திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

முதலாளி மீது ஆத்திரம்.. 3 வயது குழந்தை கொடூர கொலை.. பெண்ணுக்கு இரட்டை ஆயுள்

சிறுவன் கொலை வழக்கில் இளம்பெண்ணுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

Google Oneindia Tamil News

Recommended Video

    குழந்தையை கொன்ற பெண்ணுக்கு இரட்டை ஆயுள் தண்டனை- வீடியோ

    திருச்சி: மூன்றரை வயது சிறுவனை கொஞ்சுவது போல் மொட்டை மாடிக்கு தூக்கி சென்று, துப்பட்டாவால் கழுத்தை நெரித்தும், முகம், மார்பு, ஆணுறுப்பில் கத்தியால் கிழித்தும் கொலை செய்த இளம்பெண்ணுக்கு திருச்சி கோர்ட் ஆயுள் தண்டனை வழங்கி உள்ளது.

    திருச்சி பாலக்கரை துரைசாமிபுரத்தை சேர்ந்தவர் சிவக்குமார். இவருடைய மனைவி லெட்சுமிபிரபா. இவர்களுக்கு ஷிரிஸ் என்ற மூன்றரை வயது மகன் இருந்தான்.

    சிவக்குமார் துரைசாமிபுரத்தில் செல்போன் ரீசார்ஜ் கடை நடத்தி வந்தார். கடந்த 2014-ம் ஆண்டு அந்த கடையில் ரீசார்ஜ் செய்ய வந்த அதேபகுதியை சேர்ந்த ரோஸ்லின் பாக்கியராணி என்ற பெண் சிவக்குமாருக்கு அறிமுகமானார். அவருக்கு வயது 25.

    பணத்தை திருடினார்

    பணத்தை திருடினார்

    அதன்பிறகு இருவரும் நட்பாக பழகி வந்தனர். அதன் அடிப்படையில் சிவகுமார் தனது செல்போன் கடையில் அவரை வேலைக்கு சேர்த்தார். ஒருநாள் செல்போன் கடையின் கல்லாபெட்டியில் இருந்து ரோஸ்லின் பாக்கியராணி பணத்தை திருடிவிட்டார். இந்த விஷயத்தை கேள்விப்பட்டு, சிவக்குமார் அவரை வேலையை விட்டு நிறுத்திவிட்டார்.

    மொட்டை மாடி

    மொட்டை மாடி

    இதனால் ஆத்திரம் அடைந்த ரோஸ்லின் சிவக்குமாரின் மகன் ஷிரிஸை கொலை செய்ய திட்டமிட்டார். அதன்படி கடந்த 2016-ம் ஆண்டு ஜூலை 30-ந் தேதி மதியம் 12.30 மணி அளவில் ஷிரிஸை கீழப்புதூர் பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டு மொட்டை மாடிக்கு கொஞ்சுவது போல் தூக்கி சென்றார்.

     கழுத்தை நெரித்தார்

    கழுத்தை நெரித்தார்

    அங்கு ஷிரிஸை துப்பட்டாவால் கழுத்தை நெரித்தும், சிறிய கத்தியால் முகம், மார்பு மற்றும் ஆணுறுப்பை கிழித்தும் கொலை செய்தார். பின்னர் சிறுவனின் உடலை சிவக்குமார் வீட்டுக்கு கொண்டு வந்து, தூங்குவதாக கூறி வீட்டில் படுக்க வைத்துவிட்டு சென்று விட்டார்.

    ரோஸ்லின் பாக்கியராணி

    ரோஸ்லின் பாக்கியராணி

    சிறிதுநேரத்தில் தனது மகன் இறந்து கிடந்ததை கண்ட லெட்சுமிபிரபா அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து பாலக்கரை போலீசிலும் புகார் அளித்தார். அதன்பேரில் பாலக்கரை போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, ரோஸ்லின் பாக்கியராணியை கைது செய்தனர். இந்த வழக்கு திருச்சி மாவட்ட முதன்மை அமர்வு கோர்ட்டில் நடைபெற்று வந்தது.

    இரட்டை ஆயுள்

    இரட்டை ஆயுள்

    இந்நிலையில் இதற்கான தீர்ப்பினை நீதிபதி குமரகுரு வழங்கினார். அதில், குற்றம் சாட்டப்பட்ட ரோஸ்லின் பாக்கியராணிக்கு 2 பிரிவுகளுக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், ரூ.4 ஆயிரம் அபராதமும் வழங்கப்படுவதாக அறிவித்தார். மேலும், தண்டனையை ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் உத்தரவிட்டார்.

    English summary
    The women who killed the child has a double life sentence in Trichy
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X