திருச்சி ரயில் நிலையத்தில் என்ன நடந்தது? ஒரே வீடியோ தான்.. அதிகாரிகளை ஆடிப்போக வைத்த இளம் பெண்கள்
திருச்சி: மாதவன் நடித்த ஜே.ஜே. திரைப்படத்தில் நடிகை ரீமாசென் 'மே மாதம் 98-ல் மேஜர் ஆனேனே’ என்று ரயிலில் இறங்கி ஆடுவாரே, அதே காட்சியை ரீகிரியேட் செய்து ரயில் நிலையத்தில் இளம்பெண்கள் நடனமாடி ரீல்ஸ் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ சமூக ஊடங்களில் வேகமாக பரவியது. இது திருச்சியில் நடந்தது என்று அதிகாரிகளுக்கு இப்போது தெரிய வந்தது.
நடிகர் மாதவன் நடிப்பில் சரியாக 21 வருடங்களுக்கு முன்பு, அதாவது 2003ம் ஆண்டில் வெளியான திரைப்படம் ஜே.ஜே.. இந்த திரைப்படத்தில் ரயில் நிலையத்தில் வைத்து ஒரு பாட்டு வரும். அந்தபாட்டு 90ஸ் கிட்ஸ் மற்றும் 80ஸ் கிட்ஸ் மத்தியில் அப்போது ஏகபிரபலம்.

நடிகை ரீமாசென் 'மே மாதம் 98-ல் மேஜர் ஆனேனே' என்ற பாடலுக்கு நடனமாடி இருப்பார். அந்த பாடல் விசாகப்பட்டினம் ரயில் நிலையத்தில் ( இருப்பது போல்) காட்சிப்படுத்தப்பட்டு இருக்கும். அந்த பாடலில் ரீமா சன்னுடன் இளம் பெண்கள் சேர்ந்து நடனம் ஆடியிருப்பார்கள். பெண் வயதுக்கு வந்த பின்னர் சந்திக்கும் பிரச்சனைகளை சொல்லி ரீமா சென் பாடுவதாக அந்த பாடல் இருக்கும்.
மே மாதம் 98ல் பாடல் வெளியான சமயங்களில் எல்லாம், ரீல்ஸ், பேஸ்புக் என எதுவும் இல்லை.. சமூக வலைதளங்களே இல்லை.. அந்த பாடல் இன்றைய 2கே கிட்ஸ்கள் பலருக்கும் பிடிக்கும். அதை ரீகிரியேட் செய்து வீடியோ எல்லாம் போடுகிறார்கள். இன்ஸ்டாவை திறந்தாலே பாடல்களை ரீல்ஸ் ஆக எடுத்துபோடுவதாகவே உள்ளது. இன்றைய 2கே கிட்ஸ் பிடித்த பாடல்களை பல்வேறு வடிவங்களில் கொண்டாடி தீர்க்கிறார்கள்.. அப்பபடித்தான் கொண்டாடியுள்ளார்கள் மூன்று இளம் பெண்கள்.
அண்மையில் 3 இளம்பெண்கள் ஜீன்ஸ் மற்றும் கருப்பு பனியன் அணிந்தபடி ரயில் நிற்பது போன்ற பின்னணியில் அதே பாடலுக்கு நடனமாடி அமர்களப்படுத்தியுள்ளனர். அந்த பெண்கள் நடனமாடும் இடம் திருச்சி கோட்டை ரயில் நிலையம் என்று தற்போது தெரியவந்துள்ளது.
தற்போது சமூக வலைதளத்தில் இளம்பெண்களின் ரீல்ஸ் வீடியோ பலராலும் ரசிக்கப்படும் நிலையில், ஒரு கட்டத்தில் திருச்சி ரயில்வே அதிகாரிகளின் கவனத்திற்கு அந்த வீடியோ வந்துள்ளது. இதை பார்த்து அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். யாரிடமும் அனுமதி பெறாமல் வீடியா எடுத்து வெளியிட்டது எப்படி என்று விசாரணை நடந்து வருகிறது.
பொதுவாக தமிழகத்தில் அரசு கட்டிடம் மற்றும் காவல் நிலையம், ரயில் நிலையம், பேருந்து நிலையம், விமான நிலையம் போன்ற பொது இடங்களில் தனிப்பட்ட முறையில் வீடியோ மற்றும் புகைப்படம் எடுக்க முறைப்படி அதிகாரிகளிடம் அனுமதி பெற வேண்டும். குறிப்பாக ரயில் நிலையம், விமான நிலையம், பஸ் ஸ்டாண்டுகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை அனுமதி பெற வேண்டும். ஆனால் இந்த இளம்பெண்கள் எந்தவித முன் அனுமதியும் இன்றி திருச்சி கோட்டை ரயில் நிலையத்தில் நடனமாடி ரீல்ஸ் வீடியோ எடுத்து வெளியிட்டு இருப்பது ரயில்வே வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
திருவள்ளூர் மக்களுக்கு தெற்கு ரயில்வே குட்நியூஸ்.. புதிதாக 6 எக்ஸ்பிரஸ் ரயில்கள் நின்று செல்லும் -
திருச்சி மேடையில் அதை பேசியிருக்கனும்.. முதல்வர் விஜய்யின் உரை ஏமாற்றம்! ஆதங்கப்பட்ட அன்புமணி -
கிளாம்பாக்கத்தில் ஒரே கல்லில் இரண்டு மாங்காய்.. முதல்வர் விஜய்க்கு பொதுமக்கள் வைத்த கோரிக்கை -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications