் தான் தொழில்நுட்ப கோளாறு கண்டறியப்பட்ட பிறகும் வானில் இரண்டரை மணிநேரம் விமானம் வட்டமடித்ததன் பின்னண பற்றி ஓய்வு பெற்ற இந்திய விமானப்படை அதிகாரி விளக்கமளித்துள்ளார். இதுபற்றி முன்னாள் விமானப்படை அதிகாரி மாதேஸ்வரன் கூறுகையில், ‛‛விமானம் ரன்வேயில் இருந்து மேலே எழும்பிய பிறகு விமானத்தின் அடிப்பகுதியில் இருக்கும் சக்கரம் விமானத்துக்கு செல்லும். அதன்பிறகு விமானம் என்பது அதற்கான பாதையில் பயணிக்க தொடங்கும். திருச்சி - சார்ஜா விமான பயணம் என்பது நான்கரை மணிநேர பயணத்துக்கானது. இந்த வேளையில் தான் விமானத்தில் இருந்த சக்கரங்கள் அப்படியே நின்றுள்ளன. இதனை பைலட் கவனித்துள்ளார்.
இப்படியான சூழலில் பைலட்டால் சார்ஜா வரை பயணிக்க முடியாது. திருச்சிக்கு உடனடியாக விமானத்தை தரையிறக்க வேண்டும். அது தான் விமானத்துக்கும், விமான பயணிகளுக்கும் பாதுகாப்பானது. விமானம் ஏன் இரண்டு மணிநேரத்துக்கு மேலாக வானில் வட்டமடித்தது ஏன்? என்பதன் பின்னணியில் காரணம் உள்ளது. அதாவது திருச்சியில் இருந்து சார்ஜாவுக்கு அப்போது தான் விமானம் புறப்பட்டுள்ளது. இதனால் விமானத்தில் அதிகளவில் எரிபொருள் என்பது இருந்திருக்கும்.
பொதுவாக சாதாரணமாக லேண்டிங் என்றால் அப்படியே விமானத்தால் தரையில் இறங்க முடியும். ஆனால் அவசர லேண்டிங் எனும்போது விமானத்தில் உள்ள எரிபொருளை உடனடியாக குறைப்பது அவசியம். இதனால் தான் விமானம் எரிபொருளை செலவழிக்க வானில் இரண்டரை மணிநேரம் வட்டமடித்து எரிபொருளை செலவழித்துள்ளது. அவசர தரையிறக்கத்தின்போது பின்பற்றப்படும் பொதுவான வழிமுறை தான் இது. இதில் சொல்ல வேறு ஒன்றும் இல்லை'' என்றார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications