முள் காட்டில் வைத்து 2 பேர்.. ரத்தப் பெருக்கு வந்ததால்.. பயந்து ஓடி விட்டனர்.. பதற வைத்த பலாத்காரம்
திருச்சி மார்க்கெட் பகுதியில் இளம்பெண்ணை நாசம் செய்த 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்
திருச்சி: "முள்காட்டில் என்னை 2 பேரும் சீரழித்தார்கள்.. ரத்தம் அதிகமாக வந்தது.. அதை பார்த்ததும் பயந்து ஓடிட்டாங்க" என்று பாதிக்கப்பட்ட இளம்பெண் 2 கொடூரர்கள் குறித்து போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
திருச்சி காந்தி மார்க்கெட் அருகே உள்ள விசுவாச நகரில் ஒரு பெட்ரோல் பங்கு இருக்கிறது.. இந்த பங்குக்கு எதிரே முள்காடு ஒன்று உள்ளது.
இது பார்க்கவே ரொம்ப அடர்த்தியான காடுபோல இருக்கும்.. இங்கு சரக்கு ஆட்டோக்கள் போன்றவை நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும்... காடு பகுதி என்பதாலும், அங்கு லைட் வசதிகளும் இல்லாததாலும் ராத்திரி 7 மணி ஆகிவிட்டாலே கும்மிருட்டாக இருக்கும்... ஆள் நடமாட்டமும் இருக்காது.

சோர்வு
இந்த நிலையில் நேற்றிரவு 11 மணிக்கு ஒரு பெண் அந்த பகுதிக்கு வந்தார்.. வயது 25 இருக்கும்.. பார்க்கவே ரொம்ப சோர்வாக இருந்தார்.. அங்கிருந்த ஒரு செராமிக்கடை அருகில் தட்டு தடுமாறி வந்து உட்கார்ந்தார்.. அப்போது அங்கே வந்த வாட்ச்மேன் அந்த பெண்ணிடம் என்ன ஏதென்று விசாரித்தார்.

காந்தி மார்க்கெட்
அப்போது அந்தப்பெண் தன்னை 2 இளைஞர்கள் இங்கே கடத்தி கொண்டு வந்து பலாத்காரம் செய்ததாகவும் இதில் ரத்தப்போக்கு அதிகமாக ஏற்பட்டுள்ளதால், மயக்கமாக இருப்பதாகவும் சொன்னார்.. இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அந்த வாட்ச்மேன் உடனடயாக காந்தி மார்க்கெட் போலீசாருக்கு தகவல் தந்தார்.. போலீசாரும் விரைந்து வந்து, அந்தப் பெண்ணை மீட்டு 108 ஆம்பு லன்ஸ் மூலம் திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அந்த இளம்பெண்ணுக்கு சிகிச்சை தரப்பட்டு வருகிறது.

ஆட்டோ
முதல்கட்ட சிகிச்சைக்கு பிறகு போலீசார் அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினர்.. பெயர் லிடியா, திருச்சி ஜங்ஷனில் பிளாட்பாரத்தில் நேற்றிரவு 10 மணிக்கு வந்து நின்றிருக்கிறார்.. அங்கு 2 இளைஞர்கள் சரக்கு ஆட்டோவில் பெண்ணை வலுக்கட்டாயமாக ஏற்றி, முட்காட்டு பகுதிக்கு அழைத்து வந்துள்ளனர். அந்த ஆட்டோவிலேயே வைத்து அவரை 2 பேரும் சீரழித்துள்ளனர்.. அப்போதுதான் ரத்தப்போக்கு அதிகமாக வந்துள்ளது.. அதை பார்த்து பயந்துபோன 2 இளைஞர்களும் பதறி அடித்து கொண்டு ஓடிவிட்டனராம்.

விசாரணை
அவர்கள் யார் என்று தெரியவில்லை.. ஆனால் அவர்களின் அடையாளத்தை லிடியா போலீசாரிடம் சொல்லவும், தேடும் பணி நடக்கிறது. மேலும் மார்க்கெட் பகுதியில் உள்ள சிசிடிவி கேமிராயை ஆய்வு செய்தால், ஆட்டோவில் லிடியாவை கடத்தி வருவதும் பதிவாகி உள்ளது.. இந்த சம்பவம் திருச்சி மக்களை உறைய வைத்துள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications