அசையாமல் உட்கார்ந்திருந்த இளைஞர்.. 5 வருடம் கழித்து சொந்த ஊர் பயணம்.. நடுவானில் நடந்த ஷாக்
நடுவானில் மாரடைப்பால் திருச்சி இளைஞர் உயிரிழந்துள்ளார்
திருச்சி: மலேசியாவிற்கு வேலைக்கு சென்று ஊர் திரும்பிய திருச்சி இளைஞர், நடுவானிலேயே உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி வருகிறது.
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் நீர்ப்பழனி அருகே உள்ள கிராமம் நரியப்பட்டி.. இங்கு வசித்து வரும் ஆறுமுகம் என்பவரின் மகன் வேல்முருகன்.. 36 வயதாகிறது.
கடந்த 2017-ல் இவருக்கு நிஷாராணி என்பவருடன் திருமணம் நடந்தது.. ஆனால், திருமணமான, 2 மாதத்திலேயே மலேசியாவில் வேலை கிடைத்துள்ளது.

உடல்நலம்
மணப்பாறையை சேர்ந்த ரவி மற்றும் அவரது மகன் ரவிராஜ் ஆகியோர் மலேசியாவில் சொந்தமாக சலூன் கடை வைத்துள்ளனர்.. அந்த கடையில்தான் வேல்முருகன் வேலைக்கு சென்றார்.. 5 வருடங்கள் அங்கு சலூனில் வேலை பார்த்து வந்துள்ளார்.. இந்நிலையில், கடந்த சில மாதங்களாகவே வேல்முருகனுக்கு அடிக்கடி உடல்நலம் பாதிக்கப்பட்டு வந்துள்ளது..

திருச்சி
அதேசமயம், வேலைக்கு சென்ற இடத்தில் ஒப்பந்த காலமும் முடிந்துள்ளது.. அப்போது ஓனர் ரவி என்பவர் இறந்துவிடவும், அவரது மகன் ரவிராஜ்தான் அந்த கடையை எடுத்து நடத்தி உள்ளார்.. அந்த ஊரில் சலூன் கடையில் வேறு ஆட்கள் கிடைக்க மாட்டார்கள் என்பதால், வேல்முருகனை சொந்த ஊருக்கும் அனுப்பாமல், அதே கடையில் தொடர்ந்து வேலை பார்க்க வைத்ததாகவும் கூறப்படுகிறது.. இதனால் உடல்நிலை மேலும் பாதித்துள்ளது..

விமான நிலையம்
வீட்டுக்கு விஷயத்தை சொல்லவும், குடும்பத்தினர் பதறி போய் அவரை உடனே ஊர் திரும்ப சொல்லி உள்ளனர்.. அதன்படிதான் இன்று அதிகாலை, 4 மணிக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் மலேசியாவில் இருந்து திருச்சிக்கு புறப்பட்டுள்ளார். விமானம் திருச்சி வந்தடைந்ததும் மற்ற பயணிகள் எல்லாம் இறங்கிவிட்டனர்.. ஆனால், வேல்முருகன் மட்டும் இருக்கையில் உட்கார்ந்த நிலையிலேயே கிடந்துள்ளார்... அசைவின்றி ஒரே இடத்தில் உட்கார்ந்திருந்ததால், விமான நிலைய ஊழியர்கள் சந்கேமடைந்து, விமான நிலைய மருத்துவர்களை அழைத்து வந்துள்ளனர்..

குடும்பம்
அவர்கள் வேல்முருகனை பரிசோதித்துவிட்டு, உயிரிழந்ததையும் உறுதி செய்தனர். நடுவானில் வரும்போது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு உயிர் இழந்துவிட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.குடும்பத்தை பார்த்து 4 வருடங்கள் ஆகின்ற நிலையில், ஆசை ஆசையாக ஊருக்கு கிளம்பி வந்துள்ளார் வேல்முருகன்.. திருமணம் முடிந்த 2 மாதங்களிலேயே வெளிநாடு சென்றுவிட்ட நிலையில், இளம்மனைவியும் ஆவலுடன் காத்திருந்தார்..

கண்ணீர்
அதனால் குடும்பமே, திருச்சி விமான நிலையத்துக்கு நேரில் சென்று, வேல்முருகனை அழைத்து வருவதாக திட்டமிட்டிருந்தனர்.. ஆனால் நடுவானிலேயே உயிரிழந்த செய்தியை கேட்டதுமே அத்தனை பேரும் அலறி கதறினர். இறுதியில் உயிரற்று கிடந்த வேல்முருகனின் சடலத்தை பார்த்து குடும்பத்தினர் தேம்பி அழுதது காண்போரை கலங்க செய்தது.. 5 வருடமாக குடும்பத்தை பார்க்கவில்லை, இன்னும் 2 நாளில் வந்து எல்லாரையும் பார்த்துவிடுவேன் என்று வேல்முருகன் போனில் சொல்லி கொண்டே இருந்தாராம்.

கதறல்
இந்த சம்பவம் குறித்து வேல்முருகன் உறவினர்கள் கொடுத்த புகாரின் பேரில், விமான நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.. அதுமட்டுமல்ல, வேலைக்கு அழைத்து சென்றவர்கள், உழைப்பை மட்டும் இப்படி உறிஞ்சிக் கொண்டு, உடம்பு சரியில்லாதவருக்கு சிகிச்சைகூட தராமல் இருந்துள்ளனர் என்றும் குற்றம்சாட்டியுள்ளனர்.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே!












Click it and Unblock the Notifications